கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு ஓர்  அன்பு வேண்டுகோள். !
அன்புத் தோழர்களே ! JCA  வின் வேண்டுகோளின் படி கீழ்க் காணும் 
நடவடிக்கைகளில்  உடனே  ஈடுபடவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம். 
1 . எதிர்வரும் 14 .6 .2011 அன்று வேலை நிறுத்த நோட்டீஸ் சட்ட பூர்வமாக 
     வழங்கப்பட உள்ளது. அன்றைய தேதியில் அனைத்துக் கோட்ட/கிளைகளிலும்
     மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்தந்த பகுதி கோட்ட அதிகாரியிடமோ அல்லது
     தலைமை அஞ்சலக  அதிகாரியிடமோ  வேலை நிறுத்த நோட்டீஸ் ஐ  
     கோட்டச் செயலரோ அல்லது கிளைச் செயலரோ கண்டிப்பாக வழங்க 
     வேண்டும். இது குறித்து  பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி செய்திக்
     குறிப்புகளை கண்டிப்பாக அளிக்க வேண்டும். நோட்டீஸ் மற்றும் 
     செய்திக் குறிப்புகளின் நகல் கண்டிப்பாக மாநில மற்றும் மத்திய 
     சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும். 
2 . தல மட்டங்களில் அனைத்து சங்கங்களுடன் கலந்து உடன் JCA அமைத்
     திட வேண்டும் .
3 . கோட்ட / கிளை மட்டங்களில் ஆங்காங்கு உள்ள உயர்மட்ட சங்க 
     நிர்வாகிகளை அழைத்து வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் 
     நடத்திட வேண்டும் . அதன் நோட்டீஸ் நகலை கண்டிப்பாக மாநில/
     மத்திய சங்கங்களுக்கு அனுப்பிட வேண்டும்.
4 . இதர பகுதி தொழிற் சங்கங்களுடன் கலந்து , அரசியல் மற்றும் பொது
     மக்கள் இயக்கங்களுடன் கலந்து, வேலை நிறுத்தத்தின் வீச்சினை 
     பெரும் ஆதரவுடன் விரிவு படுத்திட வேண்டும். வேலை நிறுத்த 
     காலத்தில் அரசாங்கம் ஏற்படுத்தும் எதிர்ப்பு பிரச்சாரத்தினை 
     இந்த  செயல் முனை மழுங்கச் செய்யும். 
5 . நம்முடைய அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள் கண்டிப்பாக 
     எதிர் வரும் 19 .06 .2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ள JCA  வின் 
     அகில இந்திய கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும். 
     இடம்:-      ஸ்ரீ பத்மம் கல்யாண மண்டபம், NO .  6 /2  ராதாகிருஷ்ணன் சாலை 
     பாண்டி பஜார் , தி .நகர்   தலைமை  அஞ்சலகம்அருகில், சென்னை 17 . 
     நேரம் :     காலை 09 .00  மணி தொடக்கம் .  
     P  3  கோட்ட/கிளைச் செயலர்களின்செலவு உணவு  மற்றும் பங்கேற்பதில்  
     உள்ள      விஷயம்  குறித்து நாம் தனியே கலந்து முடிவு செய்வோம்.  
நிச்சயம் உங்களின் முழு வேகத்தினை உங்கள் செயல்பாடுகள் மூலம் 
அறிவோம்  என்ற நம்பிக்கையுடன்  போராட்ட வாழ்த்துக்களை கூறி 
முடிக்கிறோம்.  நன்றி.  வணக்கம் . 
போராட்ட வாழ்த்துக்களுடன்
N . கோபாலகிருஷ்ணன் A வீரமணி .
செயல் தலைவர் . துணைப் பொதுச் செயலர்
அகில இந்திய சங்கம் அஞ்சல் மூன்று மற்றும்
தமிழ் மாநில P3 சங்க போராட்டக்குழு பொறுப்பாளர்கள் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
N . கோபாலகிருஷ்ணன் A வீரமணி .
செயல் தலைவர் . துணைப் பொதுச் செயலர்
அகில இந்திய சங்கம் அஞ்சல் மூன்று மற்றும்
தமிழ் மாநில P3 சங்க போராட்டக்குழு பொறுப்பாளர்கள் .
