அன்பிற்கினிய அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களே !வணக்கம் !
ஏப்ரல் மாதம் துவங்கிவிட்டது . ஆம் ! உறுப்பினர் சேர்க்கை இந்த மாதத்தில் தான் செய்திட வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் !
புதிய உறுப்பினர்கள் சேர்த்திட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , உங்களது கோட்டச் சங்கத்தின் செயல்பாடுகளில்/ மாநிலச் சங்க செயல்பாடுகளில் / நமது மத்திய சங்க செயல்பாடுகளில் /சம்மேளனத்தின் செயல்பாடுகளில்/ நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல்பாடுகளில் ஈர்ப்பு ஏற்பட்டு பிற சங்கங்களில் இருந்து மாறி நம் சங்கத்தின் சேர்ந்திட விரும்பும் தோழிய/ தோழர்களை நமது சங்கத்தில் சேர்த்திடவும் இதுவே நேரம் . அதற்கான பணியினை இன்றே துவக்குங்கள் !
நம் சங்கத்தில் இருந்து கடந்த கால பிரச்சினைகளால் மாற்று சங்கத்திற்கு சென்ற தோழர்களையும் , இன்னும் விலகியே நிற்கும் ஒரு சில தோழர்களையும் கூட நமது சங்கத்தில் மீண்டும் சேர்த்திட = இது அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் = நமக்கும் கூட ஒரு சந்தர்ப்பம் ஆகும். சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். உடன் விழிப்புடன் , துடிப்புடன் செயலாற்றுங்கள் !
இது போல அஞ்சல் நான்கு , மற்றும் AIPEU GDS NFPE இல் சேர்ப்பதற்கும் நம்முடைய தோழர்களுக்கு, அஞ்சல் மூன்று தோழர்கள் கண்டிப்பாக உதவிடுங்கள் ! AIPEU GDS சங்கம் தான் நமது சங்கம் (NFPE) ஆகும் என்பதை நினைவில் கொண்டிட வேண்டும் . இன்னமும் பழைய நினைவுகளில் நாம் இருப்போமேயானால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலவாகும் !
இதற்கான படிவ நகல் கீழே தனித்தனியே அளிக்கப்பட்டுள்ளன . படிவங்களை உறுப்பினர்களிடம் இருந்து பெற்று , அனைத்து படிவங்களையும் ஒரே COVERING LETTER வைத்து LIST உடன் அவற்றை கோட்ட கண்காணிப்பாளர்அலுவலகத்தில் எதிர்வரும் 30.04.2017 அன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்கவும் . அதனை ஒப்படைத்ததற்கு அத்தாட்சியாக ஒரு நகல் எடுத்து அந்தப் பிரதியில் கண்காணிப்பாளர் அலுவலக பொறுப்பு அதிகாரியிடம் அதற்கு ஒப்புதல் கையெழுத்து பெறவேண்டும்.
நிச்சயம் இந்த ஆண்டு அதிக உறுப்பினர்களை நீங்கள் சேர்த்திடுவீர்கள் என்று நம்புகிறோம். அதற்கு மாநிலச் சங்கத்தின் உதவி எப்போது வேண்டுமானாலும் பெறலாம். அஞ்சல் மூன்று சங்கத்தின் அனைத்து மாநிலச் சங்க பொறுப்பாளர்களும் அந்தந்த பகுதிகளில் நிச்சயம் உங்களுக்கு உதவிடுவார்கள் என்று உறுதி கூறுகிறோம்.!
வெற்றி நமதாகட்டும் ! வாழ்த்துக்கள் !
(முந்தைய படிவ நகல் கொடுக்கப்பட்டுள்ளது . வருடத்தை மாற்றிக் கொள்ளவும் )
AIPEU GR 'C' SWITCH OVER FORM (PLEASE CHANGE THE YEAR AS 2017)
WITHDRAWAL FORM FROM AIGDSU (PL CHANGE THE YEAR AS 2017 AND NAME AS AIGDSU)
NEW MEMBER FORM FOR AIPEU GDS (PL CHANGE THE YEAR AS 2017)