Friday, March 29, 2013

COMMENTS ON CIRCLE UNION ACTION FOR WITHDRAWAL OF DUTY ORDERED ON HOLIDAYS


======================================================
Dear com. JR

Today a mile stone in the Kanchipuram Divisional Union Functioning because we have boycotted the due monthly meeting with SP, Kanchipuram in c/w opening of Post Offices including BOs for the 3 coming days including holidays and sundays.

Then we have bring it to the notice of the circle union and we got very good result. The PMG, DPS (HQ) every body came over phone to SP and there is no option to the SP other than to withdraw the opening of POs on the holidays.

A smart and vibrant action of the Circle Union has made it happened and we expect this kind of attitude from the coming days also.

I once again verymuch thank you , for your quick action in this case and also for the relase of MACP minutes.
Kudos to Circle Union.
Comradely Yours,
A.Kesavan,
Asst. Divisional Secretary,
Kanchipuram
======================================================
Thank you very much com. orders of directing Divl. office staff, CBS off  staff to attend office in 
Western Region cancelled by R.O.

Sanjeevi,
Divisional Secretary,
AIPEU GR.C
Salem West.
======================================================
CBS duty  ordered on Friday and Sunday stands cancelled.
Thanks to C.S.

D.Ebinazer Gandhi, 
Divisional Secretary,
AIPEU GR. C
Coimbatore .
======================================================

Thanks  all of you Comrades,

It is a team work. With all your kind co-operation and co-ordination
we can march unitedly to fight against  the anti-labour activities of the 
bureaucrats and to safeguard the  interest of the  common labour.

Fraternally yours
CIRCLE SECRETARY.
======================================================

COM.C.P. THILAGENDIRAN, ASST.FIN.SEC., TN CIRCLE UNION PASSED AWAY

"THE LIFE OF THE DEAD IS PLACED IN THE MEMORY OF THE LIVING."
                                                 = MARCUS TULIUS CICERO -ROMAN WRITER


நம் அன்புத் தோழர் , தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மாநில உதவி நிதிச் செயலர்  
தோழர் . C .P . திலகேந்திரன் அவர்கள்  
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக  இரண்டு மாதங்களாய்  நினைவு தவறி இருந்தார். இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப் பட்டும் பலனின்றி  இன்று அதிகாலை  உயிர் துறந்தார். 

அனைவரிடமும்  இனிமையாகப் பழகக் கூடிய ஒரு சிறந்த பண்பாளர் . 
ஓடிச் சென்று அனைவருக்கும் உதவக்கூடிய  சுறுசுறுப்பான செயல் வீரர். 

தொழிலாளர் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்த்து வைப்பதில் அதீத ஈடுபாடு காட்டக் கூடியவர் .பிரச்சினை தீரவில்லையெனில்  அது குறித்து அதிகம்  கவலை கொண்டு இருப்பார்.  இப்படி ஒரு பொது நோக்காளரை  நாம் இழந்து விட்டோம். குறிப்பாக தமிழக அஞ்சல் மூன்று சங்கம்  இழந்து விட்டது.  இது நமது இயக்கத்திற்கே  பேரிழப்பாகும். 

அவரது பிரிவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள்  மற்றும் குடும்பத்தாருக்கு நம் மாநிலச் சங்கத்தின் ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .  அவரது ஆன்மா  சாந்தியடைய  நமது இதய பூர்வமான வேண்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் தம் பணி  நம் நினைவில் என்றும்  நீங்காது இடம் பெற்றிருக்கும்.!

HOLIDAY/SUNDAY DUTY ORDERS WITHDRAWN

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 29.03.2013 மற்றும் 31.03.2013 ஆகிய  விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் , குறிப்பாக  காஞ்சிபுரம் கோட்டம்  மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் , ஊழியர்கள் முழுமையாகப் பணிக்கு வரவேண்டும் என்று தலைமட்ட அதிகாரிகளால் உத்திரவிடப்பட்டது. இது குறித்து காஞ்சி கோட்டத்தில் இருந்து முதல் புகார்  NFPE  மற்றும்  FNPO மாநிலச் செயலர்களுக்கு கிடைக்கப் பெற்றவுடன்  இது குறித்து CPMG  இடம் பேச மாலை 04.30 மணியளவில் அஞ்சல் மூன்றின் இரண்டு  மாநிலச் செயலர்களும்  சென்றோம். இதற்குள் கோவை மண்டலத்தின் பல பகுதிகளில் இருந்து இதே போல பல புகார்கள்  இருவருக்கும் வந்தன. CPMG  இல்லாத காரணத்தால் DPS  HQ  அவர்களிடம்  கடிதம் அளித்து விவாதித்தோம். அவர் உடன்  மாநில அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களை தொடர்பு கொண்டு  நேரிடையாக  இது குறித்து விசாரித்தார்.  அப்படி எந்த ஒரு உத்திரவும் CPMG  அலுவலகத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும்  அல்லது CCR  மற்றும் மேற்கு மண்டலத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும்  அளிக்கப் படவில்லை என்பதை உறுதி  செய்த அதே நேரம்  தல மட்டத்தில் அப்படி உத்திரவு இடப்பட்டிருந்தால் உடன் விலக்கிக்  கொள்ள  உரிய  உத்திரவு இடப்படும் என்பதை  தெரிவித்தார். அதன் படியே அடுத்த 10 ஆவது  நிமிடத்தில் கீழ் மட்டத்தில் இடப்பட்ட உத்திரவுகள் உடன் விலக்கிக் கொள்ளப் பட்டன. ஊழியர்கள் பிரச்சினைகளில் -  தேவைக் கேற்ப அவ்வப்போது CPMG  இடம்  எடுத்துச் சென்று  உடன் தீர்த்து வைத்திட முனைப்புடன் செயலாற்றும் அதிகாரியாக  நமது DPS  HQRS  அவர்கள் உள்ளார்கள் என்பதை நாம்  மனமாரப் பாராட்டுகிறோம். அவருக்கு நம்  நன்றி. 

'தடி எடுத்தவரெல்லாம் தண்டல் காரன்'  என்ற பழ மொழிக்கு இணங்க தமிழகத்தின் பல பகுதிகளில்  தான்தோன்றித்தனமாக  பல அதிகாரிகள் இது ஏதோ LIMITED  COMPANY  போல தற்போது  செயல் பட ஆரம்பித்துள்ளனர்  என்பது  இங்கு சுட்டிக் கட்ட வேண்டியுள்ளது.  

CPMG  அவர்களின் மாநில நிர்வாகத்திற்கு  அடிக்கடி இப்படி களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் , இலாக்கா விதிகளுக்கும்  , அடிப்படை சட்ட விதிகளுக்கும் மாறாக செயல் படும்  இப்படிப் பட்ட அதிகாரிகளை  இப்படியே  அனுமதித்துக் கொண்டிருக்க கூடாது  என்பதை மாநில நிர்வாகத்திற்கு வேண்டுகோளாக வைக்கிறோம். 

இப்படியே போனால் தினம் தினம் போராட்டம் , தினம் தினம் ஆர்ப்பாட்டம் என்று ஊழியர் சக்தி வீணடிக்கப் படுவது மட்டுமல்லாமல் , நிர்வாகத்தின்  நேரமும் வீணடிக்கப் பட்டு  தொழில் அமைதி கெட்டு ,    மாநில நிர்வாகத்தின் நற்பெயருக்கு  களங்கம் ஏற்படும் என்பதை  இந்த வலைத்தளத்தின் மூலம் சுட்டிக் காட்டுகிறோம்.  உரிய அதிகாரிகள்   CPMG  அவர்களின் பார்வைக்கு  இந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டுகிறோம்.

SHIFT SYSTEM INTRODUCED IN AIR COMPLEX-FGN POST STOPPED

CHENNAI FOREIGN POST  இன்  அங்கமான  CHENNAI AIR COMPLEX பகுதியில் தீடீரென்று  காலை 06.00 முதல் இரவு 09.00 வரை SHIFT  SYSTEM  அறிமுகப் படுத்தப் பட்டு உத்திரவிடப்பட்டது. இதுவரை இந்தியா முழுதும்  எந்தவொரு FOREIGN  POST அலுவலகத்திலும் இப்படி நடைமுறையில் இல்லை . ஒவ்வொரு மணிக்கும் ஆங்காங்கே தபால் பெறப் பட்டு உடனடியாக அயல் நாட்டு அஞ்சல் பிரித்து அனுப்பப் படும் என்று அதன் இயக்குனர் உத்திரவிட்டார். 

ஆனால் CUSTOMS  பகுதியில் எந்த ஒரு தபால் அளிக்கப் பட்டாலும் 48 மணி நேர COOLING PERIOD க்கு பிறகே அது CHECK செய்யப்பட்டு அனுப்பப் படும் என்று விதி இருக்கும் போது உடனுக்கு உடன் தபால் கையாளப் பட எந்தவித தேவையும் இல்லை . 

இந்தப் பிரச்சினை வெடித்தபோது  உடன் இது குறித்து CPMG , TN  அவர்களிடம் NFPE  மற்றும் FNPO  மாநிலச் செயலர்கள் சென்று விவாதித்து கடிதம் அளித்தோம். CHENNAI  FOREIGN  POST  இன் NFPE  மற்றும் FNPO  கிளைச் செயலர்கள்  தோழர். D .ராய் , மற்றும்  தோழர் ஆறுமுகம் ஆகியோர் உடன் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

பிரச்சினையின் தன்மையை  முழுதும் புரிந்துகொண்ட CPMG அவர்கள்  இந்த உடனே இந்த உத்திரவு நிறுத்தப் படும் என்று உறுதி அளித்தார்கள் . அடுத்த வாரத்தில்  தானே நேரிடையாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு FOREGN  POST  அலுவலகம் சென்று கிளைச் செயலர்கள் மற்றும் ஊழியர்களுடன்  நேரிடையாக கலந்துரையாடி கருத்துக்கள் அறிந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப் படும் என்று அறிவித்தார்கள் . 

FOREIGN  POST  இயக்குனரின்  தினப்படியான  குளறுபடியான உத்திரவுகளால்  தொழில் அமைதி கெடுவதை நாம் சுட்டிக் காட்டினோம். அதற்கு ஆவன நடவடிக்கை எடுப்பதாக CPMG  அவர்கள் உறுதி அளித்தார்கள்.  நாம் அளித்த கடிதத்தின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.



Thursday, March 28, 2013

UNITY IS THE ROAD FOR VICTORY !


வெற்றி !  வெற்றி ! வலிமையான போராட்டத்திற்கு வெற்றி ! அடக்கு முறைக்கு எதிரான வெற்றி ! JCA  வின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி !

நம்முடைய  ஒற்றுமையின் காரணமாகவும் , RMS  ஊழியரின் போர்க்குணமிக்க  போராட்ட வடிவின் காரணமாகவும்,  தன்னையே தியாகம் செய்துகொண்டு , ஊழியர்களை களத்தில்  இறக்காமல் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  RMS  பகுதி NFPE /FNPO தொழிற்சங்க தலைமைகளின் சுயநலமில்லா தன்மையின் காரணமாகவும் ,  RMS  பகுதியில்  நடைபெற்ற போராட்டத்தில்  நாம் உண்மையான வெற்றியைப் பெற்றோம் !  இதில் அஞ்சல் பகுதி JCA  வின் முழுப் பங்கினையும் நாம் செலுத்தியுள்ளோம் என்பது, எதிர்கால  ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ஒரு வித்தாக  அமையும்  என்பதே  நம் நம்பிக்கை !

26.03.2013 அன்று  நாம் அறிவித்த படி  27.03.2013 அன்று  மாநில அஞ்சல் நிர்வாகம் , CHENNAI  SORTING  நிர்வாகத்தை அழைத்துப் பேசி  உடன் பிரச்சினையை தீர்த்திட அறிவுறுத்தியது . அதன்படி  போராடும் தொழிற்சங்கத் தலைவர்கள்  CHENNAI SORTING  நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பேச்சு வார்த்தையில் அஞ்சல் JCA தலைவர்கள் தோழர்.JR மற்றும் தோழர்.GPM ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் மீது  அளிக்கப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  27.03.2013 மதியம் 03.00 மணி அளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. எழுத்து பூர்வமாக அளிக்கப் பட்ட ஒப்பந்தத்தின் நகலை கீழே பார்க்கலாம். 

அதன் படி  முறைகேடாக 70 ஊழியர்களுக்கு அளிக்கப் பட்ட DIES  NON  உத்திரவு விலக்கிக்  கொள்ளப்பட்டது . அவர்களுக்கு பிடிக்கப் படுவதாக உத்திரவிடப்பட்ட   இரண்டு நாட்கள் சம்பளம் உடன்  திரும்ப வழங்கிட உத்திரவிடப்பட்டது. மேலும்  புதிய அளவீடு களின் அடிப்படையில் ஊழியர்கள்கொடுமைப்படுத்தப் படும் உத்திரவு  விலக்கிக் கொள்ளப் பட்டது.  இனி ஊழியர்கள் பழைய அளவீடுகளின் அடிப்படையில் பணியாற்றலாம்   என்று அனுமதிக்கப்பட்டது.  இதர பிரச்சினைகள் குறித்து  தொழிற் சங்கங்களுடன் கலந்து முடிவு எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. உண்ணாவிரதம் இருந்த FNPO மாபொதுச்
செயலர் தோழர். தியாகராஜன், NFPE R3 மாநிலச் செயலர் தோழர். சங்கரன், FNPO R3 மாநிலச் செயலர் தோழர் குமார் உள்ளிட்ட தலைவர்களுக்கு NFPE P 3 மாநிலச் செயலர் தோழர். J.R. மற்றும் FNPO P3 மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன் ஆகிய இருவரும் பழச் சாறு அளித்து உண்ணா விரதத்தை முடித்து வைத்துபோராட்ட வீரர்களை வாழ்த்தி உரையாற்றினர். FNPO மாபொதுச்செயலர் தோழர். தியாகராஜன் தனது உரையில்அஞ்சல் பகுதி JCA தலைமையின் உடனடியான ஒத்துழைப்பையும் முழு ஈடுபாட்டையும் , பிரச்சினை தீர்வதற்கு மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண  உதவியதையும் நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்.  

இந்தப் பிரச்சினையில் நம்முடைய வாதத்தை ஏற்று உடன்  தீர்த்து வைக்க உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கும் , முழு ஈடுபாட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உண்ணா விரத பந்தலுக்கு வந்து தலைவர்களுடன் உரையாடி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டியும், பின்னர் பிரச்சினை தீர உதவி யவரும் ஆன நமது PMG, CCR திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் JCA வின் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றி.

ஒன்று பட்ட ஊழியர் சக்தியின் முன்னே அடக்கு முறைகள் தூளாகும் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு சமீபத்திய உதாரணம் ஆகும். 
ஒன்று படுவோம் தோழர்களே ! வென்றெடுப்போம் தோழர்களே!

COMPASSIONATE APPOINTMENT LIST RELEASED BY CRC IN TN CIRCLE

அன்புத் தோழர்களே ! 2012 ஆம் ஆண்டிற்கான  கருணை அடிப்படை யிலான  பணித்  தேர்வு  CRC  ஆல்  முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில் 5% காலியிடங்கள் ஒதுக்கப் பட்டு  மொத்தம் 24 எழுத்தர் பதவிகளுக்கும் 10 MTS  பதவி களுக்கும்  பணி  நியமனம் செய்வதற்கான உத்திரவு வெளியிடப் பட்டுள்ளது. 

உத்தரவின் நகலை கீழே உள்ள தொடர்பில் ' கிளிக் ' செய்து பார்க்கவும்.

http://tamilnadupost.nic.in/rec/REP_47_3_20130328.pdf

Wednesday, March 27, 2013

LGO EXAM POSTPONED ON OUR REQUEST- ORDERS ISSUED


COMMENTS ON INDEFINITE FAST BY RMS JCA NEWS


  1. சேலம் மேற்குகோட்ட JCA சார்பில் வீர வாழ்த்துக்களையும் ,ஆதரவினையும் தெரிவித்து கொள்கிறோம் . உற்சாகமான வார்த்தைகளை எழுதுவதில் JR அவர்களுக்கு நிகர் JR தான் .

  2. UNITED STRUGGLE ZINDABAD, WORKERS UNITY ZINDABAD
    WHETHER THE BUREAUCRATS READY FOR AN INCOME TAX RAID & CBI RAID WITH HONESTY ?

INDEFINITE FAST BY RMS JCA ON CHENNAI SORTING ISSUES

அதிர்ச்சி யூட்டும்  அத்து மீறல்கள் ! PERFORMANCE RELATED  INCENTIVE என்பது ஆறாவது ஊதியக் குழுவில் கூறப்பட்டது ! ஆனால் PERFORMANCE RELATED PAY என  இன்று குட்டி அதிகாரிகளால் அறிவிக்கப் பட்டுள்ளது! 

எச்சரிக்கை ! எச்சரிக்கை ! தனியார் மயத்தை விட மோசமான  நடவடிக்கைகள் ! தோழர்களே  நமது சுதந்திரத்திற்கும்   இனி ஆபத்தா ? வெள்ளைக் காரன் காலத்தை விடவும் கொடுமையாகுமா ? எச்சரிக்கை !

INDIVIDUAL  PERFORMANCE  அதாவது  INDIVIDUAL  OFFICIALS  PRODUCTIVITY  என்பது  CHENNAI  SORTING  பகுதியில்  புதிய அளவீடுகளின் அடிப்படையில்  கொடுக்கப் படவில்லை என்பதாக காரணம் காட்டி    மொத்த பணித்  தேவைக்கும் ஊழியர் பணி அளவிற்கும்  ஒரு மாதத்தில் -  இரண்டு நாட்கள் வித்தியாசம் இருக்கிறது  என்பதால் , இரண்டு நாட்கள் குறைவாகப்  பணி  செய்தததாக கணக்கிட்டு  , அதற்கு ஈடான இரண்டு நாட்கள் சம்பளத்தை கிட்டத்தட்ட 70 ஊழியர்களுக்கு நிறுத்தியதுடன் அல்லாமல் , அதனை 'DIES  NON ' ஆக  கருதி உத்திரவிட்ட  CHENNAI  SORTING  நிர்வாகத்தின், அதற்கு துணைபோன அதன் இயக்குனரின் சட்டத்திற்கு புறம்பான , கோமாளித் தனமான  நடவடிக்கைகளை கண்டித்தும் , CHENNAI  SORTING இன் கண்காணிப் பாளரை உடன்  மாற்றிடக் கோரியும் இன்று (26.03.2013) திடீரென்று RMS  பகுதியின் JCA  தலைவர்கள்  CHENNAI  SORTING அலுவலக வாயிலில்  காலவரையற்ற உண்ணாவிரதத்தினை  மேற்கொண்டனர்.  

இதில் FNPO  வின் மா பொதுச் செயலர் தோழர். தியாகராஜன் உள்பட , NFPE  மற்றும் FNPO  RMS  பகுதியின் மாநிலச் செயலர்கள்  தோழர். சங்கரன், தோழர். குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கு கொண்டனர். 

DIES NON  எதற்கு அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிகளைக் கூட தெரிந்து கொள்ளாமல் சகட்டு மேனிக்கு உத்திரவிடும் நிர்வாகத்தை கண்டித்தும் , புதிய அளவீடு என்ற பெயரில் தாமாகவே UNSCIENTIFIC  NORM  ஏற்படுத்திக் கொண்டு இலாக்கா விதிகளுக்கு எதிராக காட்டு தர்பார் நடத்தும்  நிர்வாகத்தைக் கண்டித்தும்  நாளை முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப் பட்டது 

இந்த முடிவுகளை  தமிழக JCA  மூலம் மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்து  மேல் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்திட  முடிவு எடுக்கப் பட்டது. 

அதன்படி உடனடியாக தலைமையிடத்தில்  இருந்த JCA வின்   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர்.  J.R., மற்றும் NFPE  R3 அகில இந்திய சங்க உதவி பொதுச் செயலர்  தோழர். M .B . சுகுமார், FNPO  
P4 சங்கத்தின்  மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் , FNPO R4 சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்  தோழர்.ராஜேந்திரன் , FNPO  சிவில் விங் மாநிலச் செயலர் தோழர். அந்தோணி ஆகியோர்  CPMG  அவர்களை சந்தித்து  பேச்சு வார்த்தை நடத்தினர் . தொடர்ந்து PMG , MM  திரு. மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களைச் சந்தித்து  பேச்சு வார்த்தைகளை தொடர்ந்தனர் .

இதன் விளைவாக CPMG  மற்றும் PMG , MM ஆகியோர் நாளை (27.03.2013) காலை 10.00 மணிக்குள் இந்த 'DIES NON ' உத்திரவை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் IRREGULAR  NORMS  உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்து  நாளை காலை பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுப்பதாக  உறுதி அளிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் வேலைநிறுத்தப் போராட்டம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் , உண்ணா விரதத்தை உடன் கைவிட வேண்டும் எனவும் CPMG  மற்றும் PMG  தரப்பில்  கோரப்பட்டது .  

இதனை  RMS  JCA  தலைவர்கள் ஏற்கவில்லை. DIES NON  உத்திரவு விலக்கிக் கொள்ளப்பட்டு சம்பளப் பிடித்தம் ரத்து செய்யப் பட்ட பிறகே  போராட்டம் விலக்கிக் கொள்ளப் படும் எனவும் ,  அதன் பிறகு இதர பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை மேற்கொள்ளப் படும் எனவும்  அறிவிக்கப் பட்டது. இந்த முடிவின் அடிப்படையில்  நாளை இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது .

இந்த பிரச்சினை குறித்து நமது மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்  புது டெல்லியில் இன்று MEMBER ( O ) அவர்களைச் சந்தித்து பேசியதாகவும் , MEMBER (O ) அவர்கள் மூலம் CPMG அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் , டெல்லியில் இருந்து  நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள்  இரவு தெரிவித்தார். 

போராட்ட நிகழ்வில் , தோழர். கண்ணையன், முன்னாள் NFPE  கன்வீனர், தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ்,  மாநிலச் செயலர் தோழர். JR , நம் அகில இந்திய சங்கத்தின் செயல் தலைவர்  தோழர். NG , NFPE  சம்மேளனத்தின்  உதவி மாபொதுச் செயலர் தோழர் . ரகுபதி  உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நம் பகுதி   தோழர்கள் கலந்து கொண்டனர். 

நாளைக் காலையில் பேச்சு வார்த்தையும் மீண்டும் தொடர்கிறது.  குறுகிய நேரத்தில்  உடன் முடிவெடுத்து  அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட RMS  பகுதியின் NFPE  மற்றும் FNPO  தலைவர்களுக்கு  நம்  தமிழக JCA சார்பிலும் , NFPE  தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பிலும் , நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சார்பிலும் வீர வாழ்த்துக்கள் ! கோரிக்கைகளில்  தீர்வு ஏற்படவில்லையானால் , தமிழக JCA  வடிவில் போராட்டம் விரிவு படுத்தப்படும் -  தீவிரப்படுத்தப்படும்  என  JCA சார்பில்  NFPE  கன்வீனர் தோழர். JR  அறிவித்தார் !

அநீதி களைவோம் !                                                     அடிமை விலங்கொடிப்போம் !   
ஆர்ப்பரித்துப் போராடுவோம் !                             ஒன்று பட்டுப் போராடுவோம் !
வெல்க வெல்க  நீதிக்கான போராட்டம் !

Tuesday, March 26, 2013

SHRI. MERVIN ALEXANDER WILL BE THE PMG, CCR

திரு. மெர்வின் அலெக்சாண்டர்  ,  PMG , MM  அவர்கள்  PMG , CCR  ஆக  மாற்றல் பெற்று பொறுப்பேற்கிறார் . அவர்தம் காலத்தில்  ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு  சென்னை பெருநகர மண்டலம்  நிச்சயம் ஒரு அமைதி மண்டலமாக இருக்கும்  என்று நாம் நம்புகிறோம். 

ஏனெனில் , இதுவரை ADDL  CHARGE  ஆக  அவர் பணி  புரிந்த போதே  பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் அவரால்  சரியாகவும் , கால தாமத மின்றியும், கனிவுடனும்   தீர்க்கப் பட்டுள்ளன என்பதாலேயே  நாம் இந்த நம்பிக்கையை  வெளிப்படுத்துகிறோம்.அவர்தம் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின்  இதய பூர்வமான வாழ்த்துக்கள் !. 

STAGE SET FOR A JOINT ACTION BY ALL C.G.EMPLOYEES DEMANDING 7th CPC


ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை  ஊழியர் சங்கங்களும் 7ஆவது ஊதியக் குழு வேண்டியும்  புதிய பென்ஷன்  திட்டத்தை கைவிட வேண்டியும்  நம்முடன் இணைகின்றனர். எதிர்வரும் ஏப்ரல் 29. 2013 அன்று ரயில்வே உள்ளிட்ட அனைத்து  மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ஒன்றிணைந்து நாடு தழுவிய அளவில் அந்தந்த பகுதிகளில்  ஆர்ப்பாட்டம் நடத்தி கீழ்க் காணும் தந்தியை பாரதப் பிரதமருக்கு அனுப்பிட வேண்டுகின்றோம். 

========================================================================
WITHDRAW PFRDA BILL AND SET UP THE 7TH CPC
TO EFFECT WAGE REVISION OF CENTRAL
GOVERNMENT EMPLOYEES.

Name…………………………..
Secretary
Name of the Unit:……………………
Place:…………………..
 =================================================================================
MOVEMENT LAUNCHED BY THE CONFEDERATION CULMINATING IN A STRIKE ON  12.12.12 PAVES WAY FOR A UNITED PLATFORM OF ALL C.G.EMPOLOYEES UNDER THE JOINT BANNER OF ALL INDIA RAILWAYMEN FEDERATION - ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION - & CONFEDERATION OF C.G.EMPLOYEES.
 
NATIONWIDE DEMONSTRATIONS BY THE ENTIRETY OF C.G.EMPLOYEES ON 29th APRIL DEMANDING CONSTITUTION OF 7th PAY COMMISSION IS CALLED UPON BY THE ABOVE ORGANISATIONS.
 
JOINT CALL ISSUED BY AIRF - AIDEF - CONFEDERATION IS PLACED IN OUR WEBSITE FOR WIDEST CIRCULATION AMONG THE EMPLOYEES TO PREPARE THEM FOR A MASSIVE DEMONSTRATION ON 29.04.2013.
 

Conf/26/2013 Dated: 24.3.2013

Dear Comrade,

                We invite your attention to the  efforts undertaken by us after the 12th December, one day strike action to bring about a united action by the Railway, Defence and other Central Government employees on certain pressing demands.  In this connection you will recall that Com. S.K. Vyas, our President had been writing and following it up with telephonic conversations to bring about such a platform for action. We are happy to inform you that the AIRF and AIDEF has now agreed to bring about a joint platform of action to project two important demands of the CGEs. Viz. the setting up of the 7th CPC and the withdrawal of the PFRDA Bill. 

                We send herewith the joint Circular letter issued by the three organizations on 23.3.2013 calling upon its units to organize a joint demonstration on 29th April, 2013 in front of all offices throughout the country.  The affiliates and State Committees are requested to take initiative in organizing the programme with maximum participation of members of the three organizations at a mutually agreed Central place in all Cities/towns and other places.  All Units should be requested to send the telegram to the Prime Minister and a report of the extent of participation sent to the Confederation CHQ by 3rd May, 2013.  We shall review the participation in the programme at our National Conference at Kolkata. 

                                                                                             With greetings,
Yours fraternally,
K.K.N. Kutty
Secretary General.

======================================================================================================
COPY OF JOINT LETTER 
ALL INDIA RAILWAYMEN FEDERATION
4, State Entry Road,New Delhi-110055.CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND WORKERS.
Manishinath Bhawan. A2/95 Rajouri Gardn,
New Delhi. 110 027
ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION
S.M. Joshi Bhawan, Dr. B.R.Ambedkar Road, Kirkee, PUNE. 3

23rd March.2013
Dear Comrades,

As  you are aware, the Government in reply to a question raised in the Parliament has stated that setting up of the 7thCentral Pay Commission  for effecting wage revision of central Government employees is not presently under its consideration.  You will recall, that  a similar statement was made by the then Finance Minister, when the demand for setting up the 6th CPC was raised by the employees.  The Joint movement of the Central Government employees, for which we created the platform of the Steering Committee of the organizations participating in the JCM under the leadership of Late Com. J.P. Chaubey, the then General Secretary of All India Railway men Federation could ensure that the Government rescind its stand then and set up the 6th CPC.  The real value of wages determined by the 6th CPC has now been eroded to the extent of above 100% due to the unprecedented inflation in the economy and spiraling rise in the prices of essential commodities.  While the Government permits wage negotiation and revision in the fully owned Public Sector Undertakings every five years, the denial to revise the wages of Central Government employees despite such large scale erosion in the real value of wages is absolutely unjustified.

The Government had been persisting with the enactment of the PRFDA Bill in the Parliament in almost all sessions ever since the UPA II Government took over.  Ironically they could elicit support from the main Opposition Party in the country for this ill advised enactment.  Lakhs of new workers who have joined in various organizations of the Government since 2004 are worried of their future, which is forlorn and bleak, in the wake of the denial of an age old social security scheme of Pension.  We have been together opposing this move right from the day, the NDA Government introduced the bill in the Parliament in 2003.  However, our efforts, actions and objections have all been ignored with disdain by the Government. Though they could not muster enough support required to pass the bill in the Parliament, the Union Cabinet has recently taken the decision to allow 49% FDI in the pension fund.

We are to channelize our efforts through a wider platform of Unity. Efforts are on anvil to bring about such a platform.  In the meantime, we have decided to call upon all Units and Branches of AiRF, Confederation and AIDEF to organize Demonstration on 29th April, 2013. in front of all offices and send the following telegram to the Prime Minister. 
WITHDRAW PFRDA BILL AND SET UP THE 7TH CPC
TO EFFECT WAGE REVISION OF CENTRAL
GOVERNMENT EMPLOYEES. 

Yours fraternally,

Sd/-                                                                       Sd/-                                                   Sd/-
SHIVGOPAL MISRA                                         KKN. KUTTY.                                           C.   SRIKUMAR.
General Secretary, AIRF                                Secretary General. Confederation.      General Secretary.AIDEF.

POSTMAN/MG EXAM IS REQUESTED FOR POSTPONEMENT

P.A./ S.A. வுக்கான  நேரடித் தேர்வு எதிர்வரும் 21.04.2013 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  அதேபோல POSTMAN/MAIL GUARDக்கான  தேர்வும் எதிர்வரும் 21.04.2013 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் பல GDS  தோழர்கள்  இரண்டு தேர்வும் ஒரே நேரத்தில் எழுத இயலாது என்பதை  பல கோட்ட/ கிளைச் செயலர்கள் மூலம் மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்தார்கள் .  இது குறித்து நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள்  பிரச்சினையை எடுத்துச் சென்றதன் விளைவாக  தற்போது   POSTMAN/MAIL GUARD  தேர்வு எதிர்வரும் 28.04.2013 க்கு தள்ளி வைக்கப் படும்  என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.   இதற்கான உத்திரவை  இன்று எதிர்பார்க்கிறோம். 

EXTENSION OF SPECIAL CL FOR ALL INDIA CONFERENCE


1st ALL INDIA CONFERENCE OF AIPEU-GDS(NFPE) - CHENNAI


The 1st All India Conference of ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GDS(NFPE) has been held on 21st & 22nd of March, 2013 in Dharma Prakash Kalyana Mandapam, Purushawakkam, Chennai-600 084.

The Conference was presided by Com.Bijoy Gopal Sur, President, AIPEU-GDS(NFPE). More than 1,000 GDS Comrades attended and represented from all 22 Circles in this 1st All India Conference of GDS NFPE.

The following office bearers were elected unanimously for the CHQ :

President                    : Com.Bijoy Gopal Sur (West Bengal)
Working President     : Com.JaiPrakash Singh (Uttar Pradesh)
                                     : Com.Smt. Asha Ben Joshi (Gujrat)
Vice President           : Com.Nirmal Ch. Singh (Orissa)
                                     :Com.Gana Acharya (Assam)
General Secretary     : Com.P.Pandurangarao (Andhra Pradesh)
Deputy Genl. Secy.   :Com.R.Dhanaraj (Tamil Nadu)
Asst. Genl. Secy.       : Com.B.R.Jagdeesh (Karnataka)
                                     : Com.K.C.Ramachandran (Tamil Nadu)
                                     :Com.Virendra Kumar Yadav (M.P)
Financial Secretary   :Com.V.Murukan (Kerala)
Asst. Fin. Secy.          :Com.Avtar Singh (Punjab)
Orgg. Genl. Secy.      :Com.Roshanlal Meena (Rajasthan)
                                     :Com.Chandranarayan Chaudhary (Bihar)
                                     :Com.Virender Sharma (Himachal Pradesh)

Auditor : MS.Deepak Gour & Co., New Delhi-110 041

Special Invitess : 
Com.Bipin Majumdar (Assam)
Com.Akshay Kumar (Haryana)
Com.K.Muktar Ahmed (Andhra Pradesh)(RMS 'Z' division)
Com.M.Durai, (TamilNadu) (RMS 'T' division)
Circle Secretary, Maharashtra 
Circle Secretary, Chattisgarh
Circle Secretary, Jharkhand
Circle Secretary, Jammu & Kashmir
Circle Secretary, Uttarakhand
Circle Secretary, Delhi

Mahila Sub Committee:

Chairperson : Com.Supravapal (Agartala, Tripura State)
Convener      : Com.Yashmin Taj (Karnataka)
Members      :Com.D.Padmavathi, (Andhra Pradesh)
                      : Com.Saly George (Kerala)
                      : Com.B.Parvathi (Karnataka)
                      : Com.V.I.Lakshmi (Tamil Nadu)
                      : Com.Kaladevi Rajak (Madhya Pradesh)                   
                       






Wednesday, March 20, 2013

MEETING WITH DPS HQRS ON 19.03.2013

DPS  HQRS  அவர்களை நேற்று சந்தித்து FOREIGN  POST  PACKERS  ஊதிய நிர்ணயம் குறித்தும் , தேனாம்பேட்டை அஞ்சல் ஊழியர் குடியிருப்பு பிரச்சினைகள் குறித்தும் மாநிலச் செயலர் பேசினார். FOREIGN POST PACKERS  பிரச்சினையில் , அந்த ஊழியர்களுக்கு NOTIONAL ஆக  பதவி உயர்வு அளிப்பதா அல்லது ARREARS  உடன் பதவி உயர்வு அளிப்பதா என்பது குறித்து DTE லிருந்து  தெளிவான உத்திரவு இல்லை என்றும் , DELHI  உயர்நீதி மன்ற தீர்ப்பின் நகலும் தங்களுக்கு அனுப்பப் படவில்லை என்றும் அது குறித்து DTE க்கு விளக்கம் கேட்டு இதுவரை  மூன்று முறை கடிதம் எழுதியிருப்பதாகவும்  நம்மிடம் கூறினார். இதர FOREIGN POST  களில்  இந்தப் பிரச்சினை தீர்க்கப் பட்டு அந்த ஊழியர்களுக்கு ARREARS  உடன் FIXATION  செய்யப் பட்டுள்ளது என்பதை நாம் சுட்டிக் காட்டினோம். மேலும் DDG  அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டினோம். அதற்கு அவரும் உடன் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். நம் மாநிலச் செயலரும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் ADGஅவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இந்தப் பிரச்சினையில் உடன் உதவிட வேண்டினார். அவரும் உடன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

தேனாம்பேட்டை  ஊழியர் குடியிருப்பு பிரச்சினையில் ஏற்கனவே நாம் கடிதம் அளித்துப் பேசிய பிரச்சினைகளில் உடன் தீர்வு காணப் பட்டதற்கும் , புதிதாக 4.5 லட்சம் செலவில்  குடிநீர் தரை வழி இணைப்புகள் உடன் மாற்றிட உத்திரவு இடப்பட்டு  தற்போது வேலைகள் நடந்து வருவது குறித்தும்,  நீண்ட காலமாக சுத்தம் செய்யப் படாத செப்டிக் TANK  சுத்தம் செய்திட உடன் உத்திரவு இட்டு அது நிறைவேற்றப் பட்டதற்கும்  நாம் நன்றி தெரிவித்தோம். மேலும் QUARTERS  பகுதியில் தீர்க்கப் படாத பிரச்சினைகள் குறித்து விரிவாக கடிதம் அளித்துப் பேசினோம். உடன் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றுDPS HQRS அவர்கள்  உறுதியளித்தார். அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. FOREIGN  POST பிரச்சினையில் நமக்கு அளிக்கப் பட்ட இடைக்கால பதில் நகலும்,  TEYNAMPET QUARTERS பிரச்சினைகள் குறித்து நாம் அளித்த கடித நகலும் உங்கள் பார்வைக்கு  கீழே அளித்துள்ளோம். 



GENERAL SECRETARY ADDRESSES ON P.KATTUR (TRICHY) HRA CASE


INFORMAL MEETING WITH PMG , CCR

PMG , CCR  அவர்களுடன் நேற்று சந்திப்பு நடைபெற்றது. மாநிலச் செயலருடன் சென்னை GPO  செயலர் தோழர். K . முரளியும் சந்திப்பில் கலந்து கொண்டார். 

சென்னை GPO விலிருந்து DEPUTATION இல் CHENNAI  CITY SOUTH  DIVISION க்கு அனுப்பப்பட்ட ஊழியர்களை  திரும்பப் பெறுதல், காஞ்சிபுரம், CHENNAI CITY  CENTRAL  DIVISION  களில் அளிக்க வேண்டிய MACP  உடன் அளிக்கவேண்டுதல் CHENNAI  CITY CENTRAL , CHENNAI CITY SOUTH , TAMBARAM  கோட்டங்களில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ள MPCM  சேவை ரத்து செய்தல், இரவு நேரங்களில் உள்ள SPEED POST  BOOKING  நிறுத்தப் பட வேண்டுதல் , மற்றும் CHENNAI  CITY NORTH , CHENNAI  CITY CENTRAL DIVISION  களில் GDS  பதிலிகளுக்குப் பிடிக்கப்பட்ட  ஞாயிறு  சம்பளம்  திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பிரச்சினைகள்  குறித்து விவாதித்து  கடிதம் அளித்தோம் . கடிதங்களின் நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது. PMG ,CCR  பொறுமையாக அனைத்துப் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.  நமது கடிதங்களின் மீது உடன் மேல் நடவடிக்கை எடுப்பதாகவும் , பிரச்சினைகள் தீர்க்கப் படும் என்றும் உறுதி அளித்தார். 





Monday, March 18, 2013

ஏழாவது ஊதியக்குழு உடன் அமைக்க வேண்டி மத்திய மந்திரி (காங்கிரஸ்) பிரதமருக்கு கடிதம்.

ஏழாவது ஊதியக்குழு உடன் அமைக்க வேண்டி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  (காங்கிரஸ்) திரு . அஜய் மக்கான் அவர்கள் பாரதப் பிரதம அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நம் கோரிக்கை மேலும் வலுப்பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு  பொதுத் தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் இந்தக் கோரிக்கை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

Posted: 17 Mar 2013 11:29 AM PDT
7th CPC News : Central Minister in favour of seventh pay commission

Ajay Maken backs cry for seventh pay panel

New Delhi : With a little over a year to go before the next general election, the demand for a Seventh Pay Commission has started to gather momentum. Union housing and urban poverty alleviation minister Ajay Maken has taken the lead in endorsing the Central government employees' request for setting up of the new pay panel, citing the erosion of real wages due to high inflation since implementation of the Sixth Pay Commission's recommendations.

In a letter addressed to Prime Minister Manmohon Singh, Maken underlined how every pay panel since the Second Pay Commission, barring the Sixth Pay Commission, were set up in the third year of the decade. "We are again in the third year of the ongoing decade and Central government employees are justifiably looking forward to the Seventh Pay Commission," he said.

Recalling that it was under Singh that the last pay panel was set up in 2005, after the NDA government failed to do so in 2003, Maken, in the communication dated March 14, requested that a decision be "taken on priority" for constitution of the  Seventh Pay Commission. A notification for constitution of the 7th Central Pay Commission is the need of the hour, which is bound to have bearing upon about 20 million employees," he said.

Maken concluded by emphasizing that setting up of the new pay panel was in "larger interest of government employees as well as the (Congress) party".