கண்ணீர் அஞ்சலி
முன்னாள் அகில இந்திய தலைவர் தோழர் சிவ நாராயணா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
திங்கட்கிழமை அன்று தலைவர் கேவியஸ் அவர்கள் அவரது இல்லத்தில் சென்று சந்தித்துவிட்டு வந்தார் பின்பு கடந்த புதன்கிழமை அன்று ஆந்திராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் சற்று முன் அவர் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி அறிந்து தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் மீளா துயரில் ஆழ்ந்துள்ளது நம் கோவை மாநில மாநாட்டிற்கு முன்பு ஒரு மாத காலமாக மாநிலச் சங்க அலுவலகத்தில் தங்கி மாநாட்டு பணியை செய்தார் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்திற்கும் தமிழக அஞ்சல் மூன்று நண்பர்களுக்கும் உடன்பிறவா சகோதரராக இருந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் ஆழ்ந்த வருத்தத்தையும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநில சங்கம் சார்பாக தெரிவிக்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
கனத்த இதயத்துடன்
A. வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் முன்று