40 மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு
இன்று 20/2/2022 தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் மதுரை கோட்டத்தின் தலைவரும் மதுரை மண்டல செயலாளர் அருமை தோழர் R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
மதுரை கோட்டச் செயலர் தோழர் S.நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார்
20 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது இம்மாநாட்டிற்கு மண்டல செயலரும் மதுரை கோட்ட தலைவருமான தோழர் R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்பு குழு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்
பொதுக்குழுவின் உறுப்பினர்களில் பலர் அவரவர் கருத்துக்களை எடுத்துக் கூறினர் மாநாடு சிறப்பான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர் பின்பு மாநில செயலர் தோழர் A.வீரமணி மாநில தலைவர் தோழர் R.குமார் மாநில சங்க ஆலோசகர் தலைவர் K V S விளக்க உரை ஆற்ற தேனி கோட்ட செயலர் தோழர் செல்லதுரை மற்றும் அஞ்சல் நான்கு தோழர்கள் பங்கேற்றனர்
கோட்டச் செயலர் தோழர் S.நாராயணன் நன்றி கூற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது மாநாட்டு சம்பந்தமாக விரிவான அறிக்கை வரவேற்புக் குழு வெளியிடும்
தோழமையுடன்
A.வீரமணி
மாநிலச் செயலாளர் அஞ்சல் மூன்று