அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
தற்போது மாநில நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள LSG பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள பிரச்னைகள் குறித்து மேலே உள்ள தமிழ் மாநில அஞ்சல்
மூன்று சங்கத்தின் கடிதத்தினைப் பார்க்கவும். இது குறித்து மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எல்லா பொதுப் பிரச்னைகள் குறித்தும் இந்தக் கடிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இன்று காலை நமது மாநிலச் செயலர் DPS HQ அவர்களை நேரில் சந்தித்து இந்தக் கடிதத்தை அவரிடம் அளித்து விரிவாகப் பேசினார்.
DPS HQ அவர்களும் இதில் குறிக்கப் பட்டுள்ள அனைத்து பிரச்னைகள் மீதும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு ஆவன நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும்,
5.12 18 இலாக்கா உத்திரவு கணக்கில் கொள்ளப்படும் என்றும்,
தனிப்பட்ட முறையில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
நிச்சயம் இந்தப் பிரச்னைகளின் மீது உரிய முன்னேற்றம் , மாற்றம் கிடைக்கும்
என நம்புகிறோம்.
திறந்த மனதுடன் பிரச்னைகளின் தீர்வுக்கு உறுதியளித்த DPS HQ அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தனித்தனியே அவர்கள் பாதிப்பு குறித்து சரி செய்திட விண்ணப்ப மனுக்களை CPMG அவர்களுக்கு விடுதலின்றி அனுப்பி வைத்திடக் கேட்டுக் கொள்கிறோம். காலதாமதம் வேண்டாம்.
தோழமையுள்ள ,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.