Tuesday, December 4, 2012

வால் மார்ட் நுழைவு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

அன்புத் தோழர்களே  வணக்கம் . சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு  அனுமதி குறித்த விவாதம்  நாடாளுமன்றத்தில் தற்போது  நடக்க உள்ளது . அப்படி அனுமதிக்கப் படும் போது  , சில்லறை  வர்த்தகத்தில் அமெரிக்க நாட்டின்,  உலகமெங்கும்  வணிகம் செய்து வரும் மிகப்பெரும்  நிறுவனமான 'வால் மார்ட்' இந்தியாவின் அனைத்து  நகரங்களிலும் கால் பதித்திட தயார் நிலையில் உள்ளது.. 

எனவே  இந்த ' வால் மார்ட் ' குறித்தும்  இதன் தொடர் விளைவுகள் குறித்தும்  நாம் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை. இது மூன்று பகுதிகளாக  தொடர்ந்து நம் வலைத்தளத்தில் வர உள்ளது.  நீங்கள் படிக்கவும் , உங்கள் கருத்துக்களை பகிரவும் நாம் வேண்டுகிறோம். 

அஞ்சல் துறை என்பது ஏதோ ஒரு தனித்தீவு போலவும்  அது இந்த நாட்டின் கொள்கைகளில் சம்பந்தமில்லாதது போலவும் சிலர் நினைப்பது தவறு. அஞ்சல் துறையிலும்  POSTAL POLICY 2012 - பிரைவேட்-பப்ளிக்-போஸ்டல் (PPP) கொள்கைகளை  நமது துறை அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதையும் , இந்தத் துறை தனியார் மயத்தை நோக்கி விரைவாக செலுத்தப் பட உள்ள மோசமான சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

ஏற்கனவே மொத்த விற்பனையில் 18 கடைகளை இந்தியாவில் BHARTI  நிறுவனத்துடன் கூட்டாக  துவங்கி நடத்தி வருவதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.


Bharti Walmart opens Best Price outlet in Hyderabad

HYDERABAD: Bharti Walmart, the business-to-business (B2B) joint venture between Bharti Enterprises and Walmart Stores Inc for wholesale and cash-and-carry operations in India, on Wednesday said its total investment in Andhra Pradesh had crossed $20 million with the opening of its first Best Price Modern Wholesale cash-and-carry store in Hyderabad and the third in the state after Guntur and Vijaywada.
Spread over 53,000 square feet, the Best Price store in Hyderabad is situated at Pillar no 267 at Sivarampally in Rajendranagar area and is the JV's eighteenth outlet in the country. Bharti Walmart, which launched its first B2B Best Price Modern Wholesale cash-and-carry store in Amritsar in May 2009, today also has stores in Amritsar, Zirakpur, Jalandhar, Kota, Bhopal, Ludhiana, Raipur, Indore, Meerut, Agra, Lucknow, Jammu, Aurangabad, Bhatinda and Amravati.

According to the company, the store has created over 180 jobs direct in Hyderabad and surrounding areas and 60,000 business members, comprising restaurant owners, hoteliers, caterers, fruit and vegetable resellers, kirana stores, offices and institutions, had already registered with the one-stop B2B store.

இனி வால் மார்ட் குறித்து ........................பகுதி 1

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.
1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, கோஸ்டாரிகா  மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது............    தொடரும்