Friday, November 19, 2010

RESULTS OF DIRECT RECRUITMENT FOR PA UNDER TN CIRCLE

அன்புத் தோழர்களே ! கடந்த 14.11.2010  அன்று நடைபெற்ற
எழுத்தர் தேர்வின் விடைத்தாள்கள் 15.11.2010 அன்றே 
திருத்தப்பெற்று 16.11.2010 இரவே  தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியல் வெளியிடப் பட்டது . இது நமது 13.7.2010
காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பின் விளைவாக
12.7.10 அன்று ஏற்பட்ட எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தின்
விளைவே ஆகும். அஞ்சல் வரலாற்றில் ஒரே நாளில்
தேர்வு - மறு நாளில் முடிவு - ஒரே இடத்தில்
விடைத்தாள் திருத்தம் என்பது - இது வரை இல்லாத 
ஒன்று ஆகும் . இப்படிப் பட்ட இமாலய சாதனையை
சத்தமே இல்லாமல் - சிறு விளம்பரம் கூட இல்லாமல்  
செய்திட்ட  நமது தலைவர்களுக்கு - குறிப்பாக -
நமது பொதுச் செயலர்  KVS அவர்களுக்கும்  சம்மேளன
மா பொதுச் செயலர்  KRISHNAN அவர்களுக்கும் நம்
மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி . 
மாநிலம் முழுவதுமான தேர்வுப் பட்டியல் கீழே
உள்ள வெப் சைட் இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது . 
CLICK  செய்து பார்க்கவும்.

Http://tamilnadupost.nic.in/rec/results2010.htm

தோழமை வாழ்த்துக்களுடன்
J.R. ,  CIRCLE SECRETARY.