Monday, January 7, 2013

COM. O.P. GUPTA PASSED AWAY


  தோழர் O .P . குப்தா  இயற்கை எய்தினார் !



அன்னாரது  மறைவுக்கு 


 தமிழக அஞ்சல் மூன்றின் கொடிதாழ்ந்த அஞ்சலி !

NFPTE  பேரியக்கத்தின் முது பெரும் தலைவரும் , தொடக்க காலம் முதல்  இந்த நாள் வரை  அஞ்சல்,  தொலைத்தொடர்பு ஊழியர்களுக்காக  அயராது உழைத்தவருமான 

தோழர். O .P . குப்தா  அவர்கள் 
Ex-Secretary General, NFPTE & Ex.-General Secretary R-4 

நேற்று (06.01.2013)  மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவு 
தொழிலாளர்  வர்க்கத்திற்கு , குறிப்பாக  அஞ்சல் , தொலைத் தொடர்பு  தொழிற்சங்க இயக்கங்களுக்கு 
பேரிழப்பாகும் !

அவரது மறைவிற்கு  நமது மாநிலச் சங்கத்தின்  
கொடி  தாழ்ந்த அஞ்சலி !

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும்  
லட்சக் கணக்கான தோழமை உள்ளங்களுக்கும்  தமிழக 
அஞ்சல் மூன்றின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் 
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நமது  சம்மேளன, சங்கக் கொடிகளை  மூன்று நாட்கள்  அரைக் கம்பத்தில்  பறக்க விடுமாறு வேண்டிக்  கேட்டுக் கொள்கிறோம்  !

ஆங்காங்கே , அஞ்சல் நான்கு, GDS , RMS  பிரிவு தொழிற் சங்கங்கள்  உள்ளிட்ட NFPE  உறுப்புச் சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு  இயக்கத் தோழர்களுடன் கலந்துகொண்டு  அஞ்சலிக் கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம் ! அன்னாரின் அழியாப்  புகழுடம்பிற்கு  மேலும் 
பெருமை சேர்க்க வேண்டுகிறோம் !