Saturday, May 31, 2014

PROBLEMS CROPPED UP AT MADURAI REGION AGAIN

மதுரை மண்டலம் என்றுமே அமைதி மண்டலமாக இருந்ததில்லை என்பது அதிகாரிகளின் பார்வை . 

அதிகாரிகள் எந்த நாளும் அந்த மண்டலத்தை அமைதி மண்டலமாகவே இருக்க விடுவதில்லை என்பதே தொழிலாளர்களின் குற்றச்சாட்டு.  

நம் மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற போராட்டங்கள் பற்றி உங்களுக்கே தெரியும் . மதுரை அஞ்சல் பயிற்சி மைய பிரச்சினை தொடங்கி , மதுரை, கோவில்பட்டி , சிவகங்கை என்று தொடர்ந்து பிரச்சினைகள்  அதன் விளைவாக போராட்டங்கள்.  

நம்முடைய மாநிலச் சங்கத்தின் முதல் மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் நடைபெற்ற பின்னர் அறிவிக்கப் பட்ட  முதல் போராட்டம் 4.9.13.  உரிய நோட்டீஸ் வழங்கப் பட்டு  அதன் அடிப்படையில்  மாநில அஞ்சல் RMS  இணைப்புக் குழுவில் உள்ள 8 மாநிலச் செயலர்களும்  3.9.13 அன்றைக்கு பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும்.

பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருந்ததனாலும்,  மண்டல அதிகாரியின் உறுதி மொழியை ஏற்றும் பிரச்சினைகள் தீர்க்கப் படும் என்று  நம்பி போராட்டத்தை ஒத்தி வைத்தோம் நாம். 

மீண்டும் புதிய பிரச்சினைகள் வெடிக்கவும், பழைய பிரச்சினைகள் உறுதி அளித்தபடி தீர்க்கப் படாததாலும் 10.1.2014 அன்று  மதுரை மண்டல அலுவலகம் முன்பு  தொடர் முழக்கப் போராட்டம்  மாநில அஞ்சல் -RMS  இணைப்புக் குழுவில் உள்ள 8 மாநிலச் செயலர்களாலும்  எழுத்து பூர்வமாக அறிவிக்கப் பட்டு , நோட்டீஸ் உம்  வழங்கப் பட்டு  கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. அன்றே ஒரு சுற்று பேச்சு வார்த்தை யும்  நடைபெற்றது 

மீண்டும் 21.4.2014 அன்று  மண்டல நிர்வாகம்  நமது அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் எட்டு மாநிலச் செயலர்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.  கிட்டத்தட்ட 7 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்று ஊழியர்கள் பிரச்சினை   தீர்வில் முன்னேற்றம் கண்டோம்.  

இத்தனை நிகழ்சிகள்  இலாக்கா  விதிமுறைகளுக்குள்ளும் தொழிற்சங்க வரம்புக்குள் முறையாகவும்  நடந்த பிறகும் , தற்போது 5 மாதம் கழித்து 10.1.2014 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு மதுரை கோட்ட  முது நிலை கண்காணிப்பாளர் SHOW  CAUSE  NOTICE  வழங்குகிறார் என்பது கேலிக்குரிய  செயலாகும். இது அடிப்படை சட்ட விதிகளுக்கும்  தொழிற் சங்க உரிமைகளுக்கும் எதிரானதாகும்.  இதனை உடனடியாக ரத்து செய்திட மதுரை மண்டல நிர்வாகம்  முன்வரவேண்டும்.

மேலும்  தென் மண்டலத்தில் உள்ள தேனீ, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற  பல கோட்டங்களில்  இலாக்கா விதிகளை மீறி சுழல் மாறுதல் என்ற பெயரில் ,  ஊழியர்களின் விருப்பங்களுக்கு ,மாறாகவும், பணிமூப்பினை  கவனத்தில் கொள்ளாமலும், INTEREST  OF SERVICE  என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்  TA/DA/LUMP SUM GRANT அளித்தும்  தானடித்த மூப்பாக  மாறுதல்  உத்திரவுகளை  இட்டுள்ளதாக புகார் மாநிலச் சங்கத்திற்கு வந்துள்ளது. 

இவற்றையெல்லாம்,  நம்முடைய  தென் மண்டல PMG  அவர்களை   நேரில் சந்தித்து  நம்முடைய மண்டலச் செயலரும் , மாநில உதவிச் செயலரும்  பேசி, குறை தீர் மனு அளிக்க  உள்ளார்கள்.  அந்த பேட்டிக்குப் பின்னரும் பிரச்சினைகள்  தீர்க்கப் படவில்லை என்றால் மீண்டும் களமிறங்கிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் . அந்த நிலை தொடராமல் ஊழியர்களின் நலன் காக்கப் படவேண்டும், சட்ட விதிகள் மதிக்கப் படவேண்டும்,  நிர்வாக - தொழிற்சங்க உறவு  சீராக  அமைந்திடவும் வேண்டும்  என்று  தென் மண்டல நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். 

மதுரை கோட்டத்தில் அளிக்கப் பட்ட நோட்டீஸ் க்கு  மாதிரி பதில் (DRAFT  REPLY ) கீழே அளித்துள்ளோம் .  கோட்டச் சங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

DRAFT  REPLY  :-

From


To

The Sr.  Superintendent of Pos.,
Madurai  Division,
Madurai 625 002.

Through : Proper channel.

Respected  Madam,

         Sub: Issue of  show cause notice for participating in the Dharna                                      conducted by all the 8 Unions of NFPE   of TN Circle in front of Regional 
                  Office  on 10.01.2014 – Reg.
         Ref:  Your office  letter No.
                                                                         …..

With reference to the letter cited,   I am to submit  the following  for your  kind consideration.

Proper notice was issued  to the Regional administration  in writing by    the  Tamilnadu Circle Co-ordination committee of  8  Unions  under  the    banner of NFPE,  submitting   certain items of   demands  twice viz. on 03.09.2013 and  on 10.01.2014 , duly signed by all the Circle Secretaries, announcing  trade union programme of action, which is very well within the ambit of  the provisions contained   under Industrial Disputes Act , 1947 and  Indian  Trade Union Act , 1926, and  not declared as illegal, either by the Department  or by the Regional Administration.

Being  a strong  member  of  AIPEU Gr. C and  under  NFPE,  I have adhered the call given by the Unions , as said above, that too  only after  applying eligible Leave,  which was  properly granted   and  relieved by  the  competent authority. 

Further the conditions as laid down  in  DG P&T letter no 10-44/79.PEII dated 26.11.1979 do not full fill  in issuance of such show cause notice by the  authority in this case, which is  total violation of  the orders of the  Dept.

I am one among the  five hundred odd members of the said 8 Unions, who have participated in the  above said programme of  trade union action, and  it is  reported by many that,  no other official is given  such kind of notice , including the  Organisers, who had given the notice in writing.

Hence, I submit that,  issuing  such  a  notice ,  selectively  to  some persons, shows  the bias attitude  of the administration  and  totally against  the provisions  contained  under ID  Act 1947, Indian Trade Union Act, 1926 and  the orders of the Dept. as said above,  which deserved to be  dropped  legally. This is my humble submission.

                                                          Thanking you Madam  ,
                                                                                                                       
Madurai,                                                                                                         Yours faithfully,
Date :