Wednesday, February 27, 2013

CCR CASES - DISCUSSED WITH THE ADMINISTRTION


1.கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் RMS  பகுதியில் '0' HOUR  இல் இருந்து வேலை நிறுத்தம் துவங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வேலை நிறுத்தத்தை  இரண்டு நாட்களுக்குப் பதிலாக நான்கு  நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததாக கணக்கெடுத்து அதற்கு சம்பளப் பிடித்தம் செய்திட  நிர்வாகம் உத்திரவிட்டது . இதனை எதிர்த்து JCA  தலைவர்கள் PMG CCR  உடனும் CPMG  உடனும் பேச்சு வார்த்தை நடத்தியதன் பலனாக தற்போது அந்த உத்திரவு விலக்கிக்  கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு திறந்த மனதுடன்  பெருமுயற்சி எடுத்த PMG CCR  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களுக்கு JCA  சார்பில் நெஞ்சார்ந்த நன்றி .

2. இன்று PMG CCR அவர்களைச் சந்தித்து தாம்பரம் கோட்டத்தில் MINUS BALANCE பிரச்சினையில் RECOVERY  போடப்பட்டுள்ளது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம் .  பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது . இந்தப் பிரச்சினையில் பாதிக்கப் பட்ட ஊழியர் அனைவருக்கும் அவர்கள் சம்பந்தப் பட்ட ஆவணங்களை பார்த்தபின் பதில் அளிக்க வாய்ப்பு முறையாக அளிக்கப் படும் என்று உறுதியளித்தார். RECOVERY  உத்திரவு அளிக்கப் பட்ட ஊழியர்களுக்கு பிடித்தம் செய்வதை திரும்ப அளிக்க தனித் தனியே அவர்களை மனுச் செய்யுமாறும் அதன் மீது ஆவன செய்யப் படும் என்றும் உறுதியளித்தார். 

3. திருவண்ணாமலை கோட்டத்தில் ஆட்பற்றாக் குறையால் ஊழியர்கள் அவதிப்படுவதையும் அதற்கு உடனடி தீர்வாக OUTSOURCED  AGENTS  நியமனம் செய்திட  உரிய அனுமதி வழங்குமாறும் வேண்டினோம். பிரச்சினையை  உணர்வதாகவும் ,  அது  குறித்து  கண்காணிப்பாளரிடம்  உடன் பேசி தீர்வு காண்பதாகவும் அவர் தெரிவித்தார் .

தாம்பரம் கோட்டத்தின் MINUS  BALANCE  RECOVERY  சம்பந்தமாக நாம் அளித்த கடிதத்தின் நகலை கீழே பிரசுரித்துள்ளோம்.  உங்கள் பகுதியில்  இது போல  பிரச்சினை இருந்தாலும்  கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள இலாக்கா விதிகளை அந்தந்த  கோட்ட/ கிளைச் செயலர்கள் ஊழியர்களுக்கு பதில் அளிக்க  உபயோகப் படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

No.P3/ 2-  /TBM                                                                                                       dt.27.02.2013.

To
The Postmaster  General,
Chennai City Region,
Chennai 600 002.

Sir,
                  Sub: -  Recovery ordered from the staff  for settlement of   Minus Balance  
                            in SB accounts during this month payment- Case of Tambaram Division - reg.

                This Union wishes to bring to your kind notice that the action taken by the Divisional Administration of Tambaram Dn. for settlement of SB Minus Balances by recovering the amount from the officials is against the settled principles of recovery. 

            1.       Rule 18 of POSB General Rules, 1981 empower the Postal Department to recover any excess paid amount paid to the depositor as arrears of Land Revenue from the depositors. This Union requests  to initiate action as per the Rule ibid for settlement of the Minus Balance.

2.            2. Further, the procedure adopted for recovery is not according to the Rules. Recovery can be effected from the Government servants only after initiating action under Rule 16 of CCS (CCA) Rules, 1965. Rule 106 of Postal Manual Volume III reiterate the above procedure. Without adopting this measure, there is no shortcut to order recovery.

3.    Moreover, no official is allowed  to go through the records pertaining to  which  any of the lapses involved in their part ,  or  their   duty  on that  dates  of  lapses occurred.  This is totally a denial of  natural  justice.

4.       Since  there are  agreements made by the  SBCO   years-to-gether,  the   officials  working at S.O. level could not be  punished  as a scapegoat,  for  any reported  left over entries in manual ledgers  of  10 years  back.

5.      No sub- ordinate officers/ inspecting  authorities, are stopped with payments  or  recovery of pay, on whose part there are many lapses in such of those  cases,  and the Divl. Administration is adopting  pick and choose methods   in this  case. 

      6.       As per Rule 106 of P&T Man. Vol. III , any recovery can be  imposed only when it is established, 
            and in  this case it was not done.

7.       As per  Rule 107 of P&T Man.Vol. III ,  the disc. Authority should  correctly assess in a realistic manner the contributory negligence, and while determining any  omission or lapses on the  loss considered and the extenuating circumstances in which  the duties were performed by the official, shall be given due weight,  but  nothing has been done in this case.

8.       The  procedures as laid down  in  P.O. Savings Bank Manual Volume  I , under Rule 9 (1), 31 (2) (iii), 48 (ii), 92 (2) and 120 (6) were not followed in this case, and  the action is only arbitrary exercise of powers , without  following any  rules  and only hasty.

                In view of above, it is requested that all the memos issued against the officials of this Division ordering recovery from their pay and allowances for February-2013 towards settlement of Minus Balances may please be ordered to be withdrawn and all the Postmasters of this Division may please be advised immediately not to effect any recovery. 

Soliciting  your kind immediate intervention.

With regards,

 sd/-
 (J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

Postal Manual Volume III
106. In the case of proceedings relating to recovery of pecuniary losses caused to the Government by negligence, or breach of orders of a Government servant, the penalty of recovery can be imposed only when it is established that the Government servant was responsible for a particular act or acts of negligence or breach of orders or rules and that negligence or breach caused the loss.
107. In a case of loss caused to the Government, the competent disciplinary authority should
correctly assess in a realistic manner the contributory negligence on the part of an officer andwhile determining any omission or lapses on the part of an officer, the bearing of such lapses onthe loss considered and the extenuating circumstances in which the duties were performed by the officer shall be given due weight.