அன்பார்ந்த தோழர்களே RTP குறித்த வழக்கு நமது மத்திய சங்கத்தால் Principle CAT New delhi யில் தொடரப்பட்டு அது தொடர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். இதனை நமது மத்திய சங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நான் நம்முடைய பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டபோது அவர் இந்த விஷயத்தில் தன்னுடைய தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாகவும் மேலும் அடுத்த hearing ல் தானே முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் கூறினார். எனவே வழக்கு ஏற்கனவே Principle CAT New Delhi ல் நிலுவையில் உள்ள சூழலில் புதியதாக ஒரு வழக்கு சென்னை CAT ல் தொடர அவசியம் இருக்காது. மேலும் புதிய வழக்கு கால தாமதத்தை அதிகரிக்கச் செய்யும் .இதுகுறித்து நமது வழக்கறிஞரை கலந்தாலோசித்தோம் அவரும் சற்று பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். Principle CAT New Delhi ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடுத்த hearing ல் வரவில்லை என்றால் நாம் மேற்கொண்டு புதியதாக ஒரு வழக்கினை சென்னை CAT ல் தொடரலாம். மேலும் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் இதில் வாய்ப்பு இல்லை. இந்த விஷயத்தினை நாம் முழுமையாக உணர்ந்து உள்ளதோடு உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இதில் உள்ள அத்தனை சாத்தியக்கூறுகளையும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த விஷயத்தில் குழப்பம் தரும் சில செய்திகளுக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது மட்டுமே ஒரு சிலரின் வேலை. ஊழியர் நலன் குறித்து நாம் எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றோம். நமது தலைவர் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலாளராக இருந்த போதுதான் டெல்லி Principal CAT ல் இந்த வழக்கானது தொடுக்கப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது மறுக்க முடியாது. மேலும் நம்முடைய NFPE சங்கம் மட்டுமே தபால்காரர் களுக்கான உயர் ஊதியத்திற்காக வழக்கினை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றி பெற்று அனைத்து தோழர்களும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை வாங்குவதற்கு காரணகர்த்தாவாக செயலாற்றி உள்ளது. அதே போன்று RTP வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது .ஆகவே அனைவரும் இந்தத் தருணத்தில் சற்று அமைதி காக்க வேண்டும் .மேலும் மாநில சங்கம் கூடிய விரைவில் அதனுடைய முடிவினை இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து பின்னர் வெளியிடும். எனவே மீண்டும் அமைதி காக்க வேண்டுகிறேன்.
A.வீரமணி
மாநிலச் செயலாளர்.
அஞ்சல் மூன்று