Friday, July 17, 2020

Circle Union letter on considering PA vacancies arisen during the year 2019 due to unforeseen reasons



இன்று CPMG அவர்களை மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி அவர்கள் சந்தித்து
கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியல் மூலம் ஏற்பட்ட எழுத்தர் காலி யிடங்களை 2019 ஆம் ஆண்டில் எழுத்தர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள தபால்காரர்களுக்கு வழங்கவேண்டு மென 14.02.2020 அன்று அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுத்திருந்தோம் மீண்டும் மாநில சங்கத்தின் சார்பில் இன்று கடிதம் கொடுத்து பேசினோம்

இமாச்சல பிரதேசத்தில் 05.08.2019 முதல் 31.12.2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை Supplimentry LGO Results 2019 மூலம் 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப பட்டுள்ளதையும் மேலும் ஆந்திர மாநிலத்தில் 30.09.2019 முடிய உள்ள எதிர்பாராத எழுத்தர் காலியிடங்கள் 2019 ஆம் ஆண்டின் எழுத்தர் தேர்வின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி  

தமிழ் மாநிலத்திலும் 31.12 .2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை 2019 ஆம் ஆண்டின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு 2019ஆம் ஆண்டு தேர்வு எழுதிய தபால்காரர் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றோம்  கொரானா காலத்தில் தேர்வு நடத்தப்படுவதில் உள்ள சிரமங்களையும் , தேர்வு எழுதிய ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும்
எதிர்பார்த்த காலியிடங்களை காட்டிலும் எதிர்பாராத காலியிடங்கள் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியும் இமாச்சலபிரதேச மாநில நிர்வாகம் போல Supplimentry LGO Results 2019  வெளியிட CPMG அவர்களிடம் மாநிலச்செயலர் கோரினார்.  

இதன் மூலம் எழுத்தர் பகுதியில் உள்ள ஆள்பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும் எனவும் மாநிலச்செயலர் கூறினார் . CPMG அவர்களும் இது சம்பந்தமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

குரோனா பாதுகாப்பு பற்றியும் தபால்காரர் தோழர்கள் இறந்தது பற்றியும் அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர் K.சிவராமன் அவர்கள் இறந்தது பற்றியும் விசாரித்தார் வருத்தம் தெரிவித்தார் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கூறினார்   

 மனித நேயத்தோடும் அன்போடும் பேசிய CPMG அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்

தோழமையுள்ள,

A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று.