Wednesday, March 20, 2013

MEETING WITH DPS HQRS ON 19.03.2013

DPS  HQRS  அவர்களை நேற்று சந்தித்து FOREIGN  POST  PACKERS  ஊதிய நிர்ணயம் குறித்தும் , தேனாம்பேட்டை அஞ்சல் ஊழியர் குடியிருப்பு பிரச்சினைகள் குறித்தும் மாநிலச் செயலர் பேசினார். FOREIGN POST PACKERS  பிரச்சினையில் , அந்த ஊழியர்களுக்கு NOTIONAL ஆக  பதவி உயர்வு அளிப்பதா அல்லது ARREARS  உடன் பதவி உயர்வு அளிப்பதா என்பது குறித்து DTE லிருந்து  தெளிவான உத்திரவு இல்லை என்றும் , DELHI  உயர்நீதி மன்ற தீர்ப்பின் நகலும் தங்களுக்கு அனுப்பப் படவில்லை என்றும் அது குறித்து DTE க்கு விளக்கம் கேட்டு இதுவரை  மூன்று முறை கடிதம் எழுதியிருப்பதாகவும்  நம்மிடம் கூறினார். இதர FOREIGN POST  களில்  இந்தப் பிரச்சினை தீர்க்கப் பட்டு அந்த ஊழியர்களுக்கு ARREARS  உடன் FIXATION  செய்யப் பட்டுள்ளது என்பதை நாம் சுட்டிக் காட்டினோம். மேலும் DDG  அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டினோம். அதற்கு அவரும் உடன் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். நம் மாநிலச் செயலரும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் ADGஅவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இந்தப் பிரச்சினையில் உடன் உதவிட வேண்டினார். அவரும் உடன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

தேனாம்பேட்டை  ஊழியர் குடியிருப்பு பிரச்சினையில் ஏற்கனவே நாம் கடிதம் அளித்துப் பேசிய பிரச்சினைகளில் உடன் தீர்வு காணப் பட்டதற்கும் , புதிதாக 4.5 லட்சம் செலவில்  குடிநீர் தரை வழி இணைப்புகள் உடன் மாற்றிட உத்திரவு இடப்பட்டு  தற்போது வேலைகள் நடந்து வருவது குறித்தும்,  நீண்ட காலமாக சுத்தம் செய்யப் படாத செப்டிக் TANK  சுத்தம் செய்திட உடன் உத்திரவு இட்டு அது நிறைவேற்றப் பட்டதற்கும்  நாம் நன்றி தெரிவித்தோம். மேலும் QUARTERS  பகுதியில் தீர்க்கப் படாத பிரச்சினைகள் குறித்து விரிவாக கடிதம் அளித்துப் பேசினோம். உடன் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றுDPS HQRS அவர்கள்  உறுதியளித்தார். அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. FOREIGN  POST பிரச்சினையில் நமக்கு அளிக்கப் பட்ட இடைக்கால பதில் நகலும்,  TEYNAMPET QUARTERS பிரச்சினைகள் குறித்து நாம் அளித்த கடித நகலும் உங்கள் பார்வைக்கு  கீழே அளித்துள்ளோம்.