Thursday, October 7, 2010

அன்புத் தோழா ...   உன்னுடன் ஒரு நிமிடம் !

இலாக்கா வரலாற்றில் இதுவரை இல்லாத இமாலய வெற்றி !
NFPE பேரியக்கத்தின் அறிவார்ந்த தலைவர்களின் அடுக்கடுக்கான வெற்றி !
வேலைப்பளுவால்  வாடிக் கிடந்த ஊழியரின் வாட்டம்  போக்கிய வெற்றி !
ஆட்பற்றாக்குறையை நீக்கிடப் பெற்ற அபார  வெற்றி !

1 . 1 .4 .09 முதல் ஸ்க்ரீனிங் கமிட்டி யில் இருந்து முழுமையாக விலக்கு!

2 . ஜூன் 2009இல் 
     11 அம்சக்   கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய  இயக்கம் !
     விளைவு ......  இலாக்கா வரலாற்றில் இல்லாத அளவில் 2006  , 2007 ,  
     2008க்கான   7450  ADR காலியிடங்கள் நிரப்பிட உத்திரவு ! அதில்
      தமிழகத்திற்கு  மட்டும் 569 எழுத்தர் காலியிடங்கள் நிரப்பப் பட்டது !

3.   13 .7 .2010  முதலான   கால  வரையற்ற  வேலை நிறுத்த அறிவிப்பு -
      அதற்கு முன்னோட்டமான  5  கட்ட நாடு தழுவிய போராட்ட இயக்கம் !
     விளைவாக 18 அம்சக் கோரிக்கை மீது 12 .7 .10  இல் எழுத்து பூர்வமான
     ஒப்பந்தம் ! .......  ஒப்பந்தப் படி


     A ) தமிழகத்தில் மட்டும் 2009 , 2010 க்கான  615 நேரடி எழுத்தர்
          காலியிடங்கள் உரிய தேதி நிர்ணயம் செய்து அதற்குள்
          நிரப்பிட உத்திரவு !

     B) 2006 , 2007 , 2008 க்கான தபால் காரரால் நிரப்பப் படாத  800 RESIDUAL
         எழுத்தருக்கான காலியிடங்கள் GDS ஊழியருக்கு தேர்வு மூலம்
         நிரப்பிட உத்திரவு ! அந்தத் தேர்வு முடிவும் 5 .10 ௦.2010௦ க்குள்
         அறிவிக்கப்பட்டு , அதில் மீதமுள்ள நிரப்பப் படாத காலியிடம்
          நேரடித் தேர்வுக்கு  அறிவிக்கப்படும் என்ற உத்திரவு !

    C ) அவ்வாறே மீதம்  உள்ள காலியிடங்களும் .... அதையும் தாண்டி
          2009 க்கான RESIDUAL காலியிடங்களையும் சேர்த்து  மொத்தம்
          1552 எழுத்தர்  காலியிடங்கள் அறிவிக்கப் பட்டு ...  விண்ணப்பிக்க
          வசதியாக  விண்ணப்பக் கடைசி நாளும் நீட்டிப்பு !

    D )   இது தவிர DEPARTMENTAL QUOTA வுக்கான எழுத்தர்  காலியிடங்கள்
          அந்தந்த கோட்டங்களில் அறிவிக்கப் பட்டு அதற்கும்  தேர்வு
           தேதி அறிவிப்பு !

    E )   இதையும் தாண்டி........... 1983 லும் 1991 லும் TBOP மற்றும்
            BCR க்காக MATCHING SAVINGS  என்று  ஒழிக்கப்பட்ட 20 %
            SUPERVISORY பதவிகளையும் 6 %  எழுத்தர் பதவிகளையும்
            மீண்டும் 1 .9 .08 முதல் காலியிடமாக அறிவித்து நிரப்பிட
            உத்திரவு !

     F)    இதற்கும் மேலாக ......  இலாக்காவால் தன்னிச்சையாக
            அறிவிக்கப்பட்ட பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய POSTMASTER
           CADRE  என்ற  உத்திரவை நிறுத்தியதுடன் ...  20 ஆண்டுகளுக்கும்
           மேலாக  நம்  இலாக்காவில்  அறிமுகப்படுத்தப்படாத  புதிய
           பதவி உயர்வுத் திட்ட  முறையாக ....   CADRE RESTRUCTRING
           ஏற்கப்பட்டு ...  அதைப் பரிசீலித்து  டிசம்பர் க்குள் முடிவெடுக்க
           ஊழியர் தரப்பையும் சேர்த்த கமிட்டி அமைப்பு !

         அதில்......................
           காலங்காலமாய் பாதிக்கப் பட்டு வரும் SYSTEM   ADMINISTRATOR
           களுக்கு ...  இதர துறைகளில்  உள்ளது போல் இதே தகுதிக்கு
           SYSTEM ASSISTANT  என்ற  பெயருடன் உயர் ஊதிய விகிதம்
           அளிக்க பரிசீலிப்பு!

இவை யாவும்  ஒரு சிறு பகுதியே!
இன்னும் பட்டியலிட்டால் ....  தபால்காரர் ....  MTS ...   RMS ...  MMS ...
GDS  பகுதி.... என்று பட்டியலிட்டால் இந்த வெப் சைட் போதாது!

முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனைத்து பகுதி தொழிலாளி
வர்க்கத்தையும் தாக்கிக் கொண்டுள்ள இந்த மோசமான சூழலிலும் கூட
நம் தலைமை ..... KVS   .... KR  ..... கிருஷ்ணன் .... போன்றோரது
அறிவார்ந்த  தலைமை நமக்கு இத்தனை  பெற்றுத் தந்துள்ளது
என்றால்  ......

 நாம்  நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும் ...
நம்  தலைமைக்கு  நெஞ்சார்ந்த  நன்றி சொல்ல வேண்டும் ....

அவர்கள் அறிவிக்கும் இயக்கங்களுக்கு  நம் முழுமையான
பங்களிப்பை ....  ஒத்துழைப்பை  அளிக்க வேண்டும் ... அதுவே
நாம்  இயக்கத்திற்கு காட்டும்    நன்றிக்  கடன் .

தலைவர்களை  வாழ்த்துவோம் ... நன்றி சொல்வோம் ...
NFPE   பேரியக்கத்தின் விழுதாக நாம் தாங்கி நிற்போம் !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அன்புத் தோழா ... உன்னுடன் ஒரு நிமிடம் !
இந்தப் பகுதி ஒரு புதிய பகுதி . வெறும் இலாக்கா உத்திரவுகள் ..
சம்மேளன செய்திகள் .... அகில  இந்திய சங்கச் செய்திகள் ..
என்றில்லாமல் ...  நம் எண்ணங்கள் .... சிந்தனைகளைப்
பகிர்ந்து கொள்ள ஒரு முயற்சி. இந்தப் பகுதி குறித்து ..
இதில் உள்ள கருத்துக்கள் குறித்து .. உங்கள் விமர்சனங்கள் ..
எண்ணங்கள் ... ஆலோசனைகள் ...  எதுவானாலும் .. நீங்கள்
கண்டிப்பாக அளிக்க வேண்டுகிறேன் .  இதில் உள்ள
COMMENTS பகுதியிலோ  ... அல்லது  இ - மெயில் மூலமோ ..
அல்லது SMS மூலமோ ...  அல்லது .. கடிதம் மூலமோ
கண்டிப்பாக அனுப்பவும் .....  தொடர்வோம்  இனி ....

 உங்கள் தோழன்
J.R. , CIRCLE SECRETARY, AIPEU GR. C., TAMILNADU CIRCLE.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@