Monday, June 23, 2014

TIRUTHURAIPUNDI BRANCH CONFERENCE A GRAND SUCCESS

திருத்துறை பூண்டிஅஞ்சல் மூன்று   கிளையின் 
19 ஆவது  மாநாடு  

திருத்துறைபூண்டி   அஞ்சல் மூன்று கிளையின் 19 ஆவது மாநாடு  கடந்த 22.06.2014 அன்று மாலை சுமாரி 04.00 மணியளவில்  திருத்துறைபூண்டி தலைமை அஞ்சலக வளாகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.  சம்மேளனக் கொடியை  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . ஏற்றி வைக்க,  மறைந்த தோழர். R .T.  நினைவரங்கத்தில் அஞ்சல் மூன்று கிளையின் தலைவர் தோழர். A .J .அப்பண்டராஜ்  தலைமையில் மாநாடு இனிதே துவங்கியது . ஈராண்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு   சமர்ப்பிக்கப் பட்ட பிறகு  நடப்பு ஈராண்டுகளுக்கான  புதிய நிர்வாகிகள் தேர்தல்  நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்தலை மாநிலச் செயலர் தோழர். J .R . நடத்தி வைத்தார்.  கீழ்க்காணும் நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

தலைவர் : தோழர். S . நாகலிங்கம் , P .A ., திருத்துறைபூண்டி  HO 
செயலர் : தோழர். P . அன்பழகன்,  SPM , திருத்துறைபூண்டி  பஜார்.
நிதிச் செயலர் : தோழர். L . சுப்ரமணியன், P .A . , திருத்துறைபூண்டி HO .

இதற்குப் பின்னர்  நடைபெற்ற பொது அரங்கு நிகழ்வில்  மாநிலச் செயலர் தோழர். J .R .,அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். R . மோகன் , அஞ்சல் மூன்று  முன்னாள் பட்டுக்கோட்டை கோட்டச் செயலர்கள் தோழர். P.L.R., தோழர். சேகர் ,  அஞ்சல் நான்கு கிளைச் செயலர் தோழர். S . வைரவமுர்த்தி, NFPE  GDS  கிளைச் செயலர் தோழர். K . துரையப்பன் , RMS  மூன்றின் மாநில அமைப்புச் செயலர் தோழர். V . தர்மதாஸ்   உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். 

இறுதியாக மாநிலச் செயலர்  தனது உரையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்துப் பேசியதுடன் , மாநிலச் சங்கத்தின் செயல்பாடுகள் ,  மத்திய மண்டல நிர்வாகத்திடம் பெற்ற உத்திரவுகளான , எழுத்தர் காலியிடங்களில்  50% வெளியாட்களை OUTSOURCING  முறையில் பணி  புரிய பெற்ற உத்திரவு, கவுண்டர்களில் BUSINESS  HOURS  நீட்டித்ததை  முன்பு போல இருக்குமாறு குறைத்து பெறப்பட்ட  உத்திரவு ஆகியவை குறித்து  தெரிவித்தார்.  பட்டுக் கோட்டை கோட்டத்தில் இவை அமல்படுத்தப்பட  கோட்ட அதிகாரியிடம்  PMG, CR  அவர்கள் இட்ட உத்திரவை அளித்து  இந்த பிரச்சினையை விவாதிக்குமாறு கோட்டச் செயலரை  வேண்டினார். 

காலக் கெடு  முடிந்த கணினி மற்றும் இதர PERIPHERALS  மாற்றுவதற்கான SCRAPPING  COMMITTEE மத்திய மண்டலத்தில் அமைக்கப் பட்டு  CONDEMNATION  செய்திட  அறிக்கை அளிக்கப் பட்டுள்ளது குறித்த விபரங்களை  தெரிவித்தார்.  மேலும் சுழல் மாற்றல் உத்திரவு வழங்குதலில் மாநிலச் சங்கத்தின்  தலையீட்டின் பேரில்  பெரும்பான்மையான  பேரின் (13) கோரிக்கைகள்  நிறைவேற்றப் பட்டதை சுட்டிக் காட்டினார்.  பாதிக்கப் பட்ட ஒரு பெண் ஊழியர்  பிரச்சினையும் நிச்சயம் தீர்த்து வைக்கப்படும் என்பதை தெரிவித்தார்.  இது போல TEMPORARY  SUSPENSION  OF  QUARTERS  உத்திரவு இடப்படாமல்  HRA  பிடிக்கப் பட்ட தோழரின் பிரச்சினையும் CPMG  இடம்  எடுத்துச் செல்லப் பட்டு தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார். இறுதியாக  புதிய நிதிச் செயலர் தோழர் L . சுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.