அன்புத் தோழர்களுக்கு / தோழியர்களுக்கு  வணக்கம். 
கடந்த 12.10.2014 ஞாயிறு அன்று மயிலாடுதுறை  அஞ்சல் மூன்று கோட்டச்சங்கம் சார்பில் NFPE  வைரவிழா - கருத்தரங்கு  நிகழ்ச்சி ,  மயிலாடுதுறை பட்ட மங்கலத் தெரு  கோவிந்தம்மாள்  திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.  பிற்பகல் சுமார் 02.30 மணியளவில்  கொடியேற்று நிகழ்வுடன் நிகழ்ச்சி துவங்கியது . நமது சம்மேளனக் கொடியை  நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்.  K.V.S.  அவர்கள் ஏற்றி வைக்க,  மாநிலச் செயலர் தோழர்.  J .R . அவர்கள் விண்ணதிரும்  கோஷங்களை எழுப்பிட,  விழா இனிதே துவங்கியது. நமது அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர். K . துரை  அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து  கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன் அவர்கள்  தலைமையுரை நல்கிட அதனைத் தொடர்ந்து  கருத்தரங்க நிகழ்வு  துவங்கியது.
நம் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நம்முடைய அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றினை  உணர்வு பொங்க மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.  தொடர்ந்து  நம்முடைய  அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலைமை குறித்தும் , மாறிவரும் சூழலில்  நம்முடைய தொழிற்சங்கக் கடமை குறித்தும் நாம் இதுவரை அறியாத பல  செய்திகளை  மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.  பின்னர் பேசிய  நம்முடைய  முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S.  அவர்கள் , ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம்முடைய சங்கம்  மற்றும் சம்மேளனம் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் சாராம்சம் குறித்து விரிவானதொரு சிறப்பான உரையினை  வழங்கினார். 
இதனை அடுத்து , மயிலாடுதுறையில்  பணியாற்றி ஒய்வு பெற்ற   இயக்கத் தின் மூத்த  தலைவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இறுதியில் , NFPE  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ்,  அஞ்சல் மூன்று மண்டலச் செயலர் தோழர். R . குமார் , அஞ்சல் மூன்று மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R . பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார். 
இந்த நிகழ்வு கிட்டத்தட்ட  ஒரு மத்திய மண்டல மாநாடு போல அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.  மண்டலம் முழுதும் இருந்து சுமார் 300 தோழர்கள் கொட்டும் மழையிலும்  கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இரவு 08.00 மணியளவில்  கோட்டச் சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. 
நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட  சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.















