அஞ்சா நெஞ்சன் அன்பு அண்ணன் பாலுவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி
அஞ்சா நெஞ்சன் அன்பு அண்ணன் பாலுவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மாநிலச் சங்க அலுவலகத்தில்
இன்றைய தேதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்(Tuesday, October 20, 2015) நமது அன்பு அண்ணன் அஞ்சா நெஞ்சன் பாலு அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாநில சங்கம் சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நாம் நடத்தி அவரது நினைவுகளைப் பகிர்ந்து நமது உணர்வுகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ளுவோம்.
இன்று மாநிலச் சங்க அலுவலகத்தில் தலைவர் KVS அவர்கள் வர இயலாத சூழலில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மாநில உதவித் தலைவர் தோழர் D.ரவி மாநில உதவி நிதி செயலர் தோழர் முரளி அம்பத்தூர் கிளை செயலர் தோழர் அசோகன் அண்ணா சாலை கிளை தலைவர் தோழர் பிரிதிவிராஜ் உதவிச் செயலர் தோழர் உமா சங்கர் அஞ்சல் நான்கின் முன்னாள் மாநில உதவிச் செயலர் தோழர் நந்தகோபால் மற்றும் சென்னை நகர அண்ணாசாலை கோட்ட தோழர் தோழியர்கள் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்
அவரது நினைவைப் போற்றுவோம். அவர் காட்டிய வழியில் தமிழகத்தை எழுச்சிமிக்க பாதையில் தொடர்ந்து பயணிக்க சூளுரைப்போம்.
அண்ணன் பாலுவின் புகழ் ஓங்குக !
A. வீரமணி
மாநிலச் செயலர்
அஞ்சல் மூன்று