R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Monday, July 20, 2020
Friday, July 17, 2020
Circle Union letter on considering PA vacancies arisen during the year 2019 due to unforeseen reasons
இன்று CPMG அவர்களை மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி அவர்கள் சந்தித்து
கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியல் மூலம் ஏற்பட்ட எழுத்தர் காலி யிடங்களை 2019 ஆம் ஆண்டில் எழுத்தர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள தபால்காரர்களுக்கு வழங்கவேண்டு மென 14.02.2020 அன்று அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுத்திருந்தோம் மீண்டும் மாநில சங்கத்தின் சார்பில் இன்று கடிதம் கொடுத்து பேசினோம்
இமாச்சல பிரதேசத்தில் 05.08.2019 முதல் 31.12.2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை Supplimentry LGO Results 2019 மூலம் 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப பட்டுள்ளதையும் மேலும் ஆந்திர மாநிலத்தில் 30.09.2019 முடிய உள்ள எதிர்பாராத எழுத்தர் காலியிடங்கள் 2019 ஆம் ஆண்டின் எழுத்தர் தேர்வின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி
தமிழ் மாநிலத்திலும் 31.12 .2019 வரை ஏற்பட்ட எதிர்பாராத எழுத்தர் காலியிடங்களை 2019 ஆம் ஆண்டின் காலியிடங்களாக கணக்கில் கொண்டு 2019ஆம் ஆண்டு தேர்வு எழுதிய தபால்காரர் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றோம் கொரானா காலத்தில் தேர்வு நடத்தப்படுவதில் உள்ள சிரமங்களையும் , தேர்வு எழுதிய ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும்
எதிர்பார்த்த காலியிடங்களை காட்டிலும் எதிர்பாராத காலியிடங்கள் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியும் இமாச்சலபிரதேச மாநில நிர்வாகம் போல Supplimentry LGO Results 2019 வெளியிட CPMG அவர்களிடம் மாநிலச்செயலர் கோரினார்.
இதன் மூலம் எழுத்தர் பகுதியில் உள்ள ஆள்பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும் எனவும் மாநிலச்செயலர் கூறினார் . CPMG அவர்களும் இது சம்பந்தமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
குரோனா பாதுகாப்பு பற்றியும் தபால்காரர் தோழர்கள் இறந்தது பற்றியும் அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர் K.சிவராமன் அவர்கள் இறந்தது பற்றியும் விசாரித்தார் வருத்தம் தெரிவித்தார் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கூறினார்
மனித நேயத்தோடும் அன்போடும் பேசிய CPMG அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்
தோழமையுள்ள,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று.
LSG list dated 07.07.2020 kept in abeyance
7/7/20 அன்று வெளியிடப்பட்ட LSG. List நிறுத்திவைப்பு
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
தற்போது மாநில நிர்வாகத்தினால் 07.07.2020 அன்று வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள பிரச்னைகள் குறித்து தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் 08.07.2020 ல் DPS HQ. APMG அவர்களை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்து விரிவாகப் பேசினோம் இது குறித்து மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட எல்லா பிரச்சனைகள் குறித்தும் அந்த கடிதத்தில் மாநில சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது
DPS HQ அவர்களும் இது குறித்து அனைத்து பிரச்னைகள் மீதும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று
உறுதி அளித்தார். இன்று சிபிஎம்ஜி அவர்களை சந்தித்து இது சம்பந்தமாக அழுத்தம் கொடுத்தோம்
தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் கோரிக்கையை ஏற்று 07.07.2020 வெளியிடப்பட்ட LSG பதவி உயர்வு பட்டியலை(Kept on hold) தற்காலிகமாக நிறுத்திவைத்து தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்த
CPMG. அவர்களுக்கும் DPS HQ /. APMG Staff அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுள்ள ,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று ,
Thursday, July 16, 2020
Examinatiob for recruitment of MTS from eligible GDS for the year 2020 postponed
02.08.2020 அன்று நடைபெறுவதாக இருந்த GDS to MTS பதவிக்கான தேர்வு covid-19 வைரஸ் தொற்று நோய் பரவல் பிரச்சனை காரணமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 15, 2020
Tuesday, July 14, 2020
RTP case update
அன்பார்ந்த தோழர்களே RTP குறித்த வழக்கு நமது மத்திய சங்கத்தால் Principle CAT New delhi யில் தொடரப்பட்டு அது தொடர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். இதனை நமது மத்திய சங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நான் நம்முடைய பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டபோது அவர் இந்த விஷயத்தில் தன்னுடைய தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாகவும் மேலும் அடுத்த hearing ல் தானே முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் கூறினார். எனவே வழக்கு ஏற்கனவே Principle CAT New Delhi ல் நிலுவையில் உள்ள சூழலில் புதியதாக ஒரு வழக்கு சென்னை CAT ல் தொடர அவசியம் இருக்காது. மேலும் புதிய வழக்கு கால தாமதத்தை அதிகரிக்கச் செய்யும் .இதுகுறித்து நமது வழக்கறிஞரை கலந்தாலோசித்தோம் அவரும் சற்று பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். Principle CAT New Delhi ல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடுத்த hearing ல் வரவில்லை என்றால் நாம் மேற்கொண்டு புதியதாக ஒரு வழக்கினை சென்னை CAT ல் தொடரலாம். மேலும் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் இதில் வாய்ப்பு இல்லை. இந்த விஷயத்தினை நாம் முழுமையாக உணர்ந்து உள்ளதோடு உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இதில் உள்ள அத்தனை சாத்தியக்கூறுகளையும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த விஷயத்தில் குழப்பம் தரும் சில செய்திகளுக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது மட்டுமே ஒரு சிலரின் வேலை. ஊழியர் நலன் குறித்து நாம் எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றோம். நமது தலைவர் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலாளராக இருந்த போதுதான் டெல்லி Principal CAT ல் இந்த வழக்கானது தொடுக்கப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது மறுக்க முடியாது. மேலும் நம்முடைய NFPE சங்கம் மட்டுமே தபால்காரர் களுக்கான உயர் ஊதியத்திற்காக வழக்கினை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றி பெற்று அனைத்து தோழர்களும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகை வாங்குவதற்கு காரணகர்த்தாவாக செயலாற்றி உள்ளது. அதே போன்று RTP வழக்கிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது .ஆகவே அனைவரும் இந்தத் தருணத்தில் சற்று அமைதி காக்க வேண்டும் .மேலும் மாநில சங்கம் கூடிய விரைவில் அதனுடைய முடிவினை இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து பின்னர் வெளியிடும். எனவே மீண்டும் அமைதி காக்க வேண்டுகிறேன்.
A.வீரமணி
மாநிலச் செயலாளர்.
அஞ்சல் மூன்று
Monday, July 13, 2020
Discrepancies in LSG list
இன்று 13/7/20 மீண்டும் DPS HQ. /APMG அவர்களை சந்தித்து மாநிலச் சங்கம் கொடுத்த கடிதத்தின் மேல் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தோம் 07/07/2020 அன்று வெளியிடப்பட்ட LSG List ல் உள்ள குளறுபடிகள் பற்றி DPS HQ அவர்களும் இது சம்பந்தமாக யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாதவண்ணம் சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறோம் இது சம்பந்தமாக மண்டல அலுவலகங்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளோம் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தாலோ சீனியாரிட்டி பிரச்சனை இருந்தாலோ உடனடியாக தெரியப்படுத்தும் படி கூறியுள்ளார் எனவே அனைத்து கோட்ட கிளை செயலர்கள் 7/7/20 அன்று வெளியிடபட்ட LSG List ல் ஏதாவது பிரச்சனை இருப்பின் அது சம்பந்தப்பட்டவர்கள்CPMG அவர்களுக்கு மனு கொடுத்துவிட்டு அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு 2 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும் மாநிலச் சங்கம் அனைத்தையும் ஒன்றிணைத்து கடிதம் கொடுக்க உள்ளோம்
தோழமையுள்ள ,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.
Sunday, July 12, 2020
Friday, July 10, 2020
Discrepancies in LSG list
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
தற்போது மாநில நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள LSG பதவி உயர்வுப் பட்டியலில் உள்ள பிரச்னைகள் குறித்து மேலே உள்ள தமிழ் மாநில அஞ்சல்
மூன்று சங்கத்தின் கடிதத்தினைப் பார்க்கவும். இது குறித்து மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எல்லா பொதுப் பிரச்னைகள் குறித்தும் இந்தக் கடிதத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இன்று காலை நமது மாநிலச் செயலர் DPS HQ அவர்களை நேரில் சந்தித்து இந்தக் கடிதத்தை அவரிடம் அளித்து விரிவாகப் பேசினார்.
DPS HQ அவர்களும் இதில் குறிக்கப் பட்டுள்ள அனைத்து பிரச்னைகள் மீதும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு ஆவன நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும்,
5.12 18 இலாக்கா உத்திரவு கணக்கில் கொள்ளப்படும் என்றும்,
தனிப்பட்ட முறையில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
நிச்சயம் இந்தப் பிரச்னைகளின் மீது உரிய முன்னேற்றம் , மாற்றம் கிடைக்கும்
என நம்புகிறோம்.
திறந்த மனதுடன் பிரச்னைகளின் தீர்வுக்கு உறுதியளித்த DPS HQ அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தனித்தனியே அவர்கள் பாதிப்பு குறித்து சரி செய்திட விண்ணப்ப மனுக்களை CPMG அவர்களுக்கு விடுதலின்றி அனுப்பி வைத்திடக் கேட்டுக் கொள்கிறோம். காலதாமதம் வேண்டாம்.
தோழமையுள்ள ,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.
Grant of advance for purchase of personal computer
Officials who desire to avail the facility of grant of advance for purchase of personal computer may give their application in prescribed form.
DOWNLOAD
Subscribe to:
Posts (Atom)































