13.07.2010-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
நமது NFPE சம்மேளனம் உள்ளிட்ட JCA அமைப்பு 04.06.2010 அன்று 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13.07.2010-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.கோரிக்கைப் பட்டியலின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
18 அம்ச கோரிக்கைப் பட்டியல்
அஞ்சலகங்களை மூடாதே! தகுதி இறக்கம் செய்யாதே!
1. MCKINSEY என்ற அமெரிக்க கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பரிந்துரைப்படி இலாகா செய்து வரும் பணிகள் வெளியார் (Outstanding)) மூலம் செய்யப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அஞ்சலப் பணியும் இனி வெளியாருக்குத் தரக்கூடாது. ‘C’ கிளாஸ் அஞ்சலகங்கள் விரைவில் மூடப்படும் என்ற முடிவு வாபஸ் பெறப்படவேண்டும். அனைத்து EDSO-க்களும் EDBO க்களாக தகுதி இறக்கம் செய்யப்படும் என்ற உத்தரவினை விலக்கிக் கொள். “வருமானம் இல்லை” என்பது உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணம் சொல்லி EDBO -க்களை மூடச்சொல்லி இடப்பட்ட உத்தரவை ரத்துசெய். விரைவுத்தபால் சேவை, மெயில் கன்வேயன்ஸ், Data Entry Work போன்ற பணிகளைத் தனியார் மயப்படுத்தாதே.
RMS,MMS ஊழியர்களது பிரச்சனைகளை தீர்வு காண்!
2. RMS,MMS பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்களுடன் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறாதே! பொய்யான காரணங்களைச் சொல்லி RMS ஆபிஸ்களை மூடாதே! ASPOs -க்கள் மூலம் RMS ள்ள HSG I பதவிகளை நிரப்ப உத்தரவிட்ட ஆணையை விலக்கிடு.
தொழிற்சங்கங்களை மதித்து நடந்திடு!
3. JCM Departmental Council கூட்டம், NFPE,GDS சங்கங்களுடன் நடத்த வேண்டிய காலாந்திரக் கூட்டங்கள் போன்றவற்றை முறைப்படி நடத்து 01.01.1996 லிருந்து Telecom-லிலுள்ள TBOP/BCR ஊழியர்களுக்கும் அஞ்சல்துறை TBOP/BCR ஊழியர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடு குறித்து நடுவர் மன்ற தீர்ப்புக்கு அனுப்பிடு.
PROJECT ARROW வா! அல்லது PROJECT SORROW வா!!
4. PROJECT ARROW என்ற பெயரில் ஊழியர்களை கஷ்டப்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்யவைத்து அவர்களை கசக்கிப்பிழியாதே. ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் ட்ரெனிங் போ! பணிக்கு வா!! என வலியுறுத்தாதே. 100% பட்டுவாடா என்ற பெயரில் தபால்காரர்களை துன்பப்படுத்தாதே. உப்புச்சப்பில்லாத விஷயத்திற்கு கூட பட்டுவாடா சரியில்லை என்று சொல்லி தபால்காரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்துசெய்.
அனைத்து காலியிடங்களை நிரப்பு:
5. எல்லா மாநில அலுவலங்களிலும் காலியிடங்களைக் கணக்கிடுவதில் தவறு நடந்துள்ளது. அவற்றை சரி செய்து PA/SA கேடரிலுள்ள காலியிடங்களை சரியாக கணக்கிடு. Postal, RMS, MMS, Administrative Offices, DPLI, Postal Accounts , SBCO, Postal Civil Wing ஆகியவற்றில் 31.12.2009 வரை காலியாக உள்ள பதவிகள் அனைத்தையும் உடனே நிரப்பு. சுந்தர்நகர் PAO-வில் 1997-ல் காலியிடங்களை நிரப்பியதைப் போன்று Postal Accounts ஆபிஸ்களிலுள்ள காலியிடங்கள் அனைத்தையும் “One Time Measure ” ஆக லோக்கல் நியமனம் செய்.
தபால் துறையிலுள்ள அனைத்து கேடர்களிலும் கேடர் சீரமைப்பு செய்திடு:
6.PA/SA கேடரிலுள்ள மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கான கேடர் சீரமைப்பு (Cadre-restructure) செய்திடு. a) போஸ்ட் மாஸ்டர் கேடரில் மட்டும் தன்னிச்சையாக தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டுள்ள கேடர் சீரமைப்பை வாபஸ் பெறு. (b) அஞ்சல் கணக்கு அலுவலகத்தில் பணிபுரியும் LDC, Sorter, DEO (Date Entry Operator) போன்ற கேடர்களை எல்லாம் ஒன்றிணைந்து “Accounts Cadre” என்ற புதிய கேடரை உருவாக்கி முதல் Pay Band லுள்ள தர ஊதியம் ரூ.2400·-வழங்கிடு (c) மாநில ·மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் கல்கத்தாவிலுள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குனர் அலுவலகத்திலும் பணியாற்றிடும் நிர்வாகப்பிரிவு ஊழியர்களுக்கான கேடர் சீரமைப்பு செய்திடு. (d) SBCO -க்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு கேடர் சீரமைப்பு செய்திடு. (e) தபால்காரர்கள் மெயில்கார்டு, குரூப் “டி” (Multiskilled Employees) கேடர்களில் சீரமைப்பு செய்திடு.
ஈடி ஊழியர்களின் நீண்ட கால பிரச்சனைகளைத் தீர்!!
7. a) ஈடி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கிடு (b) அவர்களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்கிடு (c) HRA / CCA / ACP பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கிடு. (d) அவர்களுக்கு எல்லாவிதமான தொழிற்சங்க உரிமைகளையும், நலத்திட்டங்களையும் அளித்திடு. (e) “EDBPM" பணம் கையாளும் போது ரூ.20000·-க்கு ஒரு புள்ளி” என தன்னிச்சையாக அமலாக்கம் செய்த ஆணையைத் திருத்தம் செய். (f) BPM -களுக்கு 01.01.06-லிருந்து புதிய ஊதிய விகிதம் வழங்க மறுக்கும் உத்தரவை வாபஸ் பெறு. (g) ஈடி ஊழியர்கள் செய்து வரும் PLI, RPLI, Pension Payment, NREGS (தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்ட திட்டம்) போன்ற பணிகளுக்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு வேலைப்பளுவில் சேர்க்க உரிய நடவடிக்கை எடு.
MMS டிரைவர், பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகள்
8. (a) பார்லிமெண்ட் செயலகத்தில் பணிபுரியும் டிரைவர்களுக்கு தர ஊதியம் ரூ.2400· வழங்கப்படுவதைப் போலவே MMS டிரைவர்களுக்கு தர ஊதியம் வழங்கிடு. (b) போதிய அளவில் புதிதாக டிரைவர்களை பணி நியமனம் செய்திடு. (c) MMS வேன் டிரைவர்கள் "Logistics" சேவையின்போது நீண்டதூரம் பயணம் செய்தால் Outstation Allowance வழங்க வேண்டும். (d) MMS பணிமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய “தொழில் நுட்ப பயிற்சி” வழங்கிடு. அவர்களுக்கு DEO (Data Entry Operator) களுக்கு தரப்படும் தர ஊதியம் வழங்கிடு.
RRR Candidate, GDS Substitutes களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கு.
9. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 01.01.2006-லிருந்து அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக்குழுவின் ஊதிய விகிதங்கள் அடிப்படையில் RRR Candidates, Casual Labours, Contingent Staff, GDS Substitutes உட்பட அனைவருக்கும் சம்பளம் தந்திடு. முழுநேர கேசுவல் லேபர்களை “Temporary Status MSE” ஆக மாற்றிடு. அதுபோலவே பகுதிநேர கேசுவல் லேபர்களை முழுநேர கேசுவல் லேபர்களாக மாற்றிடு. மேலும் பகுதிநேர, முழுநேர கேசுவல் லேபர்களை காலியாக உள்ள ஈடிப்பதவிகளில் நிரந்தர பணி நியமனம் செய்.
தபால்காரகள் கோரிக்கைகள் மீது தீர்வு காண்.
10.காலியாக உள்ள தபால்காரர், மெயில்கார்டு பதவிகளை நிரப்பிடு. “Single Postman Beat System” என்ற விஞ்ஞானப்பூர்வமற்ற முறையினைக் கைவிடு. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தபால்காரர்களுக்கு தரப்படுகிற Double Duty Allowance ஐ உயர்த்திடு.
MACP திட்ட முரண்பாடுகளை களைந்திடு! சரிவர நெறிப்படுத்து! அமல்படுத்து!!1
11. MACP திட்ட அறிமுகப்படுத்துவதற்கு முந்தைய காலத்திற்கு “Benchmark” பார்ப்பது போன்ற தலமட்டங்களில் எழுகின்ற முரண்பாடுகளை நீக்கு. ரெயில்வே இலாகா போன்று “Average Benchmark” இருந்தால் கூட MACP வழங்கிடு. MACP அமலுக்கு வருவதற்கு முன்னால் வந்த ரெகுலர் புரமோஷனை ஏற்க மறுத்தவர்களுக்கு இப்போது MACP வழங்க மறுக்காதே! மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு MACP வழங்கும்போது ரூ.4200·-அல்லது அதற்கு மேற்பட்ட தர ஊதியத்திற்கு உயர்த்தும்போது Pay Band -2 க்கு கொண்டுவர மறுக்காதே!.
“System Administrator” பிரச்சனைகளை தீர்த்திடு.
12. உயர் ஊதியத்தில் “System Administrator” கிரேடு என்ற புதிய கிரேடை உருவாக்கு. இப்போது பணியாற்றும் “System Administrator” அனைவரையும் அந்தக்கேடரில் நிரந்தரப்படுத்து. அவர்களது மேற்பார்வையிலுள்ள அஞ்சலகங்களிலுள்ள கம்யூட்டர்களில் எண்ணிக்கை, செய்து வரும் பணிக்காக ரெகுலராக பயணிக்கும் நேரம்·தூரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரே மாதிரியான வேலைநேரம், பணிஅளவு நிர்ணயம் செய்திடு. கூடுதலாகச் செய்யும் பணிகளுக்கும், சிறப்பு பணிகளுக்கும் உரிய இன்செண்டிவ் (Financial Compensation) வழங்கிடு.
காலியாகவுள்ள குரூப் “டி” பதவிகளை (Multi Skilled Employees) நிரப்பிடு
13. . Pay Band I ல் ரூ.1800·- தர ஊதியம் பெற்றுவரும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கான ((Multi Skilled Employees) பணி நியமனச்சட்டத்தை இயற்றிடு. GDS ஊழியர்கள, டெம்போரரி ஸ்டேஸ் கேசுவல் லேபர்களின் கல்வித்தகுதியை வலியுறுத்தாமல் காலியாகவுள்ள குரூப் “டி” (MSE) பதவிகளில் நிரந்தரப்பணி நியமனம் செய்ய உரிய ஷரத்தை அச்சட்டத்தில் சேர்த்திடு. காலியாகவுள்ள குரூப் “டி” பதவிகள் (Multi Skilled Employees) அனைத்தையும் நிரப்பிடு.
DOP/DOT அக்கவுண்ட்ஸ் கேடர்களை ஒன்றிணைத்திடு:-
14. DOP/DOT என்ற இரண்டு இலாகாவிலுள்ள Accounts கேடர்களை ஒன்றிணைத்து ஒரே கேடராக்கிடு.
PLI/ RPLI ஐ பணிகள் மையப்படுத்து! புதிதாய் ஆட்களை நியமனம் செய்!
15. PLI/ RPLI வேலைகளை மையப்படுத்திடு. Decentralisation என்ற பெயரில் அனைத்து வேலைகளையும் கீழேயுள்ள ஆபிஸ்களுக்கு தள்ளாதே. மாநில·மண்டல நிர்வாக அலுவலங்களிலுள்ள PLI/ RPLI ஐ செக்ஷன்களுக்கு அதிகரித்து வரும் வேலைப்பளுவை கணக்கில் எடுத்துக்கொண்டு கூடுதலாக ஆட்களை நியமனம் செய்திடு. கல்கத்தாவிலுள்ள அஞ்சல் காப்பீடு திட்ட இயக்குநர் (Director PLI, Calcatta) அலுவலகத்தில் மையப்படுத்தப்பட்ட Accounts System -த்தை கொண்டு வந்திடு. மண்டல·மாநில நிர்வாக ஆபிஸ்களின் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காலியாகவுள்ள அனைத்து பதவிகளையும் நிரப்பு.
Postal Civil Wing கோரிக்கைள்
16. போஸ்டல் சிவில் விங்கில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய விகிதத்தை அஞ்சல் எழுத்தர் சம்பள விகிதத்திற்கு இணையாக மாற்றிடு. கிரேடு-I மற்றும் கிரேடு-II Works Clerk பதவிகள்,Head Clerk பதவிகளின் தகுதியினை உயர்த்திடு. தொழில்நுட்ப·எழுத்தர் பிரிவுகளில் காலியாகவுள்ள பதவிகள் அனைத்தையும் நிரப்பிடு. பல மாநிலங்களுக்கு ஒரு சிவில் விங் தான் இப்போது உள்ளது. நிர்வாக வசதிக்காக ஒரு மாநிலத்திற்கு ஒரு போஸ்டல் சிவில் விங்கை உருவாக்கிடு.
HSG-I/HSG-II பதவிகளை நிரப்பு! அதில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் தா!
17. HSG-I/HSG-II பதவிகளில் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அட்ஹாக் அரேன்ஞ்மெண்டில் பணியாற்றும் அனைத்து சீனியர்களையும் அப்பதவிகளில் நிரந்தரமாக பணியமர்த்து. மேலும் அட்ஹாக் மற்றும் லோகல் அரேன்ஞ்மெண்டில் HSG-I/HSG-II பதவிகளில் பணிபுரிபவர்களுக்கு அப்பதவிகளுக்குரிய கூடுதல் சம்பளத்தை வழங்கிடு.
OTA/OSA அலவன்ஸ்கள் உயர்த்து!
18. இருபது ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வருகிற OTA வை (மிகுதி நேரப்படி) புதிதாய் வாங்கிவரும் சம்பளத்திற்கே உயர்த்திடு. அதுபோல டிரைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் OSA (Outstation Allowance) ஐ உயர்த்திடு.
தோற்றதில்லை! தோற்றதில்லை!
தொழிற்சங்கம் தோற்றதில்லை!
தோற்றதாக வரலாறில்லை!