Friday, March 31, 2017

WISHING A VERY HAPPY RETIREMENT !


இன்று (31.3.2016 )  அரசுப் பணி நிறைவு பெறும் நம் அன்புத் தோழரும் , கடந்த 25 ஆண்டு காலமாக  மாநிலத்திலேயே எங்கும் இல்லாத வகையில் ஊழியர்களால் பெரிதும் விரும்பப்பட்டு  தொடர்ந்து  திருவாரூர் அஞ்சல் மூன்றின் கிளைச் செயலராக இருந்தவருமான  

தோழர். K. ராமலிங்கம் அவர்கள்
(9488117177)

எல்லா நலமும் வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன் நீண்ட பெரு வாழ்வு காண தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்  தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

*********************************************************************************

அது போல, தொழிற் சங்க இயக்கத்திற்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட,  எந்த இயக்கத்திலும் தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளாமால் , இயக்கத்தின் ஆணி வேறாக இருந்து செயலாற்றிவரும் இன்று பணி நிறைவு பெறும் சென்னை  மத்திய கோட்ட அஞ்சல் நான்கின் தலைவர் 

தோழர்.  நாராயணன் அவர்கள் 
(8015751792)

தனது ஓய்வுக்காலத்தில் எல்லா நலமும் வளங்களும் பெற்று தனது குடும்பத்தினருடன் நீண்ட காலம் வாழ்ந்திட தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

                                                  


SUCCESS TO CIRCLE UNION'S CONTINUED EFFORTS AGAINST THE ATROCITIES OF SPOs., POLLACHI ! ATLAST WE WON THE BATTLE !

மாநிலச் சங்கத்தின் விடா முயற்சிக்கு வெற்றி !
கொட்டமடித்த அதிகாரி அதிரடி மாற்றம் !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
மாநிலச் சங்கத்தின் விடா முயற்சி காரணமாக, பொள்ளாச்சி கோட்டக் கண்காணிப்பாளர் திரு. சகாயராஜ் அவர்கள் மீது, அவரது ஒழுங்கீனங்கள் மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து நாம் அளித்த புகார் மனு மீது IPS அதிகாரி தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு அதன்மீதான விசாரணை அறிக்கையும் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது பலருக்கு, குறிப்பாக கோவை மண்டலத் தோழர்களுக்கு தெரியும்.

இந்த அறிக்கைமீது உடன் நடவடிக்கை வேண்டியும், மேலும் பல ஒழுங்கீனங்களை எடுத்துக் கூறியும் பொள்ளாச்சி கோட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, உடுமலை கிளைச் செயலர் தோழர். ராமசுப்பிரமணியன் மற்றும் கோவை கோட்டச் செயலர் தோழர். காந்தி , மண்டலச் செயலர்  தோழர். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று கடந்த 9.2.2017 அன்று மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி நாம் வலியுறுத்தினோம்.

அவர்களும் இந்த விசாரணை மீது மேலும் சில ஆவணங்களைப் பெற்று மேல் நடவடிக்கைக்கான தன்னுடைய உரிய பரிந்துரையுடன் CPMG அவர்களிடம் அனுப்புவதாக உறுதியளித்தார்.

அவ்வாறே அவர் அனுப்பிய பரிந்துரை மீது முதற்கட்ட நடவடிக்கையாக இன்று திரு. சகாயராஜ் அவர்கள் தல்லாகுளம் போஸ்ட் மாஸ்டராக உடனடி இடமாற்றம் செய்யப்பட உத்திரவிடப் பட்டார்.
ஆனால் அவர் Charge கொடுக்க மறுத்து, ஏற்கனவே கடந்த ஆண்டு, முந்தைய PMG  காலத்தில்   சென்றது போல , நீதிமன்றம் சென்று தடையாணை பெறுவேன் என்று கொக்கரித்தார்.

இதனால் கோபமுற்ற PMG அவர்கள், அவர் உடனடியாக RELIEVE  ஆகாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கூறியதால் வேறு வழியில்லாமல் இன்றைய மதியமே வெளியேற்றப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலை கீழாக நின்றவர் எவரும் தொடர்ந்து நின்றதாக 
சரித்திரம் கிடையாது.
வெகுஜன விரோதிகள், ஊழியர் விரோதிகள் தொடர்ந்து வென்றதாக சரித்திரமும் கிடையாது.
இது பல தான்தோன்றி அதிகாரிகளுக்கு 
நீதி புகட்டும் பாடமாகும்.

இந்த பிரச்னையில் சரியான விசாரணை மேற்கொண்டு நீதியை நிலை நாட்டிய மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களுக்கு மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள். உரிய நடவடிக்கை எடுத்து  உத்திரவு இட்ட  CPMG  அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநீதிக்கெதிராக, பாதிப்புகளைக்கண்டு பயம் கொள்ளாமல் தொடர்ந்து தொய்வின்றிப் போராடிய பொள்ளாச்சி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். அய்யாசாமி, கோட்டத் தலைவர தோழர். AGC, போஸ்ட்மாஸ்டர் தோழர்.ஜவகர் , உடுமலை செயலர் தோழர். ராமசுப்ரமணியன் உள்ளிட்ட  முன்னணி நிர்வாகிகளுக்கும் இதர தோழர்களுக்கும் நம் வீர வாழ்த்துக்கள் !

ஒரு சேலம் மேற்கு, ஒரு வேலூர், ஒரு ஈரோடு, ஒரு திண்டுக்கல், ஒரு அம்பத்தூர் வரிசையில் இன்று நம் பொள்ளாச்சி !

இடைவிடாது போராடிய தோழர்களை வாழ்த்துங்கள் தோழர்களே !

கைபேசி :-
பொள்ளாச்சி தோழர்.
அய்யாசாமி: 9843009345
உடுமலை தோழர். 
ராமசுப்ரமணியன்  : 9442190694

வாழ்த்துக்களுடன்...
NFPE அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம்

Probation and/or confirmation of Direct Recruit Postal Assistant/Sorting Assistant in Department of Posts-Qualifying test.

Central Government Employees Group Insurance Scheme 1980 - Tables of Benefits for the savings fund for the period from 01.01.2017 to 31.03.2017

Simplification of procedure for payment of Central Government Employees Group Insurance Scheme (CGEGIS) dues

Thursday, March 30, 2017

NOMINATION OF THE MEMBERS OF THE STAFF SIDE OF THE NATIONAL COUNCIL (JCM)

IMPORTANT ORDER - CLARIFICATION ON BENCH MARK FOR PROMOTION - DTE ORDER
D.A. ORDER RELEASED BY MINISTRY OF FINANCE BY THIS DAY (30.03.2017).

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

LETTER TO CABINET SECRETARY FROM SECRETARY, STAFF SIDE , NJCM ON NON SETTLEMENT OF 7TH CPC ISSUES.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை


EXAMINATION FROM LGOs FOR PROMOTION INTO PA/SA FROM POSTMEN/ MAIL GUARD AND MTS FOR DEPUTATION TO ARMY POSTAL SERVICES.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

தானியங்கு மாற்று உரை இல்லை.

Termination of Gr.A arrangements in TN Circle.

தானியங்கு மாற்று உரை இல்லை.

Transfer and Postings in Gr. A cadre in TN Circle....

தானியங்கு மாற்று உரை இல்லை.

CHQ ADDRESSED SECRETARY POSTS FOR DISBURSEMENT OF SALARY AND PENSION ON 1ST APRIL 2017 IN CASH

அன்புத் தோழர்களே !
ஏப்ரல் 1 ந் தேதி CBS இல் ‘NO TRANSACTION DAY’ யாக அறிவித்திருப்பதாலும், ஏப்ரல் 2 ந் தேதி ஞாயிற்றுக் கிழமையாதலாலும், ஏப்ரல் 3 ந் தேதி அன்றைக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை அஞ்சல் சேமிப்பு வங்கி அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தவேண்டும் என்று DIRECTOR (CBS) மின்னஞ்சல் வழி உத்திரவிட்டு அது CEPT மூலம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து, கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் ஊதியம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றை ஏப்ரல் 1 ந் தேதி பணப் பட்டுவாடாவாக செய்திட நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய CPMG அவர்களுக்கு கடிதம் நேற்றைய தினம் அளித்துள்ளோம். அதன் நகல் ஏற்கனவே WHATSAPP மற்றும் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.

நமது இந்தக் கோரிக்கை மீது உடன் மேல் நடவடிக்கை எடுத்திட, SENIOR A.O. அவர்களிடம் நம்முடைய கடிதம் CPMG அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும், இந்த பிரச்சினையில் DTE அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் நடவடிக்கை கோரி நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய பொதுச் செயலருக்கு கடிதம் அனுப்பி பேசினோம். அதன் மீது இன்று நம்முடைய பொதுச் செயலர் நடவடிக்கை கோரி இலாக்கா முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகல் கீழே காண்க.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

TN NFPE P3 CIRCLE UNION ADDRESSED CPMG,TN REQUESTING TO ISSUE ORDER FOR PAYMENT OF SALARY AND PAYMENT OF PENSION ON 1.4.2017 ITSELF

TN NFPE P3 CIRCLE UNION ADDRESSED CPMG,TN REQUESTING TO ISSUE ORDER FOR PAYMENT OF SALARY AND PAYMENT OF PENSION ON 1.4.2017 ITSELF THROUGH CASH INSTEAD OF CREDITING INTO PO SB/ BANK ACCOUNT, SINCE 1ST APRIL HAPPENS TO BE A NO TRANSACTION DAY IN FINACLE AND 2ND APRIL HAPPENS TO BE A SUNDAY.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

SUBJECTS PLACED BEFORE CPMG,TN FOR DISCUSSIONS DURING THE UPCOMING FOUR MONTHLY MEETING


எதிர் வரும் ஏப்ரல் திங்கள் 2017 இல் CPMG TN அவர்களுடன் நடைபெற உள்ள நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது நமது NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் விவாதிக்க வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை கீழே உள்ள கடிதத்தில் காணலாம்.
இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.


படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

TAMIL LEADING DAILY 'DINAKARAN' REPORTS ABOUT THE IRREGULARITIES IN POSTMAN EXAM OF TAMILNADU CIRCLE

தவறுகள் திருத்தப்படலாம் .....
ஊழல்கள் தண்டிக்கப்படலாம் .....
முறைகேடுகளின்  மொத்த உருவம் 
அஞ்சல் துறை தேர்வுகள் ...
தானியங்கு மாற்று உரை இல்லை.

'THALAPATHI' M.K. STALIN, OPPOSITION PARTY LEADER, TN LEGISLATIVE ASSEMBLY HAS TAKEN UP THE MATTER OF IRREGULARITIES IN POSTMAN EXAM WITH THE HON'BLE MINISTER FOR COMMUNICATIONS

தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவருமான தளபதி ஸ்டாலின் அவர்கள் மூலம் ,
நடைபெற்ற தபால்காரர் தேர்வின் முறைகேடுகள் குறித்து உரிய உயர் மட்ட விசாரணை கோரி,
தபால்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் நகலை கீழே காண்க.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

தானியங்கு மாற்று உரை இல்லை.

AFTER A LONG GAP ..... AGAIN IN OUR WEB SITE ...

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

பொங்கலுக்குப் பின்னர் நம்முடைய வலைத்தளத்தில் செய்திகள் வெளியிடப்படவில்லை என்று தற்போது பல தோழர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். நிறைய கோரிக்கைகள் வரத் துவங்கியுள்ளன.

செய்திகள் முதலில் போடமுடியாமல் போனது . அதற்குக் காரணம் நாம் துவங்கிய பொங்கல் விடுமுறை யுத்தம் ... அரசியல் கட்சிகளின் பிரச்சினையாக்கப்பட்டு ... தமிழர்களின் உரிமைப் பிரச்சினையாக்கப்பட்டு ... மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு.... அதன் தொடர்ச்சியாக எந்த நிர்வாகம் DOPT தான் இனி போடப்பட்ட உத்திரவை மாற்ற முடியும் என்றதோ, அதே நிர்வாகம் இங்கேயே உத்தரவை மாற்றி வெளியிட வேண்டிய  நிர்பந்தம் ,.. நெருக்கடி ஏற்பட்டது  .. அதில் இந்தப் பிரச்சினைக்கு நேரடியாக பொறுப்பாகாத ஒரு நல்லவரின் தலை உருண்டது. இதுதான்  'ஜல்லிக்கட்டு ' பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளி. 

இதனில்  தோன்றி... நீண்டது... ஜல்லிக்கட்டு போராட்டம்  நமக்குத் தெரிந்ததே ! ஆனால் அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமும் , முகநூல், WHATSAPP என்று  பிரச்சாரம் சூடு பறக்க , அரசுக்கு  உளவுத்துறை அறிக்கைகள் சென்று அதனால் நூற்றுக் கணக்கில் முகநூல் கணக்குகள், WHATSAPP குரூப்கள், வலைத்தளங்கள்  GOOGLE நிறுவனத்திற்கு புகார் அனுப்பப்பட்டு முடக்கப்பட்டன. 

இதில் சம்பந்தமே இல்லாத  நம்முடைய வலைத்தளமும் முடக்கப்பட்டது. இதன் காரணம் பொங்கல் விடுமுறை பிரச்சினையை நாம் எடுத்தது .... தமிழர் பிரச்சினையானதுதான். இந்த விஷயம் நமக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் GOOGLE நிறுவனத்திற்கு நம்முடைய நண்பர்கள் மூலம் தொடர்ந்து புகார் அளித்தபின்னர், இது தெரிய வந்தது. கடைசியில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குப் பின்னர் ஒரு மாதம் கடந்து  நம்முடைய வலைத்தளம் உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான்  புதுகை மாநிலச் செயற்குழு கூட்டத்தின் போது, மாநில மாநாட்டு வரவேற்புக் குழு  கணக்கு முடித்து மாநிலச் சங்கத்திற்கு செய்திகளை உடனுக்கு உடன்  WHATSAPP மூலம் அனுப்பும் பொருட்டு, வரவேற்பு குழு சார்பாக   4G  கைபேசியை  அளித்தனர் .எனவே  அது முதல் நம்முடைய அனைத்து தோழர்களுக்கும் WHATSAPP மூலம் தினம் தோறும் செய்திகள் , வேலை நிறுத்த பிரச்சாரங்கள், அரசு உத்திரவுகள், மாநிலச் சங்க , அகில இந்திய சங்க , சம்மேளன, மகா சம்மேளன  நடவடிக்கைகள் தெரிவிக்கத் துவங்கினோம். 

இன்று  தினம் பல்லாயிரம் தோழர்களுக்கு இந்த செய்திகள் வினாடிகளில் சென்று சேர்கிறது என்று  தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே  பெரும்பாலான தோழர்கள் , வலைத்தளங்களை  அலுவலக கணினிகளில் பார்க்க இயலவில்லை என்றும்  தனியே இன்டர்நெட் வசதி ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றும் , உயர் தொழில் நுட்பத்தில் WHATSAPP இல் செய்திகளை பகிர்ந்துகொண்டால்  உடனுக்குடன் தங்கள் கைபேசியிலேயே பார்த்துக் கொள்வோம் என்று கூறியதால், இதன் பின்னர் நாமும் வலைத்தளத்தை உபயோகப் படுத்துவது விடுத்து, முகநூல் , WHATSAPP களில் செய்திகள் பகிர துவங்கினோம். 

தற்போது மீண்டும் பல தோழர்கள் வலைத்தளமும் வேண்டும் என்று கேட்கத் துவங்கியுள்ளனர். எனவே  மீண்டும்  நம்முடைய  தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் செய்திகள் வெளியிட முடிவு செய்து இன்றுமுதல் பதிவுகள் அளிக்கத் துவங்கியுள்ளோம்.  

இது தவிர  WHATSAPP, FACE BOOK, EMAIL மூலமும் எப்போதும் போல செய்திகள்  தொடர்புகள் கொள்வோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மாநிலச் செயலர் முழுமையான அரசுப்பணியில் இருந்தாலும்,  வாரம் தோறும் மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில்  தொழிற் சங்க நிகழ்சிகளுக்கு சென்றாலும் ,  மண்டலம் தோறும் இரு மாதங்களுக்கு உண்டான பேட்டிகள் , நான்கு மாதப் பேட்டிகள் , RJCM மற்றும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய , சம்மேளன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்தாலும், அனைத்து சிரமங்களுக்கு இடையேயும், அரசுப்  பணிகளுக்கு இடையேயும்,  இனி எல்லா வித தொடர்புகள் மூலமும்  சங்கப் பணி தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன் 

மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.