R 4 மாநிலச் சங்கத்தின்  மாநிலக் கவுன்சில் கூட்டம் கடந்த 19.05.2015 அன்று சென்னை எழும்பூரில்  சிறப்பாக நடைபெற்றது . மேலும் CHENNAI  SORTING  பகுதியில் பணியாற்றிய அனைத்து GDS  மற்றும் TSCL  ஊழியர்கள்  MTS  ஆக பதவி உயர்வு பெற்றதற்கு பாராட்டு விழாவும் அதன் மாநிலத் தலைவர் தோழர். தேவன் அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.. இதற்கான ஏற்பாடுகளை  அதன் மாநிலச் செயலர் தோழர். B . பரந்தாமன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். விழாவில்  முன்னாள் CPMG  திரு. சீனு. பிரம்மானந்தம் அவர்கள் , முன்னாள் PMG MM திரு . K . ராமச்சந்திரன் அவர்கள்  மற்றும்  தற்போதைய PMG MM திரு. S .C . பர்மா அவர்கள்   PMGC CCR திரு. மெர்வின்  அலெக்சாண்டர் அவர்கள் , SSRM  திரு. L . அமலச்சந்திரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டது  இந்த  விழாவின் சிறப்பு ஆகும். 
அதுபோல R 4 சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். P . சுரேஷ்,  NFPE  உதவி மாபொதுச் செயலர் தோழர். S . ரகுபதி , அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன், RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ் , கணக்குப் பிரிவு  சங்கத்தின் அகில இந்திய தலைவர்  தோழர். சந்தோஷ்குமார்,  அதன் மாநிலச் செயலர் தோழர். B . சங்கர்  உள்ளிட்ட  தலைவர்களும்  ஒரு சேர இந்த விழாவில் கலந்துகொண்டது இதன் சிறப்பு ஆகும்.  விழா நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள்  கீழே காணலாம் . 








