கடந்த 09.01.2015 அன்று  PMG, CCR அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் தாம்பரம் கோட்டம் மற்றும் அம்பத்தூர் கிளைகளின்  பிரச்சினைகள் குறித்து 19 கடிதங்கள்  தனித்தனியே அளிக்கப்பட்டு  விவாதிக்கப்பட்டன. இந்த விவாதத்தில் அம்பத்தூர் கிளைச் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.  
இந்த பிரச்சினைகள் மீது  உடன் கவனம் செலுத்தி  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  PMG, CCR  அவர்கள் உறுதி அளித்தார்கள். அளிக்கப்பட்ட உறுதி மொழியின்படியே  தற்போது எடுக்கப்பட்ட பிரச்சினைகளின் தீர்வு மற்றும் மேல் நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமான  தனது பதிலை நம்முடைய மாநிலச் செயலருக்கு   PMG, CCR  அவர்கள் அளித்துள்ளார்கள்.   
PERIODICAL MEETING , RJCM  MEETTING  மற்றும் வேலை நிறுத்தம் செய்தால் கூட பேச்சுவார்த்தைக்கு  தயங்கும்  நிர்வாகங்கள் உள்ள இந்த  சூழலில், தான் அளித்த பதிலையே  தான் நிறைவேற்றாத அதிகார அமைப்புகள் பல உள்ள இந்த சூழலில்,  
ஒரு தனிப்பட்ட  கிளையின் பிரச்சினைகளுக்குக்  கூட   பொறுமையாக விவாதித்து உரிய நடவடிக்கையும் எடுத்து STATUS  REPORTம் எழுத்து பூர்வமாக அளித்துள்ள   சென்னை பெருநகர PMG திரு .மெர்வின் அலெக்சாண்டர் அவர்களின்  பெருந்தன்மைக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்  மற்றும் நன்றி. இந்த நிலை  தொடரவேண்டும் என்று விரும்புகிறோம்.   அளிக்கப்பட்ட பதிலின்  நகலை கீழே  பார்க்க:-  




