NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்
மாநாட்டு வரவேற்பும் செய்தியும்
"""""""""""""""""""""""""""""" """""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு , வணக்கம்.
நாளை முதல் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் 38 ஆவது மாநில மாநாட்டு நிகழ்வுகள், முன்னோட்டமான மாநிலச் செயற்குழுக் கூட்டத்துடன் துவங்குகின்றன.
இந்த மாநாட்டுக்கான அழைப்பு, அநேகமாக ஏதோ ஒரு வகையில் , நேரிடையாகவோ, தபால் மூலமோ, வலைத்தளம் மூலமோ, email மூலமோ, முக நூல் மூலமோ, தொலைபேசி வழியாகவோ, மாநிலச் சங்க நிர்வாகிகள் மூலமோ, whatsapp மூலமோ தங்களுக்குக் கிடைத்திருக்கும் என எண்ணுகிறோம்.
அப்படி எவருக்காவது எந்த வகையிலாவது கிடைக்காமல்
தவறியிருந்தால் ,
அதற்கு மன்னிப்புக் கோரி இந்த வாட்ஸ் அப் மூலமான அழைப்பையே மாநிலச் சங்கத்தின் நேரிலான அழைப்பாக ஏற்று மாநாட்டிற்கு வந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களையும், விருந்தினர்களையும் கூட இருகரம் கூப்பி
வருக வருக என வேண்டிக் கேட்டுக் கொண்டு வரவேற்கிறோம்.
இந்த மாநாடு நாம் அனைவரும் சேர்ந்தே நடத்துவது ஆகும் . உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் நன்கொடையிலும்தான் இந்த மாநாடு நடக்கிறது.
செங்கை கோட்டத்தில் நடத்தப்படுவதால், அதன் தோழர்களும், அண்டை கோட்டத் தோழர்களும் வரவேற்புக் குழு அமைத்து செயல் படுகிறார்களே தவிர, அவர்கள் தனித்து விடப்பட்டு தடுமாற
நாம் விடக்கூடாது. நம் அனைவரின் ஒத்துழைப்பும்
அவர்களுக்குத் தேவை.
மாநாட்டு ஏற்பாடுகளில் ஏதேனும் குறை இருப்பின், மாநிலச் சங்கத்திற்கும், வரவேற்புக் குழுவுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்களும் குறை தீர்க்க உதவுங்கள். நாங்களும் குறைதீர்க்க உடன் ஆவன செய்கிறோம். நிறை இருப்பின் வரவேற்புக்குழுவின் தோழர்களை வாழ்த்துங்கள். பாராட்டுங்கள். அது அவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்.
மொத்தத்தில் மாநாடு சிறப்பாக நடைபெற்று பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த முடிவுகள, தீர்மானங்களை எடுக்கநம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் உதவும்.
எனவே மாநிலச் சங்கத்தின் மனங்கனிந்த வரவேற்பை மீண்டும் உங்களுக்கு உரித்தாக்குகிறோம்.
அடுத்த செய்தி.
""""""""""""""""""'"''"""""""" "
தற்போது நம் இலாக்காவில், ஏற்கனவே கடந்த 11.7.2016 ல் அறிவிக்கப் பட்ட திட்டமான Outsourced Postal Agency திட்டத்தை பல மாநிலங்களில் அமல் படுத்தி , 16 மாதங்கள் கடந்து தற்போது தமிழகத்திலும் அமல்படுத்திட டெண்டர் கோரியிருக்கிறார்கள்.
இதன்மீது தமிழக அஞ்சல் நான்கு சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருப்பதாக தற்போது whatsapp செய்திகள் மூலம் அறிய வருகிறோம்.
நமக்கு இதுபோலவே, மேலும் பல முக்கிய அகில இந்திய அளவிலான பிரச்னைகளும் உள்ளன.
குறிப்பாக ,
கேடர் சீரமைப்பு உத்திரவானது பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே மீண்டும் அமலாக்கம்,
CSI யின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அமலாக்க முயற்சி ,
IPPB அதிரடியாக அமலாக்கம்,
Demonitisation காலத்தில் செய்த பணிக்கான ஊதியம் வழங்காமை என பல நம் முன்னே உள்ளன.
நாளையே நமது மாநில செயற்குழு நடைபெறுவதாலும்,
தொடர்ந்து நம் மாநில உச்ச மட்ட அமைப்பான மாநில மாநாடு நடைபெற உள்ளதாலும்,
இதில் கலந்து கொண்டு நம்முடைய எண்ணங்களை நமது பொதுச் செயலரே அறிய உள்ளதாலும்,
இந்த மாநாட்டில் விவாதித்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட, தீவிர போராட்டத் திட்டங்களை உங்களின் ஒப்புதலோடு உடன் எடுக்க முடியும் என்ற வாய்ப்பு உள்ளதாலும் ,
மாநாட்டின் போது நிர்வாகிகள் அனைவரும் இங்கேயே கூடியிருப்பதாலும்,
மாநாடு முடிந்த கையொடு ,28, 29.11.17 தேதிகளில் ஏற்கனவே நமது சம்மேளனம் அறிவித்துள்ள பகுதிவாரிக் கோரிக்கைகளின் தீர்வுக்கான இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் கோட்ட/ கிளைகளில் நடத்த வேண்டி உள்ளதாலும்,
நாம் உடனே அவசரகதிப் போராட்டம் அறிவிக்கவில்லை.
நம்முடைய மாநாட்டில் முழுமையாக விவாதித்து உங்களிடம் முடிவு பெற்று தீவிரமாக நாம் ( தேர்ந்தெடுக் கப்படும் அமைப்பு) போராட்ட களத்தில் இறங்குவோம் என்பதை இங்கே பதிவு செய்கிறோம்.
மாநாட்டு வரவேற்பு மற்றும் போராட்ட வாழ்த்துக்களுடன் ,
NFPE அஞ்சல்
மூன்று சங்கம் ,
தமிழ் மாநிலம்.