Saturday, May 5, 2012

UDUMALAI BRANCH - A STANDING EXAMPLE

                                       உடுமையில்  இரு பெரும் விழா 

கடந்த 29.04.2012  அன்று  நமது அஞ்சல் மூன்று  உடுமலை கிளையின் சார்பாக 
அதன் முன்னாள் தலைவர்  தோழர் . A.  பாலகிருஷ்ணன்  அவர்களுக்கு  பணி
நிறைவுப் பாராட்டு விழாவும் ,  ஊழியர்  விழிப்புணர்ச்சி  வேண்டி  மிகச்  சிறப்பான  கருத்தரங்கு நிகழ்ச்சியும்  நடைபெற்றது .   விழா நிகழ்ச்சிகளை 
உடுமலை கிளையின் செயலர்  தோழர் . முத்துசாமி அவர்கள்  முழு  ஈடுபாட்டுடன்  நடத்தியது  பாராட்டத் தக்கது.

விழா நிகழ்ச்சிகளுக்கும்  கருத்தரங்கத்திற்கும்  கிளையின்    தற்போதைய  தலைவர் தோழர். M. கிருஷ்ணசாமி அவர்கள்   தலைமையேற்று நடத்த ,  உதவி செயலர் தோழர்.B.  ராமசுப்ரமணியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .

கருத்தரங்கில் ' தபால் தந்தி  தொழிற்சங்க வரலாறு '   என்ற  தலைப்பில்  சம்மேளன உதவி மா பொதுச் செயலர்  தோழர். S.  ரகுபதி அவர்கள் ஆற்றிய  விரிவான உரை மிகச் சிறப்பாக  அமைந்தது.

'GDS  ஊழியர்களுக்கு  புதிய சங்கம் AIPEU GDS (NFPE) -  உதயம் -அவசியம்-   பின்னணி' என்ற தலைப்பில்  தோழர் S. கருணாநிதி MEMBER, STAFF SIDE JCM(DC) அவர்கள்   ஆற்றிய உரை  GDS ஊழியர்கள்  மத்தியில்  விழிப்புணர்ச்சியை  ஏற்படுத்துவதாக அமைந்தது .

'மாறிவரும் சூழலில் தொழிற்சங்கத்தில்  இளைஞர்களின் பங்கு ' என்ற 
தலைப்பில்  அஞ்சல் மூன்றின்  மாநிலத் தலைவர் தோழர்   J.ஸ்ரீவெங்கடேஷ் 
அவர்கள் ஆற்றிய உரை  இளைஞர்களிடையே  எழுச்சியை ஏற்படுத்துவதாக  அமைந்தது.

'அஞ்சல் ஊழியர் கோரிக்கைகள் - போராட்டங்கள் - தீர்வுகள் " என்ற  தலைப்பில்  மாநிலச் செயலர் தோழர் . J.R.  அவர்கள்  ஆற்றிய  உரை கடந்த  காலப் போராட்டங்கள்- அதன் விளைவாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் -
அதன்  மீது  நாம் பெற்ற   உத்திரவுகள் - என  விரிவான  விளக்கங்களுடன்  மிகச் சிறப்பாக  அமைந்தது .

இறுதியில் ,  " மனிதனாக வாழவேண்டும் " என்ற தலைப்பில் கோவை மூத்த தோழர் . M. திருமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை  , மனிதனை , மனிதனாக  வாழச் செய்திட வழிகாட்டும் விளக்காக அமைந்தது.

மொத்தத்தில் கருத்தரங்கு பயனுள்ள வகையில் மிகச் சிறப்பாக  அமைந்தது என்றால்  அது  நிச்சயம்  மிகை இல்லை.

விழா  நிகழ்ச்சிகளில் மாநில உதவி நிதிச் செயலர் தோழர் C.P.  திலகேந்திரன் , மண்டலச்  செயலர் தோழர் . N.S. ,  AIPEU GDS (NFPE)  அகில இந்திய உதவிப்   பொதுச் செயலர் தோழர். K.C. ராமச்சந்திரன் , பழனி  அஞ்சல்  மூன்றின்  செயலர் தோழர். A.S.M. ராஜ்குமார் ,  உள்ளிட்ட பல தொழிற்சங்க நிர்வாகிகள் , முன்னோடிகள்  கலந்து  கொண்டது  விழாவை மேலும் சிறப்பாக்கியது .

இத்தகைய சிறப்பான கருத்தரங்கு  நிகழ்ச்சியை ,  தனது பணி  நிறைவுப் பாராட்டு நிகழ்ச்சியுடன்  சேர்த்து  பயனுள்ள  வகையில்  செய்திட  பணித்த  ,  தலைவர்  பாலகிருஷ்ணன் அவர்களின்  பாங்கு , அவரது  தொழிற்சங்க ஈடுபாட்டை பளிச்சென படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது. 

முழு ஈடுபாட்டுடன்  நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்து  , சிறப்பாக நடத்திய உடுமலை கிளையின் தோழர்களுக்கு , குறிப்பாக  அதன் செயலர் தோழர். முத்துசாமி அவர்களுக்கு  மாநிலச் சங்கத்தின்  மனம் திறந்த பாராட்டுக்கள் ! . வாழ்த்துக்கள் ! .

இந்த நிகழ்ச்சி  மற்றைய  கிளைகளுக்கும்  ஒரு வழிகாட்டியாக  அமைந்தது .
மற்றைய கிளைகளும் இதுபோல , தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு  ஏற்படுத்தக் கூடிய வகையில் , பயிலரங்குகளோ  அல்லது  கருத்தரங்குகளோ  நடத்திட வேண்டுகிறது மாநிலச் சங்கம்.