Friday, March 15, 2013

THIRUVANANTHAPURAM AIC REPORTS


புதிய சரித்திரம் படைத்திட்ட திருவனந்தபுரம் அகில இந்திய மாநாடு.

நமது அகில இந்திய சங்கத்தின் 29 வது அகில இந்திய மாநாடு மார்ச் திங்கள் 10 முதல் 13 வரை சீரும் சிறப்புமாக கண்டோர் வியக்கும்வண்ணம் கலந்து கொண்டோர் அகமகிழும் வண்ணம் நடைபெற்றது. இது வரை நடைபெற்ற மாநாடுகளிலேயே  4000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட வியத்தகு மாநாடாக புதிய சரித்திரம் படைத்த மாநாடு இது.  நான்கு நாட்களிலும் அரங்கம் நிரம்பி வழியநமது துறைஅதிகாரிகள் கலந்து கொண்ட கருத்தரங்குஅரசியல் தலைவர்களின் கருத்து செறிவு மிக்க உரைகள்,பிற சங்கங்களின் தலைவர்கள் ஆற்றியஉரைவீச்சுகள்நமது சார்பாளர்களின் கருத்துப்  பரிமாற்றங்கள்மாநில செயலர்களின் சிந்தனை தூண்டும் உரைகள்மகிளா கமிட்டிசிறப்புக்கூட்டம்இடை இடையே கண்கவர் கலைநிகழ்ச்சிகள்திருவனந்தபுரத்தை செங்கடலாக மாற்றிய பேரணி என அடுக்கிக் கொண்டேபோகும் அளவிற்கு கண்களையும் கருத்தினையும் கொள்ளை கொண்ட மாநாடு இது என அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம்.

தோழர். M. கிருஷ்ணன்அகில இந்தியத் தலைவரின் சீரிய தலைமையில் 10ந் தேதி துவங்கிய மாநாட்டின்  முதல் நிகழ்ச்சியாக வண்ணமிகு கொடியேற்றம் நடந்தது.  விண்ண- திரும்வீர முழக்கங்களுக்கு இடையே தேசியக் கொடியை தோழர் தமன்கரும்  சம்மேளனக் கொடியை தோழர்.ரஹாதேவும் அஞ்சல் மூன்றின் கொடியை தோழர் KVS ம் ஏற்றினர்.  பிறகுதியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி அனைவரும் செலுத்திய பின்மாநாட்டினை தோழர்  கே பத்மநாபன் துவக்கி வைத்தார்அவர் தம்உரையில் உலகமய தனியார் மய ஆபத்துக்கள் குறித்தும் அரசின் தவறான கொள்கைகள் குறித்தும் சிந்தனையைத்தூண்டும் சிறப்பானகருத்துக்களை பதிவு செய்தார்பிறகு நடைபெற்ற கருத்தரங்கில்நமது துறையின் செயலர்.  திருமதி கோபிநாத் அவர்கள் IT MODERNISATION IN OUR DEPARTMENT என்ற POWER பாயிண்ட் PRESENTATION வழங்கினார்நமது துறை எதிர் கொள்ளும் சவால்கள் குறித்தும் பல்வேறு ITதிட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்பின்கேரளா CPMG திருமதி ஷோபா கோஷி மிக சிறப்பான உரை நிகழ்த்தினார்.  பிறகுநடை பெற்ற வாழ்த்துரை நிகழ்ச்சியில், தோழர்.KKN குட்டி [மகா சம்மேளனம்], தியாகராஜன்[FNPO ]ஸ்ரீகுமார் ]AISGEF ] D K ரகதே [NFPE EX -PRESIDENT]
CC பிள்ளை [NFPE EX -SG] ராகவேந்திரன் [NFPE EX -SG ] BG தமங்கர் [NFPE EX-PRESIDENT]  மற்றும் சகோதர சங்க பொதுச் செயலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பிறகு அமைப்பு நிலை விவாதம் துவங்கியது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்சார்பாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.  அன்று முத்தாய்ப்பாக தொழிற் சங்க அரங்கில் பெண்களின் பங்குஎன்ற சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.  தோழர் P ரமா[கேரளா மகிளா கமிட்டிவரவேற்பு நிகழ்த்த ஸ்ரீமதி டீச்சர் [கேரளா முன்னாள் அமைச்சர்சிறப்புரைஆற்ற நமது மகிளா கமிட்டி உறுப்பினர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  பின்மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் நகரே குலுங்கும் அளவில் செங்கடல் சீறி எழுந்து வந்தது போல் வீதி எல்லாம் செங்கொடி பறக்க 4000 பேருக்கு மேல் கலந்துகொண்ட பிரம்மாண்டமான பேரணியும் அதன் முடிவில் திருவனந்தபுரம் காந்தி மைதானத்தில் கருத்தரங்கமும் நடந்தது. தோழர் KP ஷோபனா தலைமை தாங்க தோழர் பிரபாத் பட்நாயக் துவக்கி வைத்தார்பின்தோழர்கள் M விஜயகுமார் [முன்னாள் கேரளா அமைச்சர்(CPM] பன்னியன் ரவீந்திரன்  [மு  - CPI ] A.A. ஆஷீஷ் [RSP ] தோழர். கிருஷ்ணன் NFPE .  தோழர். KVS , முன்னாள் பொதுச் செயலர், மற்றும் பலர் உரையாற்றினர்.

பிறகு நடந்திட்ட DELEGATES SESSION இரவு 9.00 மணி தொடங்கி காலை 4.00 மணி வரை  விடிய விடிய நடந்தது.  நமது தமிழ் நாட்டைச் சேர்ந்த வட சென்னை , ஈரோடுதிருப்பூர்சேலம்மேற்குதிருச்சிகோட்டங்களிலிருந்து சார்பாளர்கள் சிறப்பாக பேசினார்.  தமிழகத்திலேயே முதல் பெண் கோட்டச் செயலர் என்றபெருமை பெற்ற  வட சென்னை கோட்டத்தின் கோட்டச் செயலர் தோழர். ஏஞ்செல் சத்தியநாதன் அவர்கள் ஆங்கிலத்தில்  அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.  . 

மூன்றாம் நாளும் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் அணைத்து மாநில செயலர்களும் பேசினர.  நமது  மாநிலச் செயலர்  மிக சிறப்பாக கருத்துகளை பதிவு  செய்து  தமிழக அஞ்சல் மூன்றின் பெருமையினை நிலை நாட்டினார்பல்வேறு வினாக் களுக்கு  பதில் கூறும் வகையில் தோழர் கிருஷ்ணன் ஆற்றியஎழுச்சி உரை மாநாட்டின் முத்தாய்ப்பாக இருந்ததுதோழர்கள் KVS ம் , சிவ நாராயணாவும் தொகுப்புரை வழங்கினர்.  போடப் பட்டகமிட்டிகளின் சார்பாகபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.. பின்நமது தலைவர் தோழர் KVS அவர்களுக்கு கோலா கலமாக அகில இந்திய சங்கத்தின் சார்பில்  அவரது சேவையை  பாராட்டும் வண்ணம் மிகச் சிறப்பாக பாராட்டு  விழா நடை பெற்றது.  பிறகு நடைபெற்ற தேர்தலில் ஒரு மனதாக  கீழ்க் கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.:-

CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C  ELECTED UNANIMOUSLY:


President         Com. R.Sivannarayana (Andhra Pradesh) 
Working President                  (1) Com.Mangesh Parab (Maharashtra)
                                                  (2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President                         (1) Com.R.C.Mishra (Odisha)
                                                  (2) Com.Smt. C.P.Sobhana (Kerala)
General Secretary  Com.M.Krishnan (Kerala)
Dy. Genl. Secy    (1) Com.N.Subramanian (Tamilnadu)
Asst.Genl.Secy                      (2) Com.R.N.Parashar (Uttar Pradesh)
                                                 (3) Com.G.Maity (West Bengal)
                                                 (4) Com.A.Veeramani (Tamilnadu)
Financial Secy.   (1) Com.Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy                       (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy                      (1) Com.S.A.Hameed (Chattisgarh)
                                                 (2) Com.U.K.Tiwari (Bihar)
                                                 (3) Com.L.P.Saikia (Assam) 

AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE 
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)

Committee Members : 
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Manimeghalai (Tamilnadu)
Com.Mausumi Majumder (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com. Angel Sathiyanathan (Tamilnadu) 
 
TN CIRCLE UNION conveys our greetings and congratulations to the newly elected office bearers of AIPEU Group ‘C’ and the Mahila Committee Members. 

மாநாட்டுக் காட்சிகள் :-