Tuesday, May 10, 2011

GREAT SUCCESS TO VELLORE AND SALEM WEST STRUGGLES


வேலூர் வெற்றி !

தொடர்ந்த போராட்டங்களின் விளைவாகவும் ,  மக்கள் இயக்கங்களை
வலுப்படுத்தியதன் காரணமாகவும் , ஒன்றுபட்ட காலவரையற்ற
வேலை நிறுத்த அறிவிப்பின் காரணமாகவும் வேலூர் கோட்டத்தில்
அஞ்சலக மூடல் உத்திரவுகள் நிறுத்தப்பட்டன . வீரஞ்செறிந்த
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழிய/தோழர்களுக்கும் JCA
தலைவர்களுக்கும் , நம் மாநிலச் சங்க நிர்வாகி தோழர் அம்ருத
கணேசன் அவர்களுக்கும் , கோட்டச் செயலர் தோழர் வீரன் அவர்களுக்கும்
மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் !
வீர வாழ்த்துக்கள்.!

சேலம் மேற்கு   வெற்றி !

நம்முடைய இடை விடாத முயற்சியின் காரணமாகவும் தலமட்டத்தில்
தொடர்ந்து தொய்வின்றி நடத்திய இயக்கங்களின் காரணமாகவும்  சேலம்
மேற்கு  கோட்டக் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம் !  எந்தவித மிரட்டலுக்கும் அடி பணியாது
தொடர்ந்து இயக்கங்களை மேற்   கொண்ட சேலம் மேற்கு  கோட்டத்தின்
அனைத்து தோழர்களுக்கும் ,  குறிப்பாக

 நம்முடைய  அஞ்சல் மூன்று  கோட்டச் செயலர் தோழர்
சஞ்சீவிஅவர்களுக்கும் அஞ்சல்  நான்கு கோட்ட செயலர் 
தோழர் பிரகாசம் அவர்களுக்கும் 
GDS  கோட்டச் செயலர் அரிராமன் அவர்களுக்கும்
 
நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்!
வீர வாழ்த்துக்கள் !
பிரச்சினைத் தீர்வில் துணை நின்ற நம் அகில இந்திய
சங்கத்திற்கு நம்   நெஞ்சார்ந்த நன்றி !

போராடினால் வெற்றி உண்டு !      போராட்டமே  நம்  வாழ்வு! தலமட்ட
இயக்கங்களை வலுப்படுத்துவோம் !   உயர்மட்டத் தலைமைக்கு வலு சேர்ப்போம் ! 
வாழ்க  NFPE !   வளர்க   ஊழியர்  ஒற்றுமை !