Wednesday, June 12, 2013

ஒற்றுமை மாநில மாநாடு!

                 

               36வது  தமிழ் மாநில மாநாடு  குடந்தையில்  ஜூன் மாதம் 5-7 தேதிகளில் தோழர் O P குப்தா நகரில் தோழர்.P.ஆறுமுகம் அரங்கில் கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கியது.  தோழர்.J .ஸ்ரீவெங்கடெஷ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.  

    பொது செயலர் தோழர். M .கிருஷ்ணன் அவர்கள் பொது அரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மத்திய மண்டல செயலர் தோழர். A .மனோகரன் வரவேற்ப்புரை ஆற்றினார்.  வரவேற்ப்பு குழு தலைவர் திரு.R.திருநாவுக்கரசு (சேர்மன், அரசு இஞ்சினியரிங் காலேஜ் குழுமம், தஞ்சாவூர்), திரு.T.R.லோகநாதன், திரு.செ.ராமலிங்கம்,Ex.MLA, டாக்டர் .கோவி.செழியன்,MLA, திரு.K .ராஜேந்திரன் (மாநில வழக்கறிஞர் தலைவர்),   தோழர்.K .ராகவேந்திரன்  (மு.மா.பொதுச் செயலர், NFPE), தோழர்.K .V.ஸ்ரீதரன்  (மு.பொதுச் செயலர் அஞ்சல் மூன்று ), தோழர்.R .சிவன் நாராயணா (அ.இ.தலைவர்  அஞ்சல்மூன்று ), சம்மேளன தலைவர்கள் தோழர்.C.சந்திரசேகர், தோழர் S.ரகுபதி, அகில இந்திய தலைவர்கள்


தோழர்.N.கோபாலகிருஷ்ணன், தோழர்.N .சுப்பிரமணி, தோழர்.A .வீரமணி, தோழர்.P.பாண்டுரங்கராவ், தோழர்.R .தனராஜ் , தோழர்.K .C.ராமச்சந்திரன், தோழர். P .நாகராஜன் மற்றும் மாநில செயலர்கள் பலரும் சிற்ப்புரையற்றினர்.  

         அமைப்பு நிலை விவாதத்தை மாநில செயலர் தோழர்.J .ராமமூர்த்தி துவக்கிவைத்து உரையாற்றினார் . அவர் தனது உரையில் தமிழக  அஞ்சல் துறையில், தாந்தோன்றி தனமாக, தறிகெட்டு செயல்படும் அதிகாரிகள், கடிவாளமிட்டு கண்டித்திட தவறும் மாநில மண்டல நிர்வாகங்கள்,  விதி மீறல்கள், அரசு பணத்தை விரயமாக்கிடும் பல்வேறு செயல்பாடுகள் என ஏற்பட்டிருக்கும் சீரழிவினை கட்டுப்படுத்திட, சரிசெய்து தர வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மாநில சங்கங்கள்.   இயக்கங்களின் நிலவி வந்த சண்டைகளினால் வலுப்பெற்ற அதிகாரிகளின் கொட்டத்தினை அடக்கிட, இயக்கங்களில் ஒற்றுமை அவசியம் என்ற கோட்பாட்டுடன், "போராட்டத்திற்காக ஒற்றுமை; ஒற்றுமைக்காக போராட்டம்" என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கப் பதாகையினை தூக்கி பிடித்திடுவோம் என்ற கொள்கை முழக்கங்களுடன் இந்த மாநாட்டில் இன்று நாம் கூடியிருக்கின்றோம். 

   நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள், இயக்கத்தில் எற்பட்ட கரும்புள்ளிகளாக இருந்தாலும், வருங்காலத்தில் அவைகள் துடைத்தெறியப்பட ஒற்றுமையுடன் ஜனநாயகரீதியில்  செயல்படுவது  ஒன்று தான் சரியான பாதை  என்பதனை அனைவரும் உணர்ந்திட  வேண்டும்.  அந்த நம்பிக்கையுடன் தான் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

          மகளிர் கருத்தரங்கம் தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் தலைமையில் 6.6.2013 மாலை 6.00 மணியளவில் நடைப்பெற்றது.  அதில் பாரத் கல்வி குழமத்தின் தலைவர்  திருமதி. புனிதா கணேசன்  அவர்களும் குடந்தை நகர் மன்ற தலைவர் திருமதி.ரத்னா சேகர் அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

             பின்னர் நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற்றது.  கீழ் கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                                                   தோழர். J .ஸ்ரீவெங்கடெஷ் (வட சென்னை)

துணைத் தலைவர்கள்                        தோழர்.V. வெங்கட்ராமன் (தென் சென்னை)
                                                                      தோழர். D .எபிநேசர்காந்தி (கோவை)
                                                                      தோழர். J .ஜானகிராமன்(திருச்சி)

மாநில செயலர்                                      தோழர்.  J .ராமமூர்த்தி (மத்திய சென்னை) 

மாநில உதவி செயலர்கள்                தோழர். R .குமார் (புதுக்கோட்டை)
                                                                      தோழர். S  .வீரன்  (வேலுர் )
                                                                      தோழர். C .சஞ்சீவி  (சேலம் மேற்கு )
                                                                      தோழர். R.V . .தியகராஜபாண்டியன்  (அம்பை  )
                                                                      தோழர். S .K .ஜெகப்ராஜ்  (திருநெல்வேலி)

மாநில நிதிச்செயலர்                         தோழர். A .வீரமணி (அண்ணா சாலை )

மாநில உதவி நிதிச்செயலர்           தோழர். R .பெருமாள் (குடந்தை)

அமைப்பு செயலர்கள்                        தோழர். G .ராமமூர்த்தி (செங்கல்பட்டு)
                                                                     தோழர். V .ஜோதி (திண்டுக்கல்)
                                                                     தோழர். A .ராஜேந்திரன் II  (திருப்பூர் ) 

          மிக குறைந்த காலத்தில் குடந்தை கோட்டம் மாநாட்டின் பொறுப்பை ஏற்று மாநில மாநாட்டினை சீரும் சிறப்புமாக நடத்திய வரவேற்ப்பு குழுவிற்கும் குறிப்பாக குடந்தை கோட்ட செயலர் தோழர்.R .பெருமாள், தோழர்.V .ஜோதி  ஆகியோருக்கு மாநில சங்கத்தின் நன்றிகள்!