Friday, October 9, 2020

Babu Tarapada Historic Lahore Speech

தனது மனைவி இறக்கும் தருவாயில் இருந்தபோதும் 1921 ஆம் ஆண்டு இதே நாளில் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சி மிக்க வீர உரையாற்றிய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாபு தாரபாதா நினைவாக, அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் மாநாட்டு உரைகீழே அளிக்கப் பட்டுள்ளது. " தொழிலாளி கையேந்தும் பிச்சைக் காரன் அல்ல ; அவனது உழைப்பில் உழைப்பில் உருவானதுதான் இந்த தேசத்தின் செல்வம் எல்லாமே ' என்று முழங்கி, அதன் காரணமாக 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டு, தனது மனைவியையும் இழந்த பின்னரும் தொழிற்சங்கத்திற்காக பணியாற்றி தனது இன்னுயிரையும் ஈந்த தலைவனின் நினைவாகவே அவரது உரை இந்த நாளில் இங்கே பகிரப் படுகிறது... உணர்வு கொள்வோம் ! எழுச்சிப் அடைவோம் ! தொழிலாளர் உரிமை காத்திட எந்த தியாகத்திற்கும் தயாராவோம் ! போராடுவோம் ! இருக்கும் உரிமை பறிபோகாமல் காப்போம் ! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் !! போராட்டமே எங்கள் வாழ்வென ஓங்கி சபதம் ஏற்போம் !!!