அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் !
LSG பதவி உயர்வுப் பட்டியல்
நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த LSG பதவி உயர்வின் முதல் பட்டியல் அஞ்சல் பகுதிக்கு 2011-12 ஆண்டுக்கானது மாநில அஞ்சல் நிர்வாகத் தால் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன் மூலம் 70 தோழர்கள் பயனடைவர். அடுத்து 2012-13, 2013-14 இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது .
09.11.2015 PTC மதுரை பயிற்சி வகுப்புகள் ரத்து
மேலும், நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 14.10.2015 கடிதத்தின்
படியான கோரிக்கையை ஏற்று (பார்க்க நம்முடைய வலைத் தளத்தின் 14.10.2015 செய்தியை) தீபாவளிப் பண்டிகையை நம்முடைய தோழர்/ தோழியர்கள் குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு PTC மதுரையின் அனைத்து பயிற்சி வகுப்புகளும் 09.11.2015 அன்று ரத்து செய்யப்பட்டுTRAINING SESSION ஒரு நாள் (17.11.2015) நீட்டிப்பு செய்யப்பட்டு உத்திரவிடப்பட்டுள்ளது.நமது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு நம்முடைய நன்றி.அஞ்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தோழர்கள்/ தோழியர்களுக்கு தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் !
ஏற்கனவே SURPLUS LGO CANDIDATES களுக்கு பண்டிகை காலத்தில் போடப்பட்ட பயிற்சி வகுப்பு மாற்றியமைக்கப் பட்டது குறித்து OCT .30 அன்று நம்முடைய மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் .