R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Saturday, May 31, 2014
PROBLEMS CROPPED UP AT MADURAI REGION AGAIN
மதுரை மண்டலம் என்றுமே அமைதி மண்டலமாக இருந்ததில்லை என்பது அதிகாரிகளின் பார்வை .
அதிகாரிகள் எந்த நாளும் அந்த மண்டலத்தை அமைதி மண்டலமாகவே இருக்க விடுவதில்லை என்பதே தொழிலாளர்களின் குற்றச்சாட்டு.
நம் மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற போராட்டங்கள் பற்றி உங்களுக்கே தெரியும் . மதுரை அஞ்சல் பயிற்சி மைய பிரச்சினை தொடங்கி , மதுரை, கோவில்பட்டி , சிவகங்கை என்று தொடர்ந்து பிரச்சினைகள் அதன் விளைவாக போராட்டங்கள்.
நம்முடைய மாநிலச் சங்கத்தின் முதல் மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் நடைபெற்ற பின்னர் அறிவிக்கப் பட்ட முதல் போராட்டம் 4.9.13. உரிய நோட்டீஸ் வழங்கப் பட்டு அதன் அடிப்படையில் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவில் உள்ள 8 மாநிலச் செயலர்களும் 3.9.13 அன்றைக்கு பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும்.
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருந்ததனாலும், மண்டல அதிகாரியின் உறுதி மொழியை ஏற்றும் பிரச்சினைகள் தீர்க்கப் படும் என்று நம்பி போராட்டத்தை ஒத்தி வைத்தோம் நாம்.
மீண்டும் புதிய பிரச்சினைகள் வெடிக்கவும், பழைய பிரச்சினைகள் உறுதி அளித்தபடி தீர்க்கப் படாததாலும் 10.1.2014 அன்று மதுரை மண்டல அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவில் உள்ள 8 மாநிலச் செயலர்களாலும் எழுத்து பூர்வமாக அறிவிக்கப் பட்டு , நோட்டீஸ் உம் வழங்கப் பட்டு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. அன்றே ஒரு சுற்று பேச்சு வார்த்தை யும் நடைபெற்றது
மீண்டும் 21.4.2014 அன்று மண்டல நிர்வாகம் நமது அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் எட்டு மாநிலச் செயலர்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்று ஊழியர்கள் பிரச்சினை தீர்வில் முன்னேற்றம் கண்டோம்.
இத்தனை நிகழ்சிகள் இலாக்கா விதிமுறைகளுக்குள்ளும் தொழிற்சங்க வரம்புக்குள் முறையாகவும் நடந்த பிறகும் , தற்போது 5 மாதம் கழித்து 10.1.2014 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு மதுரை கோட்ட முது நிலை கண்காணிப்பாளர் SHOW CAUSE NOTICE வழங்குகிறார் என்பது கேலிக்குரிய செயலாகும். இது அடிப்படை சட்ட விதிகளுக்கும் தொழிற் சங்க உரிமைகளுக்கும் எதிரானதாகும். இதனை உடனடியாக ரத்து செய்திட மதுரை மண்டல நிர்வாகம் முன்வரவேண்டும்.
மேலும் தென் மண்டலத்தில் உள்ள தேனீ, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பல கோட்டங்களில் இலாக்கா விதிகளை மீறி சுழல் மாறுதல் என்ற பெயரில் , ஊழியர்களின் விருப்பங்களுக்கு ,மாறாகவும், பணிமூப்பினை கவனத்தில் கொள்ளாமலும், INTEREST OF SERVICE என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய் TA/DA/LUMP SUM GRANT அளித்தும் தானடித்த மூப்பாக மாறுதல் உத்திரவுகளை இட்டுள்ளதாக புகார் மாநிலச் சங்கத்திற்கு வந்துள்ளது.
இவற்றையெல்லாம், நம்முடைய தென் மண்டல PMG அவர்களை நேரில் சந்தித்து நம்முடைய மண்டலச் செயலரும் , மாநில உதவிச் செயலரும் பேசி, குறை தீர் மனு அளிக்க உள்ளார்கள். அந்த பேட்டிக்குப் பின்னரும் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால் மீண்டும் களமிறங்கிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் . அந்த நிலை தொடராமல் ஊழியர்களின் நலன் காக்கப் படவேண்டும், சட்ட விதிகள் மதிக்கப் படவேண்டும், நிர்வாக - தொழிற்சங்க உறவு சீராக அமைந்திடவும் வேண்டும் என்று தென் மண்டல நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
மதுரை கோட்டத்தில் அளிக்கப் பட்ட நோட்டீஸ் க்கு மாதிரி பதில் (DRAFT REPLY ) கீழே அளித்துள்ளோம் . கோட்டச் சங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
DRAFT REPLY :-
From
To
The Sr. Superintendent of Pos.,
Madurai Division,
Madurai 625 002.
Through : Proper channel.
Respected Madam,
Sub:
Issue of show cause notice for
participating in the Dharna conducted by all the 8 Unions of NFPE of TN
Circle in front of Regional
Office on
10.01.2014 – Reg.
Ref: Your office
letter No.
…..
With reference to the letter cited, I am to
submit the following for your
kind consideration.
Proper notice was issued to the Regional administration in writing by the
Tamilnadu Circle Co-ordination committee of 8
Unions under the
banner of NFPE, submitting certain items of demands
twice viz. on 03.09.2013 and on
10.01.2014 , duly signed by all the Circle Secretaries, announcing trade union programme of action, which is
very well within the ambit of the
provisions contained under Industrial
Disputes Act , 1947 and Indian Trade Union Act , 1926, and not declared as illegal, either by the
Department or by the Regional Administration.
Being
a strong member of
AIPEU Gr. C and under NFPE,
I have adhered the call given by the Unions , as said above, that
too only after applying eligible Leave,
which was properly granted and
relieved by the competent authority.
Further the conditions as laid
down in DG P&T letter no 10-44/79.PEII dated
26.11.1979 do not full fill in issuance
of such show cause notice by the
authority in this case, which is
total violation of the orders of
the Dept.
I am one among the five hundred odd members of the said 8
Unions, who have participated in the
above said programme of trade
union action, and it is reported by many that, no other official is given such kind of notice , including the Organisers, who had given the notice in
writing.
Hence, I submit that, issuing
such a notice ,
selectively to some persons, shows the bias attitude of the administration and
totally against the
provisions contained under ID
Act 1947, Indian Trade Union Act, 1926 and the orders of the Dept. as said above, which deserved to be dropped
legally. This is my humble submission.
Thanking
you Madam ,
Madurai, Yours faithfully,
Date :
Thursday, May 29, 2014
ALL INDIA WORKSHOP & SEMINAR ON 7TH CPC - P3 RELATED ISSUES A GRAND SUCCESS
An All India workshop and Seminar on 7th Central Pay Commission Memorandum P3 related issues was organised on 26th & 27th May 2014 at Shah Auditorium, Delhi, by the AIPEU Group ‘C’ (CHQ). It was a grand success and served its purpose. About 277 delegates mainly Branch/Divisional/Circle Secretaries from all Circles (except Punjab) and CWC members attended the camp. The draft Memorandum prepared by the AIPEU Group ‘C’ (CHQ) with the help and guidance of Com. K. V. Sridharan, Ex-General Secretary was supplied to all delegates. About 45 delegates actively participated in the deliberation and many more gave suggestions in writing.
The all India convention and workshop was inaugurated by Com. K. K. N. Kutty, National President, Confederation of Central Government Employees & Workers and also JCM National Council, Standing Committee Member. Com. Kutty explained in detail, the stand taken by Confederation & JCM Staff Side regarding the common demands of the Central Government Employees. Com. S. K. Vyasji, Veteran Leader of Central Government employees and Advisor of Confederation, who is also an authority on Pay Commission related matters, explained the stand of the Staff side on Pension related matters.
Com. Giriraj Singh, President, NFPE & General Secretary R-3, Com. Vrigu Bhattacharjee, Secretary General, Civil Accounts Employees Federation, Com. R. Seethalakshmi, General Secretary, P4, Com. P. Suresh, General Secretary R-4, Com. Virender Tiwari, General Secretary SBCOEA, Com. P. Panduranga Rao, General Secretary, AIPEU GDS (NFPE), Com. B. G. Tamhankar, Ex-President, NFPE & P3, Com. R. N. Parashar, Asst. Secretary General, NFPE, Com. Raghupathy, Asst. Secretary General, NFPE and CHQ office Bearers of P3 and Circle Secretaries attended the workshop and gave their valuable suggestions.
Key Note address in the Seminar on the subject – “7th CPC Memorandum-P3 related issues” was delivered by Chief Guest Shri. Alok Saxena, DDG (PMU) and Secretary to Postal Services Board, having vast experience of working in DoP&T and as Director in 6th CPC and also as Director, Implementation in Ministry of Finance. In his highly appreciated speech he narrated the principles of pay fixation and also various factors relating to Pay Commission. He made it clear that the PA cadre and its promotional cadres and allied cadres deserve a higher pay scale and endorsed the demands raised by P3 CHQ in the draft Memorandum as reasonable and justified.
Com. M. Krishnan, General Secretary, AIPEU Group ‘C’ (CHQ) & Secretary General, NFPE & Confederation presented the draft memorandum by reading each chapter, followed by discussion. He replied all the points raised in the deliberations by the delegates.
Concluding Com. K. V. Sridharan, Ex-General Secretary, in his speech enlightened the delegates on certain important points included in the draft Memorandum.
Com. R. Sivannarayana, President, CHQ presided over the Workshop and Seminar. Com. Balwinder Singh, Financial Secretary, P3 CHQ, presented the credentials and also stressed the need for prompt remittance of quota and other dues to CHQ. Com. N. Subramanian, Deputy General Secretary, P3 CHQ delivered vote of thanks.
The two days camp came to a successful conclusion at 6 PM on 27.05.2014.
Wednesday, May 28, 2014
LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM TO 7th CPC EXTENDED TO 15.07.2014 FOR ALL UNIONS/FEDERATIONS
URGENT/IMPORTANT
LAST DATE FOR SUBMISSION OF MEMORANDUM TO 7TH CPC EXTENDED
As per the request of the JCM National Council Staff side, 7th Central Pay Commission has granted extension of time upto 15.07.2014 (15th July 2014) for submission of memorandum by individual organizations other than JCM staff side. The following is the revised time schedule (Last date).
1. JCM National Council Staff side : 30.06.2014
2. All other Federations/Unions/Associations : 15.07.2014
JCM National Council Staff side will be submitting a common memorandum before 30.06.2014 on the common demands of the Central Government Employees. The Copy of the JCM Staff side memorandum will be placed in the website.
All affiliated organizations of the Confederation are requested to prepare their sectional memorandum well in advance and be ready to submit it before 15.07.2014 to the 7th CPC. New Pay scales demanded by the JCM Staff side will be available in the common memorandum of the JCM Staff side.
Confederation National Secretariat meeting will be held on 31.05.2014 at ITEF Head Quarters (Rajouri Garden) at 2 PM as already notified to finalise the common memorandum. (Please note the time change from 11 AM to 2 PM). All National Secretariat members are requested to attend the meeting.
(M. Krishnan)
Secretary General
ConfederationTuesday, May 27, 2014
Thursday, May 22, 2014
Wednesday, May 21, 2014
TN NFPE COC CALLED FOR DISCUSSIONS WITH THE CPMG,TN ON DPA ISSUES - POSITIVE RESULTS
நேற்றைய தினம் DPA வளாகத்தில் நடைபெற்ற முழு நாள் தார்ணா போராட்டத்தில் தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் நிர்வாகிகளும் , மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு, போராடும் தொழிலாளர்களின் கரத்தை வலுப்படுத்தியதையும், தொடர்ந்து அவர்களது கோரிக்கை அடங்கிய MEMORANDUM நமது தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பாக CPMG அவர்களுக்கு அளிக்கப் பட்டதன் நகலையும் நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
அதன் அடிப்படையில் இன்று மாலை 04.30 மணிக்கு நமது கோரிக்கை மனு மீது பேசிட CPMG அலுவலகத்தின் மூலம் நாம் அழைக்கப் பட்டோம். அதன் படி CPMG அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணைப்புக் குழுவின் கன்வீனரும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர். J. இராமமூர்த்தி , அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன் , கணக்குப் பிரிவின் மாநிலச் செயலர் தோழர். B. சங்கர் , கணக்குப் பிரிவின் அகில இந்திய தலைவர் தோழர். சந்தோஷ் குமார், கணக்குப் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.B. சுரேஷ் ஆகியோர் COC சார்பாக கலந்து கொண்டோம்.
பேச்சு வார்த்தையில் MEMORANDUM இல் அளிக்கப் பட்ட பிரச்சினைகளை நாம் தெளிவாக எடுத்து வைத்தோம் . தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு பகுதியிலும் இத்துணை அதிக அளவில் ஊழியர்கள் நிர்வாகத்தால் பழி வாங்கப்படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டினோம். இது ஒன்றே GM FINANCE அவர்களின் பழி வாங்கும் குரூர குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினோம்.
அனைத்து பிரச்சினைகளையும் பொறுமையாக கேட்டறிந்த மதிப்புக்குரிய CPMG திரு. T. மூர்த்தி அவர்கள் , அமைதி நிலவ அவர் நிச்சயம் உறுதி அளிப்பதாகவும் அதற்கு நமது முழு ஒத்துழைப்பையும் கோரினார். GM FINANCE அவர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்தப்படும் என்றும், இனி வருங் காலங்களில் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசிட வழி காட்டுதல் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
1. நாம் அளித்த பிரச்சினைகளின் முக்கியமானதான ஊழியர்களுக்கு அளிக்கப் பட்ட தண்டனை , மேல் முறையீட்டில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
2. 'BOOK SECTION' பகுதியை CLOSE செய்திடக் கூடாது என்ற நம் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் , இலாக்கா மட்டத்தில் நம் உயர் அமைப்புகள் மூலம் பேசி முழுமையான முடிவு எடுக்கப் படும் வரை இந்த உத்திரவு அமலாகாமல் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்ற நம் கோரிக்கை மீதும் நிச்சயம் பரிசீலிக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
3. TA/DA RECOVERY யால் பாதிக்கப் பட்ட ஊழியர்களின் மேல் முறையீட்டு மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
4. ஊழியர்களின் கழிப்பறை மற்றும் கட்டிடப் பராமரிப்பு குறித்து உரிய உடன் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
5. CAREER PROSPECT வேண்டி அனுப்பப் படும் மனுக்கள் நிச்சயம் நிறுத்தப் படாது என்றும் அப்படி செய்திருந்தால் அது தவறு என்றும் அதன் மீது உரிய அறிவுறுத்தல் செய்யப் படும் என்றும் உறுதி அளித்தார்.
மற்றைய கோரிக்கைகள் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார். பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது ஒரு நல்ல வெளிப்பாட்டை தெரிவித்தது . பேச்சு வார்த்தையின் முடிவுகள் சரியாக அமல் படுத்திடப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் கோரிக்கை மனு மீது உடனடி பேச்சு வார்த்தைக்கு அழைத்து பிரச்சனைகளை தீர்த்திட உடன் உறுதி அளித்த விதமும் , தொழில் தொழில் அமைதியைப் பேணிட CPMG அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்கும் நிச்சயம் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகும் .
இந்த சூழல் அனைத்து மண்டலங்களிலும் நிலவிட வேண்டும் என்றும் நாம் வேண்டுகிறோம். !
பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஒதுங்காமல் , எதிர் நின்று போராடிய
கணக்குப் பிரிவு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர், மாநிலத் தலைவர், அகில இந்திய தலைவர் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்
அந்தப் போராட்டத்தில் சங்கத்தினை நம்பி தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர்களுக்கும் , குறிப்பாக வீரம் செறிந்த தோழியர்களுக்கும் ,
அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் அனைத்து மாநிலச் செயலர்களுக்கும் இதர நிர்வாகிகளுக்கும் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் போராட்ட வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஊழியர் சக்தி அடக்கப் பட்டால் அது அழிவதில்லை !
மாறாக வெடித்து எழும் !
இதற்கு கணக்குப் பிரிவு ஊழியர்கள் சங்கத்தின்
போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு !
வாழ்க ஊழியர் போராட்டம் ! வெல்க ஊழியர் ஒற்றுமை !
இவண்
தமிழ் மாநில அஞ்சல் RMS
இணைப்புக் குழு -NFPE
சென்னை - 5
STAY ORDERS OBTAINED BY DIVL. SEC, AGAINST THE IRREGULAR RT ORDERS OF SPOS., SALEM WEST
முறைகேடான சுழல் மாறுதல் உத்தரவுக்கு நீதிமன்ற இடைக்கால தடை !
சேலம் மேற்கு கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி, சுழல் மாறுதல் செய்வதற்கான இலாக்காவின் வழி காட்டு நெறிமுறைகளை மீறி , தன்னிச்சையாகவும் , தான் தோன்றித்தனமாகவும் INTEREST OF SERVICE என்ற பெயரில் 15 தோழர்/ தோழியர்களுக்கு சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரால் அளிக்கப் பட்ட இட மாறுதல் உத்திரவை எதிர்த்து ,
சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும் ,
நமது மாநிலச் சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலருமான
தோழர். C. சஞ்சீவி அவர்களால்
சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் தொடரப் பட்ட வழக்கில் இன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை தோழர். சஞ்சீவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப் பட்ட சேலம் மேற்கு கோட்ட தோழர்/ தோழியர்களுக்கு இது நிச்சயம் மகிழ்வை ஏற்படுத்தும். தன் தோழர்களின் பாதிப்புகளைக் களைந்திட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து அதில் வெற்றியும் பெற்று வரும் தோழர். சஞ்சீவி அவர்களின் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தொழிற்சங்கத்தில் இளைய தோழர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
அவர்தம் தொழிற்சங்க வாழ்க்கை பல இளைய தோழர்களுக்கு வழிகாட்டுமுகத்தான் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
அவரது பணி தொடரட்டும் ! மேலும் சிறக்கட்டும் !
அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
Tuesday, May 20, 2014
Monday, May 19, 2014
WHO IS A GOOD MANAGER ?..... A LESSON TO LEARN........
One young academically excellent person went to apply for a managerial position in a big company.
He passed the first interview, the director did the last interview, made the last decision.
The director discovered from the CV that the youth's academic achievements were excellent all the way, from the secondary school until the postgraduate research,
Never had a year when he did not score.
The director asked,
"Did you obtain any scholarships in school?"
The youth answered "none".
The director asked,
" Was it your father who paid for your school fees?"
"My father passed away when I was one year old, it was my mother who paid for my school fees.
The director asked,
" Where did your mother work?"
The youth answered,
"My mother worked as clothes cleaner.
The director requested the youth to show his hands.
The youth showed a pair of hands that were smooth and perfect.
The director asked,
" Have you ever helped your mother wash the clothes before?"
The youth answered,
"Never, my mother always wanted me to study and read more books.
Furthermore, my mother can wash clothes faster than me.
The director said,
"I have a request. When you go back today, go and clean your mother's hands, and then see me tomorrow morning.*
The youth felt that his chance of landing the job was high. When he went back, he happily requested his mother to let him clean her hands. His mother felt strange, happy but with mixed feelings, she showed her hands to the kid.
The youth cleaned his mother's hands slowly. His tear fell as he did that. It was the first time he noticed that his mother's hands were so wrinkled, and there were so many bruises in her hands. Some bruises were so painful that his mother shivered when they were cleaned with water.
This was the first time the youth realized that it was this pair of hands that washed the clothes everyday to enable him to pay the school fee. The bruises in the mother's hands were the price that the mother had to pay for his graduation, academic excellence and his future.
After finishing the cleaning of his mother's hands, the youth quietly washed all the remaining clothes for his mother.
That night, mother and son talked for a very long time.
Next morning, the youth went to the director's office.
The Director noticed the tears in the youth's eyes, asked:
" Can you tell me what have you done and learned yesterday in your house?"
The youth answered,
" I cleaned my mother's hand, and also finished cleaning all the remaining clothes'
The Director asked,
" please tell me your feelings."
The youth said,
Number 1,
I know now what appreciation is. Without my mother, there would not the successful me today.
Number 2,
By working together and helping my mother, only I now realize how difficult and tough it is to get something done.
Number 3,
I have come to appreciate the importance and value of family relationship.
The director said,
" This is what I am looking for to be my manager. I want to recruit a person who can appreciate the help of others, a person who knows the sufferings of others to get things done, and a person who would not put money as his only goal in life. You are hired ".
Later on, this young person worked very hard, and received the respect of his subordinates. Every employee worked diligently and as a team. The company's performance improved tremendously.
A child, who has been protected and habitually given whatever he wanted, would develop "entitlement mentality" and would always put himself first. He would be ignorant of his parent's efforts.
When he starts work, he assumes that every person must listen to him, and when he becomes a Manager, he would never know the sufferings of his employees and would always blame others.
DECISIONS OF T.N. NFPE CIRCLE CO-ORDINATION COMMITTEE MEETING HELD ON 17.05.2014.
தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக்
குழுக் கூட்டம்
தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் கூட்டம் கடந்த 17.05.2014 சனி மாலை சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள RED BUILDING வளாகத்தில் அதன் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்(RMS நான்கு ) அவர்கள் தலைமையில் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி (அஞ்சல் மூன்று) அவர்கள் துவக்கி வைக்க இனிதே நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ் மாநில NFPE இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் தோழர். S . ரவிச்சந்திரன், அஞ்சல் நான்கு, K . சங்கரன், RMS மூன்று, B . சங்கர், ACCOUNTS , S . அப்பன்ராஜ், SBCO மற்றும் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், கணக்குப் பிரிவின் தலைவர் தோழர். சந்தோஷ் குமார், அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். GDS மற்றும் நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர்கள் பணி நிமித்தம் வெளியூர்களில் இருந்ததால் கலந்துகொள்ள முடிய வில்லை என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட
முக்கிய தீர்மானங்கள் :-
1. NFPE சம்மேளனத்தில் வைர விழா நிகழ்வை தமிழகத்தில் இணைப்புக்
குழு சார்பாக சிறப்பாக நடத்துவது.
a ) சென்னையில் இந்த விழாவை நடத்துவது.
b ) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28 தேதிகளில் ஏதேனும்
ஒரு தேதியில் இதனை நடத்துவது.
c ) இதற்கான நிதித் தேவையை NFPE இன் அனைத்து உறுப்பு
சங்கங்களும் பகிர்ந்து அளிப்பது .
d ) இதற்கென விழாக் கமிட்டி தனியே அமைப்பது.
e ) தமிழக NFPE இயக்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து
முன்னாள் , மாநிலச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் ,
சம்மேளன மற்றும் அகில இந்திய சங்கங்களின் முன்னாள்
பொதுச் செயலர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் அழைத்து
அவர்களை கௌரவிப்பது .
2. எதிர்வரும் 30.06.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெரும் தமிழ் மாநில
அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்
அவர்களுக்கு 29.06.2014 அன்று திருச்சியில் நடைபெறும் பாராட்டு
நிகழ்வில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு
இணைப்புக் குழு சார்பாக அவர்களை கௌரவிப்பது.(இதற்கென
நிகழ்வில் தனி நேரம் ஒதுக்கப்படும் )
3. மாநில கூட்டு ஆலோசனைக் குழுவுக்கான ஊழியர் பிரச்சினைகளை
அனைத்து மாநிலச் செயலர்களும் எதிர்வரும் 31.05.2014 க்குள் அதன்
செயலருக்கு அளிப்பது.
4. a )மாநில கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக பழிவாங்கும்
மற்றும் அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் GM FINANCE
நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் 20.05.20104 அன்று மாநில
கணக்குப் பிரிவு அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறும் தார்ணா
போராட்டத்தில் அனைத்து மாநிலச் செயலர்களும் , நிர்வாகிகளும்
கலந்து கொண்டு முழு ஆதரவினை அளிப்பது.
b )சென்னை பெருநகர் பகுதியில் பணியாற்றும் அனைத்து
அமைப்புகளில் இருந்தும் ஊழியர்களை பெருமளவில் கலந்து
கொள்ளச் செய்வது.
c ) அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் சார்பாக CPMG இன் உடனடித்
தலையீடு வேண்டி பிரச்சினைகளை MEMORANDUM ஆக அவரிடம்
அளித்துப் பேசுவது.
d) இது குறித்து அஞ்சல் -RMS இணைப்புக் குழு சார்பாக தனியே
சுற்றறிக்கை வெளியிடுவது .
d ) பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால் இணைப்புக் குழு
சார்பாக CPMG அலுவலக வாயிலில் அனைத்து மாநிலச்
சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது.
அன்புத் தோழர்களே !
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானமான கணக்குப் பிரிவு ( AUDIT & ACCOUNTS ) ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்திட, எதிர்வரும் 20.05.2014 அன்று சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள GM FINANCE அலுவலக வளாகத்தில் நடத்தப் படும் தார்ணா போராட்டத்தில், சென்னை பெருநகர் பகுதியில் பணி புரியும் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று ,RMS நான்கு , நிர்வாகப் பிரிவு , கணக்குப் பிரிவு, SBCO , GDS உள்ளிட்ட பகுதிகளின் ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்திட தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழு வேண்டுகிறது.
கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு தனியே செய்தி அனுப்பப்படும் . இதற்கான சுற்றறிக்கை முன்னதாகவே இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அஞ்சல் - RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம், சென்னை 600 005.
Friday, May 16, 2014
P3 NATIONAL WORKSHOP at DELHI - VENUE & STAYAL ARRANGEMENT
AIPEU GROUP-C SPECIAL ALL INDIA CONVENTION OF DIVISIONAL / BRANCH SECRETARIES &
CIRCLE SECRETARIES
and
NATIONAL WORKSHOP ON 7th PAY COMMISSION MEMORANDUM ON P-3 SPECIFIC ISSUES
DATE : 26th &27th May 2014
Venue: SHAH AUDITORIUM,
NO 2, RAJNIWAS MARG, DELHI-110054,
NEAR METRO STATION, CIVIL LINES (GATES 1 & 3).
STAYAL ARRANGEMENT FOR 25,26 & 27th May 2014
1.
KHAMPUR CHAUPAL ( MARRIAGE HALL)
(NEAR METRO PILLAR NO 223 & 224)
SHADIPUR METRO STATION – NEAR
( PATEL NAGAR) NEW PATEL NAGAR ROAD
NEW DELHI- 110008
2.
SUBHAM MARRIAGE HALL
(OPP TO SAROJINI NAGAR DTC BUS DEPOT)
(ADJACENT TO SAROJINI NAGAR P&T QUARTERS)
AFRICA AVENUE ROAD
SAROJININAGAR NEWDELHI – 110023
Subscribe to:
Posts (Atom)