Wednesday, December 21, 2011

CIRCLE SECRETARY JOINS HEADQUARTERS- TIRUVALLIKENI PO 600 005

மாநிலச் செயலர் தலைமையிடத்தில்  பணியில்  சேர்ந்தார்

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  அன்பு வணக்கம் !
இன்று - 21.12.2011-  நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்
தலைமையகமான சென்னைக்கு   சங்கப் பணிக்காக மாற்றலாகி
சென்னை மத்திய கோட்டத்தில்  உள்ள திருவல்லிக்கேணி
அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்தார் என்பதை மகிழ்வுடன்
தெரிவித்துக் கொள்கிறோம் .

இனி மாநிலச் சங்கத்திற்கான தபால்கள் அனைத்தையும் 
மாநிலச் செயலர் பெயருக்கு திருவல்லிக்கேணி சென்னை  
600 005 அஞ்சலக முகவரிக்கே அனுப்பிட பணிவுடன்
வேண்டுகிறோம். 

தலைமையிடத்தில் மாநிலச் செயலருக்கு இட மாற்றம்
கிடைக்க கால  தாமதமானதால் ஏற்பட்ட சங்கடங்கள்
எதுவாகினும் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி மாநிலச் சங்கம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு,
மாநிலச் சங்க நிர்வாகிகளின் ஒன்று பட்ட சக்தியாக
சிறப்பாக செயல் படும் என்று உறுதி அளிக்கிறோம்.

இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து தோழமை
உள்ளங்களும்  , இதனைப் பார்க்காத தோழர்களிடம்
இந்த செய்தியை  தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
J.R. , மாநிலச் செயலர் , மாநிலச் சங்கத்திற்காக.