Monday, April 29, 2013

HEARTIEST GREETINGS ON THE EVE OF SUPERANNUATION TO LEGENDS


NFPE சம்மேளன செயல் தலைவர் கோவை தோழர். C. சந்துரு அவர்கள்
இலாக்கா பணி நிறைவு

40 ஆண்டுகள் இலாக்கா பணி , 36  ஆண்டுகள் இடைவிடாத தொழிற்சங்கப் பணி , ஆறு ஆண்டுகள் கோவை கோட்டச் செயலராக , நான்கு ஆண்டுகள் கோவை மண்டலச் செயலராக , 5 ஆண்டுகள் சம்மேளன செயல் தலைவராக தோழர் சந்துரு என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும்தோழர். C. சந்திரசேகர்  (POSTMASTER GRADE I, PEELAMEDU, COIMBATORE 09944922122) அவர்கள் ஆற்றிய தொழிற்சங்கப் பணி அளப்பரியது.

நமது அறிவு ஜீவி KVS அவர்கள் திண்டுக்கல் மாநில மாநாட்டில்  மாநிலச் செயலராக வெற்றி பெற , முதன் முதலில் எழுந்து நின்று அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியது கோவை மண்டலமே . தோழர். சந்துரு மற்றும் நம் மூத்த தோழர் கண்ணன் அவர்களின் பங்கு இதில் அளப்பரியது. இதனால் தான் நம்மால் KVS அவர்களின்  சேவையை , பொதுச் செயலராக பின்னாளில் பெற முடிந்தது .

சிரித்த முகமாக, சீரிய சிந்தனையாளராக , சாதாரணமாகக் கூட வெகு சரளமாக தங்கு தடையின்றி உரையாடும் ஆங்கிலப் புலமை மிக்கவராக, அதிகாரிகளிடம் சாதுரியமாகப் பேசி ஊழியர்கள் பிரச்சனைகளை இன்றும் தீர்த்து வைக்கும் பக்குவப் பட்டவராக,   சங்கத்தில் கருத்து வேறுபாடுள்ள தோழர்களிடையிலும் ஒற்றுமைக்கு பாலமாக கோவை மண்டலத்தில் NFPE இயக்கத்தின் தூணாக.....  இப்படிப் பல முகங்கள் தோழர் சந்துருவுக்கு உண்டு.

சந்துரு இன்று (30.04.2013) இலாக்கா பணி நிறைவு செய்கிறார். அவர்தம் தொழிற் சங்கப் பணி நிச்சயம் தொடரும். அவரது அனுபவமும் அறிவும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதும் திண்ணம் . இந்தப் பணி நிறைவு நாளில் அவர் குடும்பத்தோடு நீண்ட காலம் ஆரோக்கியமாக எல்லா வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ்ந்திட தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் மனதார வாழ்த்துகிறது.

அம்பத்தூர் தோழர். அண்ணாமலை அவர்களுக்கு அகவை அறுபது
... இன்று இலாக்கா பணி நிறைவு

அண்ணாமலை(POSTMASTER HSG I, AMBATTUR IND.ESTAE 09566550410) என்றாலே அமைதியின் திருவுருவம், ஆற்றலின் மறு உருவம், பண்பின் உயர் உருவம் ... இது தான் திருவாளர் அம்பத்தூர் அண்ணாமலை அவர்கள். பட்டுக் கோட்டையில் பிறந்து , 1973 இல் மயிலாடுதுறையில் எழுத்தராய் பணியில் அமர்ந்து , கணக்காளராக பட்டுக்கோட்டையில் பல காலம் பணி புரிந்து 1987 இல் APM ACCOUNTS ஆகப் பதவி உயர்வு பெற்று அம்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில்  பணியில் அமர்ந்தார். அம்பத்தூர் பகுதியில், தாம்பரம் கோட்டத்தில் தொழிற்சங்கத்தில் தலைவர் KVS – நரசிம்மலு வின் வலுவான கூட்டணிக்கு மேலும் பலம் சேர்த்தது தோழர் அண்ணாமலை என்றால் அது மிகையாகாது. 

திருவாளர் தேவராஜன் அவர்கள் கண்காணிப்பாளராக இருந்த காலத்தில் தோழர். KVS அவர்களும் தோழர் நரசிம்மலு அவர்களும் குறி வைத்து தாக்கப் பட்டபோது ஓடி ஒளிந்தவர் பலர். ஆனால் அன்று உற்ற தொண்டராக , சற்றும் துவளாமல் அவர்களோடு இணைந்து தாக்குதல்களைத் தாங்கி நின்றது அவரது தொழிற் சங்க உணர்வுக்கு சரியான எடுத்துக் காட்டு. அம்பத்தூர் கிளையின் தலைவராக அவர் ஆற்றிய பணி அளப்பரியது .

அவர்தம் தொழிற்சங்கப் பணியை, இலாக்காவில் அவரது அப்பழுக்கற்ற பணியை நம் மாநிலச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது. அவர் இலாக்கா பணி நிறைவு செய்திடும் இந்நாளில் (30.04.2013) அவர் குடும்பத்தாரோடு நீண்ட ஆயுளுடனும் நிறைந்த வளங்களுடனும் நெடு வாழ்வு வாழ்ந்திட மாநிலச் சங்கம் மனதாரப் வாழ்த்துகிறது.

வட  சென்னை கோட்டத்தின் தொழிற்சங்க முன்னோடி தோழர்.    P. குணசேகரன்(SPM, VYASARPADI P.O.   09884343097) அவர்கள் இலாக்கா
பணி நிறைவு !

வட சென்னை கோட்டத்தில் அஞ்சல் நான்கில் கோட்டப் பொருளராக,அஞ்சல் மூன்றில் கோட்ட உதவிச் செயலராக , தற்போதைய கோட்ட உதவித் தலைவராக 35 ஆண்டு கால இயக்கப் பணி . இயக்கத் தலைவர்கள் தோழர். AGP,  தோழர். பாலு  மற்றும்  தோழர். KVS ஆகியோருடன் பல காலங்களில்  நெருக்கமாகத்  தொடர்ந்த  தொழிற்சங்கப் பணி. 

கொள்கையில் வலிமையான  அதே நேரத்தில் பழகுவதில் இனிமையான  நற்பண்பு. எம்ஜிஆர் கொள்கைகளில் ஈர்க்கப் பட்டு எப்போதும் அவர்தம் சமுதாயப் பற்றுள்ள பாடல்களை தன் கைபேசியில் கூட அழைப்பு, கேட்பு  இசையாக வைத்திருப்பது--- அதன் வழி வாழ்வது. 

இப்படி... அனைவராலும் ‘குணா’ என்று அன்போடு அழைக்கப் படும்  குணசேகரன் அவர்கள். இன்று (30.04.2013) இலாக்கா பணி நிறைவு பெறுகிறார். அவர் மனம் போல , எல்லா வளமும் , நலமும் பெற்று அவர்தம் குடும்பத்தோடு நீடு வாழ மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.