Friday, September 28, 2012

INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF

தென் மண்டல இயக்குனர்  திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின்  தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு ! 

 ஊழியர்கள்  தங்களது EB BILL  ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி  புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால்  ' IT WILL BE VIEWED SERIOUSLY'  என்றும்  அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு ! 

இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை  ஒவ்வொரு ஊழியரும்  தனது  ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை  அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம்   வாங்க வேண்டும்  . இல்லையென்றால்   உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !. 

பிரிதொரு நாள் ,  அஞ்சலகத்தில்   எல்லோரும் ' CHOTTU KOOL'  கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !

மற்றொரு நாள்  வேறு ஏதேனும்  'டுபாக்கூர் '  பொருளை  ஏஜென்சியில் எடுத்து  அதனையும் வாங்க வேண்டும் என்பார்.  இதற்கெல்லாம்  உன் சம்பளத்தில் ஏற்கனவே  ECS  இல் பிடித்தாயிற்று . உனக்கு இந்த மாதம் சம்பளமில்லை என்பார் . இவையெல்லாம் சரியா ?

எதை வாங்க வேண்டும் . எதை வாங்க வேண்டாம் . எங்கு கட்ட வேண்டும் . எங்கு கட்ட வேண்டாம் . என்றெல்லாம் தீர்மானிக்க தனி மனிதனுக்கு முழு உரிமை உள்ளது !  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகக் கூறுகிறது . அவரவர்களுக்கு உணர்வும் உள்ளது. இலாக்கா மீது பற்றும் உள்ளது. அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். 

இலாக்கா நடத்தை விதிகளிலோ ,   இலாக்கா  சேவை விதிகளிலோ,  பணி  நியமன விதிகளிலோ , அடிப்படை விதிகளிலோ  இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்றோ, இல்லை எனில் தண்டனை  என்றோ எங்கும் இல்லை. 

இந்த விதிகளையெல்லாம் மீறி , தானே புதிதாக  விதி வகுக்க  இந்த அதிகாரிக்கு அதிகாரம் யார் தந்தது ? அரசாங்கமா ?  இலாக்காவா ? அல்ல ! அல்ல !

இவருக்கு முன்னோடியாக  அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் , மதுரை அவர்கள் , கழிப்பறை கழுவ வில்லை என்றால் தண்டனை கொடுப்பேன் என்று  வெட்ட வெளிச்சமாக , பட்டவர்த்தனமாக  பல ஊழியருக்கு எழுத்து மூலம்  உத்திரவு கொடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ! நாமும் பிரசுரித்துள்ளோம் !

இதன் தாக்கமே  இது !  இது சரியா என்று  உயர் அதிகாரிக்கு NFPE-FNPO  அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக  கூட்டுக் கடிதம் அளித்துள்ளோம் ! சரி செய்யப்படும் என்று எண்ணுகிறோம் ! கடிதத்தின் நகலை  கீழே பார்க்க ! அனைத்து ஊழியருக்கும் இதனை  தெரிவிக்க !




TN CIRCLE JCA OF NFPE AND FNPO DECLARED STRIKE ON 11.10.2012 AGAINST THE ATROCITIES OF THE DIRECTOR, PTC, MADURAI

கோட்ட/ கிளைச் செயலர்களே !

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , அதே நேரத்தில்   நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு  நடைபெற உள்ள 11.10.2012 JCA  வின் வேலை நிறுத்தத்தினை  அனைத்து பகுதி தோழர்களின்  முழு ஒத்துழைப்பை பெற்று வெற்றிகரமாக  நடத்த வேண்டியது  நம் ஒவ்வொருவரின்  கடமை என்பதை மறந்து விடாதீர்கள்  ! 

இது போன்ற கொடுமைகள்  இனி எங்கும் நடைபெறக் கூடாதென்றால் , அப்படி நீங்கள் விரும்பினால் , இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி  வேலை நிறுத்தத்தினை நூற்றுக்கு நூறு சதம்  வெற்றிகரமாக ஆக்கவேண்டுவதே உங்கள் முன்  உள்ள தலையாய கடமை ஆகும். 

எப்போதும்  போல  , பிறகு பார்த்துக் கொள்ளலாம்  என்று கடைசி நாள் வரை அலட்சியம் காட்டினால்  நிச்சயம் நாம் வெற்றி பெற முடியாது . உங்களைக் காப்பாற்ற உங்கள் பலம் தான்  முக்கியம் . உங்கள் செயல் தான் முக்கியம் .இன்றிலிருந்தே  உடன்  பணி  தொடங்குங்கள் !  

நம் தன்  மானம்  காக்கப் பட,  சுயமரியாதை மீட்கப் பட,  ஊழியர்களை அடிமைகளாக நடத்தும்  காட்டுமிராண்டி  அதிகார வர்க்கத்தில் இருந்து  மீண்டு புத்துயிர் பெற  இதுவே  நேரம் ! நம் போராட்டம் ...... உழைக்கும்  வர்க்கத்தின் மானம் காக்கும் போராட்டம் ஆகும் !

4.10.2012 மாலை திருச்சி தலைமை அஞ்சலகத்தில்  நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்தக்   கூட்டத்திற்கும் 

5.10.2012 மாலை மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த  ஆயத்தக் கூட்டத்திற்கும் 

6.10.2012 மாலை  கோவை  தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும் 

10.10.2012 அன்று  மாலை CPMG அலுவலக வாயிலில் நடைபெறும்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும் 

முழு ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள NFPE - FNPO  உறுப்புச் சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள்/மாநிலச் சங்க நிர்வாகிகள் /மண்டலச் செயலர்கள்  கூட்டுப் பொறுப்பாக JCA  அமைத்து செய்திடக்  கோருகிறோம் .

அந்தந்த மண்டலங்களில் உள்ள  கோட்டங்களில் இருந்து  பெருவாரியான அளவில்  ஊழியர்களைக் கலந்து கொள்ளச் செய்வது  அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்களின் பொறுப்பு ஆகும் . அந்த நாளில் விடுப்பு எடுத்து  அதற்கான தீவிர முயற்சியை செய்திட வேண்டுகிறோம். இன்று இல்லையேல்  என்றும் இல்லை !

வெற்றி நமதே !  வெற்றி நமதே ! என்று போர்ப்பரணி  பாடி வாருங்கள் !

இதற்கான நோட்டீஸ் ஒவ்வொரு கோட்ட/கிளைச் செயலருக்கும்  இன்று அனுப்பப் பட்டுள்ளது ! அதன் நகல் கீழே பார்க்கவும்.


Orders issued for 72% DA w.e.f 1st July’ 12


Thursday, September 27, 2012

தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு PTC, DIRECTOR ன் எழுத்து பூர்வமான கடிதமே ஆதாரம் !

'சிரமதானம்' என்ற பெயரில் , மண் வெட்டுதல், புல்  பிடுங்குதல், களை  வெட்டுதல் , தோட்ட வேலை செய்யச் சொல்லுதல், கழிப்பறை கழுவச் சொல்லுதல்  என்ற கொடுமைகளா ?

இதற்கு மகாத்மா காந்தியடிகளை உதாரணம் காட்டுவதா ? 

தானே மனமுவந்து செய்வது  மனித நேயமிக்க சேவை !
அடுத்தவரை துன்புறுத்தி செய்யச் சொல்லுதல்  மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

அதுவும்  மருத்துவ சான்றிதழ் அளித்த பின்னும் விலக்களிக்காமல் அதில் ஏதாவது ஓட்டை இருக்குமா என்று  தேடித் பிடித்து  மேலும் துன்புறுத்துதல் என்ன  குணம் ?

அதற்கு தண்டனையும்  வழங்கச் சொல்லுதல் கொடூர எண்ணம் அல்லவா ?

மகாத்மா காந்தியடிகள்  கழிப்பறை கழுவியது சரியென்றால் அது எல்லோருக்கும்  பொருந்தும் தானே ?

அப்படியானால்  குமாரி. நிர்மலாதேவி அவர்கள்  தன்  கூற்றுக்கு முன்னுதராணமாக  தானே முன்  நின்று PTC  கழிவறைகளை தினம்  
கழுவுவாரா ? 

அடுத்தவருக்கு உதாரணமாகவும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்கும்  இது சிறந்த வழியாக  இருக்குமல்லவா ?

அப்படி செய்யாமல் அவர்  ' dignity'  பார்ப்பரானால்  அவரது கூற்றுப் படி அதுவும் தவறுதானே ?

உங்கள் சிந்தனைக்கே  விடுகிறோம் !




Tuesday, September 25, 2012

STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டமிது !
அநீதி களைய  ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே  பொங்கி  எழு !

வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம்  !தமிழகமெங்கும் வேலை நிறுத்தம் !

ஒன்று பட்ட வேலை நிறுத்தம் !
அநீதிக் கெதிராய் வேலை நிறுத்தம் !

அடக்குமுறைக்கெதிராய்  வேலை நிறுத்தம்  !
PTC  இயக்குனரின்  படுகொலைச் செயலுக்கு  எதிராய்  வேலை நிறுத்தம் !

படுகொலைக்கு துணை நின்ற  மதுரை  மண்டல 
அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம்  !
அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !

விடமாட்டோம் ! விடமாட்டோம் !
நீதிக் கூண்டில் நிறுத்தாமல்  நாங்கள்  இனி 
விடமாட்டோம் !

தயாராகு  தோழனே ! அக்டோபர் திங்கள்  11 இல் 
தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு 
தயாராகு தோழனே !

வெற்றி நமதே ! பொங்கி ஏழு !
வீணர்களை  விரட்டி அடி !


Monday, September 24, 2012

CABINET APPROVES 7% HIKE IN DEARNESS ALLOWANCE FOR CENTRAL GOVT. STAFF.



UNION CABINET MET TODAY EVENING HAS APPROVED A PROPOSAL TO HIKE ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 7% FOR CENTRAL STAFF AND CENTRAL PENSIONERS.

THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED A SEVEN PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JULY 2012.

THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 65% PER CENT OF BASIC EMOLUMENTS TO 72% PER CENT WITH EFFECT FROM 1.7.2012.

************************************
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் 
 கண் முன்னே தோன்றுவது சாத்தியமே !

காத்திருந்து  கள்வருக்கு  கை விலங்கு பூட்டிவிடும்  
கண்ணுக்கு தோன்றாத சத்தியமே !

போடும் பொய்த்திரையை  கிழித்துவிடும் காலம் !
தெரியும் அப்போது மெய்யான கோலம் !
************************************

செய்தி !

சென்னை உயர் நீதிமன்ற குற்றப் பிரிவு  அசல் வழக்கு எண் 21375/2012 மற்றும் M.P. எண் 1/2012 ன்  படி  சேலம் அஞ்சல்  கண்காணிப்பாளர் திருவாளர் . A. சுந்தரராஜன் அவர்கள் ஒரு ' ACCUSED' என்றுபோடப்பட்டுள்ளது ! (பார்க்க உயர் நீதிமன்ற ஆணை முதல் பக்கம்.)

அவர்  மதிப்புக்குரிய சேலம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் II  அவர்கள் முன்னிலையில் இரண்டு நபர் ஜாமீனுடன் ரூ. 10000/- ரொக்க ஜாமீனும்  அளித்து 'பெயில்' பெற்றுக் கொள்ள வேண்டியது( பார்க்க உயர் நீதி மன்ற ஆணை இரண்டாவது பக்கம் )

மேலும்  அவர் மொத்தம் நான்கு வாரங்களுக்கு  தினமும் காலை  10.00 மணிக்கு சேலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்  ஆஜராகி கையெழுத்து இடவேண்டும். ( பார்க்க உயர் நீதி மன்ற ஆணை இரண்டாவது பக்கம் )











FOR YOUR VIEW - PRIOR COMPLAINT BY CIRCLE UNION AND REPLY FROM CPMG, TN


No.P3/-2/MA                                                                                 Dt. 20.06.2012

To
Smt.Shanthi Nair, IPS,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Madam,

Sub: Harassment of  induction trainees and detention of more than 60 trainees beyond session  by the  Director ,PTC, Madurai – Reg.
Ref:  RJCM  meeting  discussions  dt. 24.08.2011 and  the recorded  minutes thereupon.
                                                             …..

It is very well discussed  in the RJCM meeting  mentioned above , about the  high handed activities of the Director , PTC, Madurai  and about  the   slavery treatment made by her against the trainees  in the  Central Govt. department, which is supposed to be  a model employer. 

 And it is replied  in the meeting  that  suitable  action is being taken .  Even we have raised about the   question paper model  practiced in the PTC, Madurai , against the  set right norms in the  Department for various  promotional examinations  as MCQ.  Even this was not corrected till time at  PTC, Madurai.

This matter was already reported to your kind notice , by our  All India Union  and by various sister unions  on several occasions either In writing  or in person and even in  periodical meetings,  about  the  variant activities  of the  Director, PTC, Madurai against the  trainees , and  even against the  Postmaster grade trainees.

Such type of humiliations and harassments are  still continuing  , even  increasing  day-by-day. The trainees  cannot  go on leave even  for any death / marriages of  their closest relatives  or  even  go out for  taking  any  emergent medical treatment, for the  simple reason that they have been   agreed for  employment in the  glorious  Central Govt. Department. They are  treated as slaves and ordered for impositions  hundreds of times,   the century old system which was practiced , and now  scrapped  even  at LKG level ,  treating as a mockery of educational system,  and  utter human rights violation.

Now to the  added row,  about 60 LGO induction trainees are detained ,  beyond session,  for the reason that they have secured marks in the  final  test as below 60%.  Even for   any UPSC/Staff Selection Commission  or even  at entry level or  promotional examination  the minimum required   marks for having a pass is only 40% -45% and they are recruited  as  P.A. only on this way.   The Department has scrapped even  the confirmation examination now.

Adding salt to the injury,   the Director , PTC  asked all the   detained trainees   to vacate the  Hostel and  ordered to attend as a day scholar and to have even the food  outside the premises.  We do not know whether such things will happen even in Uganda. Also we do not know, whether this Department is a model employer or a multi national company.

We ,  on behalf of all the working staff, bring  these matters  to your kind  personal notice again ,  with the hope  that , being  the head of the Circle , you would  definitely intervene  and  set right  things  at the immediate  and to save the  trainees  from the  hands of the  PTC administrator.

Expecting  kind  response and  a line in reply.

Thanking you Madam,

With regards,
 Sd/-
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

REPLY RECEIVED FROM THE CHIEF PMG, TAMILNADU.

அன்றே முறையான விசாரணை நடந்திருந்தால் இன்று இந்த உயிர்ப்பலி நடந்திருக்குமா ?
 இன்றாவது கண் திறக்கும்  என்று எண்ணுகிறோம் .

Sunday, September 23, 2012

FDI IN RETAIL TRADE ?


General Secretary’s Desk



Dear Comrades,

One Day Strike on 12.12.12

The Confederation of Central Government Employees and Workers has professed a clarion call of one day token strike on 12.12.12 on 15 Charter of Demands. The gist of the demands is furnished in a nutshell below for the notice of all. All Branches and Divisional Secretaries are requested to translate the same in their Regional languages and organize the workers for 100% participation in the proposed strike.

Charter of Demands and short notes

1.      Revision of wages w.e.f. 1.1.2011.
(i)           In all the Public sectors and Banks, the wage review is being carried out once in 5 years.
(ii)         The 5th CPC set the norms for the appointment of next pay commission that whenever DA crosses 50%, it shall be appointed. Based on the same principle, the next pay commission should have been appointed w.e.f 1.1.2011.  The silence in the 6th CPC report about the formation of the next CPC cannot be taken as a ruse to deny or delay the next CPC.
(iii)       The anomalies arisen after the 6th CPC due to the introduction of a grade pay system and the loss of significance in the existence of cadres, disparity in pay fixation between officers and Government servants etc. can be sorted out only in the next CPC.
(iv)        The retail prices of essential commodities eroded the value of real wages by 160% within 5 years after 1.1.2006, whereas the DA compensation had been just 51%. Due to inflation, the real value of the wages has gone down.
(v)          The 6th CPC while determining the minimum wage has suppressed the retail price in the market and just take 20% alone of the wholesale price whereas in the market it was more than 60% than the wholesale price. Thus the demand of the minimum wage has been defeated with that clever and cunning decision of 6th CPC.
(vi)        Though the National Anomaly Committee met 5 to 6 times, it has not settled any major issue. The Anomalies existing in MACP are unredressed.
(vii)      The Fourth CPC categorically stated that GDS ought to have been included within the preview of pay Commission. This has been denied resulting in more exploitation in their wages and service conditions.
The above are the justification for the demand seeking immediate appointment of Seventh CPC and  revise the wages from 1.1.2011.

2.      Merger of DA with Pay
(i)     The 5th CPC recommended that the DA must be merged with Pay and treated as Pay for computing all allowances when DA exceeds 50%. This was carried out before the appointment of 6th CPC.
(ii)   The DA merger will partially compensate the erosion of real wages as per the report of Gadgil Committee in the post 2nd CPC period.
(iii) The 3rd CPC has also recommended such merger.
The merger of DA shall be considered in the case of GDS also in the Department of Posts.

3.      Compassionate Appointments
(i)     Supreme Court has not given any direction to introduce 5% ceiling in compassionate appointments.
(ii)   Even though the Cabinet Secretary assured for reconsideration, no tangible action has been taken so far to delete the ceiling of 5%.
(iii) In Railways there is no such ceiling and this is very clear discrimination between the equals in the Government Service.
(iv)  In Department of Post the selected lists under RRR were scrapped and thereafter only the candidates who pleaded their cases up to the Supreme Court were offered the appointment and remaining approved candidates are left in the lurch.

Therefore we are demanding the directions should be issued to do away with the stipulation and compassionate appointments be provided in all deserving cases.

4.      Functioning of JCM
(i)        The National Council is as per the scheme to meet at once in 4 months. It meets after several years. The issues put forth should be disposed in the same meeting or in the next meeting where as a number of issues are kept pending for indefinite periods.
(ii)      Barring one or two items, most of the anomalies placed in the Anomaly Committee meeting have not been considered and settled.
(iii)    In many Departments the Departmental Councils which are scheduled to be conducted once in four months have not been conducted years together.
Therefore, it is demanded that the periodicity of the National and Department Council meetings should be adhered and the forum should be ensured as an instrument to settle the demands of employees.

5.      Remove the Ban on Recruitment and creation of Posts.
(i)        The abolition of 2/3 vacancies which was in existence from 2001 to 2008 was applied only in the case of Group ‘C’ and Group ‘D’ and not even a single Group ‘B’ or Group ‘A’ was axed.
(ii)      The workforce in Group ‘C’ and Group ‘D’ has been drastically axed to the extent of 20% during the last decade ending with 2010.
(iii)    The blanket ban on creation of posts is in existence since 1983 and not even a single required post has been created without any matching Saving Scheme (example the case of System Administrators)
(iv)     We had a time tested and scientific system of assessment of workload with periodical revisions. This become obsolete and not even a single required post is created so far.
(v)       6th CPC communicated that it is not desirable to continue the ban and recommended to empower the respective departments to create need based posts for its effective functioning. This has neither has been accepted nor rejected so far.

6.      Downsizing, outsourcing and contractisation etc.
(i)     Many Departments had resorted to outsourcing of the functions. Some Departments virtually closed down. For example in passport office the entire work of processing and issue of passport is outsourced to TATA. Similarly the issue of PAN card and related works have also been entrusted to TATA consultancy. The IT returns submitted through E-mail are now entirely being processed by Infosys. Most of the work in Railways had been outsourced and on a contract basis and the staff strength has been depleted.
(ii)   In Postal, the Government desires to introduce PPP (Public private partnership) and providing a level playing field to the couriers by amending post office Act. The Monopoly of the Department of Posts is proposed to be unbundled with the clear direction for its corporation and further privatization. The fate met by the BSNL is not too far away to the Postal.
(iii) Outsourcing of department functions increased enormously over the years. The Quality of work suffered.
Therefore, it is necessary that the present scheme of outsourcing, privatization, PPP introductions and contractarisation shall be abandoned.

7.      Stop price rise and strengthen PDS.
(i)     The pursuance of the new economic policies and the consequent withdrawal of the universal public distribution system had been per se the reason for unbearable inflation.
(ii)   Government employees even of the lowest stage are precluded from the PDS as their meager wage is considered above ‘Poverty Line’.
Therefore, it is essential to bring back the PDS and control the price rise of essential food items.

8.      (a) Regularization of daily rated workers
(i)        Almost 25% of the workforce are casual workers in Government departments and they are not having any permanent and perennial nature of work.
(ii)      Resultantly Quality of work suffers besides exploitation of labour.
(iii)    The Govt should frame a scheme for regularization and they shall be paid equal pay for equal work.
(b) Absorption of GDS as regular Postal employees.
(i)      Till 1963, the GDS were called as ‘Extraneous Departmental Agents’ and treated as Govt. Servants.
(ii)     The Supreme Court declared in 1977 that they are holders of civil posts.
(iii)    Justice Talwar recommended that they should be treated as Govt. Servants and all facilities to be extended at par with regular employees.
(iv)         However Natarajamurthy had reversed all the above and now equated them with Anganwadi and Contingent employees. Many facilities were taken back.
(v)           There is ample justification to departmentalise the GDS. The General Secretary AIPEU GDS (NFPE) has submitted a detailed Memorandum to Hon’ble Minister exploring the ways & means for their departmentalization.
              Notwithstanding the demand of departmentalization, we demand immediate settlement of TRCA, Bonus and recruitment rules to PM/Group ‘D’related issues which were discussed in strike charters with the Department of Posts.

9.      Introduction of PLB and removal of ceiling limit
(i)     Adhoc bonus of 30 days should be converted as PLB in all Government departments.
(ii)   The ceiling of 60 days in PLB in Postal to be removed.
(iii) Bonus Act has no relevancy in PLB. There should be no ceiling of Rs. 3500/- for PLB.
(iv)  The injustice met out of the GDS in the ceiling should be modified.
      Therefore Bonus ceiling shall be computed on the basis of the actual emoluments of an employee receives.

10.    Revision of OTA and Night Duty Allowance.
(i)        OTA is now being paid as per the rates fixed by 4th CPC. There is no revision. Even the hourly rate of outsourced persons in much higher than the OTA granted to the Government Employees which is now at the rate of Rs. 15.85 per Hours.
(ii)      Non performance of OTA is being misused and some officials are being proceeded under disciplinary rules.
(iii)    The Board of Arbitration award enhancing the quantum of OTA has not been implemented.

11.    Arbitration awards
(i)   There are 17 arbitration awards in favour of employees. The financial implication is very meager. Even the staff side agreed to implement some of them with prospective effect.
(ii)  The Government is choosing to place the awards in the Parliament for rejection.

12.    Vacate all Trade Union Victimization
(i)     There is heavy vicimisation in IA & AD Department. More than 12000 employees are charge sheeted under Rule 14 & 16. Mass casual leave demanding vacation of victimisation ended with heavy casualities. Permission to hold meetings in the office are denied.
(ii)   The Trade union facilities are totally denied in many Government Organisation.

13.  Right to strike
(i)     ILO convention provides all trade union rights. However the decisions have not been made statutory by the Government.
(ii)   Govt. Employees continue to be denied the right of collective bargaining.
(iii) Supreme Court observed that Govt. Employees do not have any legal, fundamental or moral right to resort to strike action.
It is therefore urged that necessary legislation affording the right to strike to Govt. employees be made in the Parliament.

14.    Career Progression (5 Promotions)
(i)         All India Group ‘A’ Services provided 5 or more promotions without appearing any examination.
(ii)       In respect of Group ‘C’ no cadre review has been carried out.
(iii)     More promotional posts have not been identified because there is no functional justification; whereas no such yardstick is applied in case of officers.
Therefore, it is demanded to have five hierarchical promotions in one official carrier.

15.    Scrap the New Pension Scheme
(i)         The defined pension scheme was replaced by the contributory pension scheme from 1.1.2004 and the funds be managed by mutual fund operators in the share market.
(ii)       The new pension scheme is going to make social security uncertain.
(iii)     It is discriminatory as the scheme has been compulsorily imposed.
(iv)      Such schemes become failure in many countries like Chile, U.K and even the USA.
(v)        The contributory pension does not have the guarantee of Minimum 50% pension and there is no protection to the family due to denial of family pension.
     Therefore we demand to withdraw the PFRDA Bill and ensure the statutory defined pension scheme.

Dear Comrades,
If you go through the charter of demands, you can very well understand that all the demands are important and well related to all Govt. Employees. When the Govt. do not want to hear the voice of the C. G. employees, the Confederation which led the glorious struggles in 1957, 1960 and 1968 shall not shut its eyes and remain as mute spectators.

You may think that when other organizations like Railways & Defence are silent, what is the need for confederation to struggle alone. We cannot set aside the fact that in the freedom struggle, only 6 to 7 % of the people were actively involved. We cannot mention the same reason as a ruse and remain uncared of the C. G. Employees demands. We are having the responsibilities.

Further in the Postal over 20 years, we are conducting all the struggles under JCA except the strikes notified by all trade unions and mass platform organizations. This time FNPO, despite they understand the issues and the need for the strike, could not participate in the strike action. We should be clear in our minds that does not prevent us to proceed on our agenda. That is the main distinction and our specialty in focussing the common demands.

Resultantly in some areas, the cadres of their unions may join with us considering the justification of the demands; In some places, they may put hurdles and blockades to sabotage the strike; Some may act at the behest of the officers to scuttle our actions. Yes, we shall overcome all these.

It is clear that unless the seventh pay commission is constituted, there is no question of withdrawal or deferment of Strike by the Confederation. The strike will take place on 12.12.12. We shall mobilize all the workers and rally with us.

Our Branch/Divisional Secretaries shall observe the following programme of action to organize the comrades.
(i)           Hold Gate Meetings in nearby offices.
(ii)         Meeting every member and explain the demands and its importance.
(iii)       Hold executive meetings and allot all office bearers according to their capacity to organize in the workspots.
(iv)        Issue circulars in local language about the importance of the demands.
(v)          Issue phamplets and distribute to the public about our proposed strike action on 12.12.2012 seeking their cooperation; mainly focusing the wrong policies of the Department which were printed in Bhartiya Post earlier.
(vi)        Hold Jathas and invite representatives from other wings of the Confederation so that it will its own importance.
(vii)      Explain our position and convince the employees about the non participation of other unions under JCA.
(viii)    Each & Every GDS shall be contacted in person by the office bearers and inform them that this is the first time the Departmentalisation of GDS is placed in the charter of Demands of the Confederation.
(ix)        Intimate the position & requirements to the Circle unions & CHQ. The Circle unions will organise tour programmes of its office bearers and organize more meeting.
(x)          The Circle Secretaries should ensure the prompt conduct of meetings as notified by the NFPE & Confederation. If they want to change the dates for the meetings, they can contact the office bearers allotted to their circles; but there should be no failure in holding meetings in any circle.

Organize! Organise!! Organise!!!
Make the strike call of confederation after 1968 an historic success.

Let us meet in the next
Comradely yours,
(R. Sivannarayana)
Offg. General Secretary

Saturday, September 22, 2012

பரவட்டும் ! போராட்டத் தீ பரவட்டும் !

JCA
NFPE-FNPO  அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப் 
போராட்டக் குழு தமிழ் மாநிலம்

JCA வின்  அனைத்து மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று CPMG  அலுவலக வாயிலில் சிறப்பாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்ணாவிரத்தில் நேரிடையாக கலந்து கொண்டார்கள் . 100  க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதற்கு ஆதரவாக  போராட்ட களத்தில் பங்கேற்றனர். தொடங்கும் போதும்  , முடிக்கும் போதும் எழுச்சி மிக்க கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  தோழர். ஜெயகுமாரின்  தற்கொலைக்கு உரிய  உயர்மட்ட விசாரணை வேண்டியும் ,  மதுரை PTC  இயக்குனர் மீது உரிய  இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை வேண்டியும் , அவரை உடனே பணி  மாற்றம் செய்திட வேண்டியும்  JCA  சார்பில் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்து இடப்பட்ட மகஜர் CPMG  அவர்களுக்கும் NFPE/FNPO மா பொதுச் செயலர்களுக்கும் அளிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தை FNPO  மாபொதுச்  செயலர் தோழர். தியாகராஜன்  முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார். NFPE  சம்மேளனத்தின்  உதவி மா பொதுச் செயலர் தோழர். ரகுபதி அவர்களும்  கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். 

உடன் நடவடிக்கை வேண்டியும் உரிய விசாரணை வேண்டியும் NFPE மற்றும்  FNPO சம்மேளனங்களின் சார்பில் இலாக்கா முதல்வருக்கு  நேரிடையாக  மா பொதுச் செயலர்கள் மூலம் கடிதம் அளித்து விவாதிக்கப் பட்டுள்ளது. 

தோழர் ஜெயக்குமார் அவர்களின் இறுதிச் சடங்கில் அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொண்டு அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டோம். 

அவரது மனைவிக்கும் , அவரது குடும்பத்தாருக்கும் நிச்சயம் இந்த  துயருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் வரை தொழிற் சங்கங்கள்  ஓயாது  என்ற உறுதியை நாம் அளித்தோம்.

இந்தப் போராட்ட நடவடிக்கையில்  பல்வேறு கோட்டங்களில் JCA  மற்றும் NFPE  சார்பில்  தலைமட்ட  சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களும் கருப்பு சின்னம் அணிதலும் நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு செய்திகள் அனுப்பப் பட்டுள்ளது. அதன் விபரம் :-

1 ) 20.09.12 மாலை அம்பத்தூர் தலைமை அஞ்சலக வாயிலில்  சுமார் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

2) காஞ்சிபுரம் கோட்டத்தில் 21.09.12 அன்று  கறுப்புச் சின்னம் அணிந்து  மௌன அஞ்சலி.

3) மதுரை கோட்டத்தில் JCA  சார்பில்21.09.12 அன்று மாலை   சுமார் 400 பேர் கலந்துகொண்ட  எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.

4) திருநெல்வேலி கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 80 பேர் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.

5) சேலம் மேற்கு கோட்டத்தில் 21.09.12 அன்று மாலை சுமார் 60 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம். 

6) தூத்துக்குடி கோட்டத்தில் 21.09.12 அன்று   15 பெண் ஊழியர் உட்பட சுமார் 75 பேர் கலந்து கொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

7) சேலம் கிழக்கு கோட்டத்தில் 21.09.12 அன்று  சுமார் 100 ஊழியர் கலந்து கொண்ட  சிறப்பான கண்டன ஆர்ப்பாட்டம்.

8) சங்கரன்கோவிலில் 21.09.12 அன்று சிறிய கிளையில்   மிகப் பெரிய அளவில் சுமார் 120 பேர் கலந்துகொண்ட  கண்டன ஆர்ப்பாட்டம் . 

9) கன்னியாகுமரி கோட்டத்தில்21.09.12 அன்று  சுமார் 50 பெண் ஊழியர் உட்பட 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.   

10) காரைக்குடி கோட்டத்தில் 22.09.12 அன்று சுமார் 100 ஊழியர்கள் கலந்துகொண்ட JCA கண்டன ஆர்ப்பாட்டம். 

11) பட்டுக்கோட்டை கோட்டத்தில் 22.09.12 அன்று சுமார் 100 பேர் கலந்துகொண்ட  JCA கண்டன ஆர்ப்பாட்டம். 

12) கோவை கோட்டத்தில் 22.09.12 அன்று சுமார் 40 பெண் ஊழியர் உட்பட 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம். 

தாங்களாகவே முன்வந்து கொடூரமான  அதிகார வர்க்கத்திற்கு எதிராக  குரல் எழுப்பி  தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய  அனைத்து கோட்ட கிளைச் சங்கங்களுக்கும் , அதன்  உறுப்பினர்களுக்கும் , சென்னையில்  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  , அதன் உறுப்பினர்களுக்கும் JCA   சார்பிலும்  தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சார்பிலும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றி .

பின்னர் நேற்று இரவு  நடைபெற்ற JCA கூட்டத்தின்  அடுத்த கட்ட முடிவுகள் :-

1. தமிழக முதலமைச்சருக்கும் , தமிழக காவல் துறை DGP  அவர்களுக்கும், மனித உரிமை தலைமை ஆணையருக்கும்   தோழர்  ஜெயக்குமார் அவர்களின் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை கோரி , உயர்மட்ட விசாரணை கோரி  அனைத்து மாநிலச் செயலர்கள் கையெழுத்திட்டு  நேரிடையாக புகார் மனு அளிப்பது .

2.  தென் மண்டலத்தில்  இயக்குனர் தலைமையில் 26.09.12 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியை  அனைத்து மாநிலச் சங்கங்களும் புறக்கணிப்பது .

3. மதுரை பயிற்சி மைய இயக்குனர்  மீதும்  அவருக்கு உறுதுணையாக இருந்து , தன்னுடைய நிர்வாக எல்லையை மீறி  இந்த தற்கொலைக்கான காரண கர்த்தாவை  மறைத்து காப்பாற்ற  முயலும்  தென்மண்டல இயக்குனர் மீதும் உரிய உயர்மட்ட இலாக்கா விசாரணை  வேண்டியும் ,  பயிற்சி மைய இயக்குனரை  விசாரணை முடியும் வரை  தற்காலிக பணிநீக்கம் செய்திட வேண்டியும்  அல்லது  உடன்  மாநிலத்திற்கு வெளியே  இடமாற்றம் செய்திட வேண்டியும்  தமிழகம் தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது .

4. தொழிற் தகராறு சட்டத்தின் அடிப்படையில் இதற்கான   உரிய 15 நாட்களுக்கான   வேலைநிறுத்த  அறிவிப்பை எதிர்வரும் 25.09.2012 அன்று   CPMG  அவர்களுக்கும் , தொழிலாளர் நல தலைமை ஆணையருக்கும் , மாநில  மற்றும்  மத்திய  மனித உரிமை தலைமை ஆணையருக்கும்  அனைத்து மாநிலச் செயலர்களும்  கையெழுத்திட்டு சட்டப்படி  முறையாக அளிப்பது .

5. வேலை நிறுத்த  போராட்டத்தை முழு வீச்சில்  இயக்கப் படுத்திட  மண்டல ரீதியாக  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களையும்  அழைத்து  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்துவது .

4.10.12 -  திருச்சி 
5.10.12 -  மதுரை 
6.10.12 -  கோவை 
10.10.12- சென்னை 
_________________________________________________________________
6. 11.10.2012 அன்று அனைத்து பகுதியினரையும் உள்ளடக்கி   தமிழகம் முழுமைக்கும்  ஒன்றுபட்ட  முழுமையான வேலை நிறுத்தம்  நடத்துவது.
______________________________________________________

போராட்ட களத்திற்கு  சங்க வேறுபாடின்றி  எந்தப் பாகுபாடும் இன்றி  அனைத்து ஊழியர்களையும்  ஒன்று திரட்டிட  அனைத்து பொறுப்பாளர்களையும்  அனைத்து  ஊழியர்களையும்  பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் !  இந்தக் கொடுமை இனியும்  தமிழகம்  அனுமதிக்கக் கூடாது ! இன்றில்லையேல்  இனி என்றும் இல்லை  என்பதை ஒவ்வொரு ஊழியரும்  தங்கள் என்ணத்தில் , சிந்தனையில் , செயலாக்கத்தில்  கொண்டிட வேண்டும்

நமது  எதிர்கால வாழ்வு  காக்கப் பட !

நமது தன்மானம்  காக்கப் பட !

நமது சுயமரியாதை காக்கப் பட !

அடிமைச் சங்கிலி  அடித்து நொறுக்கப் பட !

கொடூரங்களுக்கும் , வக்கிரங்களுக்கும்  முடிவு கண்டிட !

உயிர்ப் பலிக்கு  உரிய நீதி  கிடைத்திட !

கிளர்ந்தெழுவோம்  தோழர்களே !  பரவட்டும் ! பரவட்டும் ! போராட்டத் தீ  தமிழகமெங்கும் வெகு வேகமாகப்  பரவட்டும் !