Showing posts with label court case. Show all posts
Showing posts with label court case. Show all posts

Tuesday, July 14, 2020

RTP case update

அன்பார்ந்த தோழர்களே RTP  குறித்த வழக்கு நமது மத்திய சங்கத்தால் Principle CAT New delhi  யில் தொடரப்பட்டு அது தொடர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். இதனை நமது மத்திய சங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நான் நம்முடைய பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டபோது அவர் இந்த விஷயத்தில் தன்னுடைய தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாகவும்  மேலும் அடுத்த  hearing ல் தானே முன்னெடுத்து  செல்ல  இருப்பதாகவும் கூறினார்.  எனவே வழக்கு ஏற்கனவே Principle CAT New Delhi ல் நிலுவையில் உள்ள சூழலில் புதியதாக ஒரு வழக்கு சென்னை CAT ல்  தொடர  அவசியம் இருக்காது. மேலும் புதிய வழக்கு  கால தாமதத்தை அதிகரிக்கச் செய்யும் .இதுகுறித்து நமது வழக்கறிஞரை கலந்தாலோசித்தோம்   அவரும் சற்று பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.  Principle CAT New Delhi ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடுத்த hearing ல் வரவில்லை என்றால் நாம் மேற்கொண்டு புதியதாக ஒரு வழக்கினை சென்னை CAT ல் தொடரலாம். மேலும் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் இதில் வாய்ப்பு இல்லை. இந்த விஷயத்தினை நாம் முழுமையாக உணர்ந்து உள்ளதோடு  உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இதில் உள்ள அத்தனை சாத்தியக்கூறுகளையும் நாம் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த விஷயத்தில் குழப்பம் தரும் சில செய்திகளுக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது மட்டுமே ஒரு சிலரின் வேலை. ஊழியர் நலன் குறித்து நாம் எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றோம். நமது தலைவர் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலாளராக இருந்த போதுதான் டெல்லி  Principal CAT ல்  இந்த வழக்கானது தொடுக்கப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது மறுக்க முடியாது. மேலும் நம்முடைய NFPE சங்கம்  மட்டுமே தபால்காரர் களுக்கான உயர் ஊதியத்திற்காக வழக்கினை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றி பெற்று அனைத்து தோழர்களும்  லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை வாங்குவதற்கு காரணகர்த்தாவாக செயலாற்றி உள்ளது. அதே போன்று RTP  வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது .ஆகவே அனைவரும் இந்தத் தருணத்தில் சற்று அமைதி காக்க வேண்டும் .மேலும் மாநில சங்கம் கூடிய விரைவில் அதனுடைய முடிவினை இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து பின்னர் வெளியிடும். எனவே மீண்டும் அமைதி காக்க வேண்டுகிறேன்.


A.வீரமணி 
மாநிலச் செயலாளர்.             
அஞ்சல் மூன்று

Friday, July 10, 2020

Discrepancies in LSG list

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

தற்போது மாநில நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள LSG பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள பிரச்னைகள் குறித்து  மேலே உள்ள தமிழ் மாநில அஞ்சல் 
மூன்று சங்கத்தின் கடிதத்தினைப் பார்க்கவும். இது குறித்து மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எல்லா பொதுப் பிரச்னைகள் குறித்தும் இந்தக் கடிதத்தில் கொண்டு வந்துள்ளோம். 

இன்று காலை நமது மாநிலச் செயலர் DPS HQ அவர்களை நேரில்  சந்தித்து இந்தக் கடிதத்தை அவரிடம் அளித்து விரிவாகப் பேசினார்.

DPS HQ அவர்களும் இதில் குறிக்கப் பட்டுள்ள அனைத்து பிரச்னைகள்  மீதும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு ஆவன நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும்,

 5.12 18 இலாக்கா உத்திரவு கணக்கில் கொள்ளப்படும் என்றும்,

 தனிப்பட்ட முறையில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 
நிச்சயம் இந்தப் பிரச்னைகளின் மீது உரிய முன்னேற்றம் , மாற்றம் கிடைக்கும்
என நம்புகிறோம்.  

திறந்த மனதுடன் பிரச்னைகளின் தீர்வுக்கு உறுதியளித்த DPS HQ அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தனித்தனியே அவர்கள் பாதிப்பு குறித்து சரி செய்திட விண்ணப்ப மனுக்களை CPMG அவர்களுக்கு விடுதலின்றி அனுப்பி வைத்திடக் கேட்டுக் கொள்கிறோம். காலதாமதம் வேண்டாம். 

தோழமையுள்ள , 

A. வீரமணி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று , 
தமிழ்  மாநிலம்.

Promotion to grade of HSG-I (NFG)