காரைக்குடி கோட்டத்தின் 41வது கோட்ட மாநாடு
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
காரைக்குடி கோட்டத்தின் 41வது கோட்ட மாநாடு 3.4.22 காலை 10 மணிக்கு தலைமை அஞ்சலகத்தில் கோட்டத் தலைவர் D. சாமுவேல் தேவ சித்தம் தலைமையில் தேவேந்திரர் மகாலில் மாநாடு நடைபெற்றது .
தோழர் A.ஜான்சன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஈராண்டறிக்கையை கோட்டச் செயலர் K.A.சேதுஅரசன் அவர்கள் சமர்ப்பித்தார். நிதிச் செயலர் A.ஜான்சன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
கோட்டத் தலைவர் :D. சாமுவேல் தேவசித்தம்
கோட்டச் செயலர்:K. காளிதாஸ்
நிதிச் செயலர்: ஸ். முத்துக்குமார்
அதன் பின்பு தென்மண்டல செயலர் தோழர் R. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மதுரை கோட்ட செயலாளர் S.நாராயணன் மதுரைகோட்ட பொருளாளர்A. பிச்சை முன்னாள் கோட்டச் செயலர் ரமேஷ் முன்னாள் கோட்ட சங்க நிர்வாகிகள் முத்து ராக்கு தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
A.Veeramani
Circle Secretary
AIPEU Gr-C, TN Circle