Thursday, March 20, 2014

SUCCESS TO THE TIRELESS EFFORTS OF OUR CIRCLE UNION IN HRA ISSUE - NOW ERODE AND EXTN AREAS OF CHENNAI CITY WILL GET HIGHER RATE OF HRA

CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில்  வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கிட வேண்டும் என்று  தமிழக அஞ்சல் மூன்று சார்பாக நாம் முதல் முதலில் குரல் எழுப்பியதையும்  RJCM  கூட்டத்தில் இது குறித்து  நம்  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் பிரச்சினையை எழுப்பி அது  அன்றைய CPMG அவர்களால் மறுக்கப் பட்டதன் அடிப்படையில் , இந்த பிரச்சினை  நம் அகில இந்திய சங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப் பட்டதையும் ,  

கௌஹாத்தி அகில இந்திய செயற்குழு கூட்டத்தில்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  இப்பிரச்சினையை எழுப்பியதையும் எவரும் மறந்து விட முடியாது.  இதன் அடிப்படையில்  JCM இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை நம்  பொதுச் செயலரால் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதையும் அதற்கு  CENSUS 2011 PROVISIONAL FIGURE  தான் வந்துள்ளது .அதனால்  தற்போது இதனை இறுதி செய்திட இயலாது என்று இலாக்கா முதல்வர் பதில் அளித்திருந்ததையும் ஏற்கனவே உங்கள் பார்வைக்கு வைத்திருந்தோம் .

தற்போது  இந்தப் பிரச்சினை குறித்து நம் அகில இந்திய துணைப்பொதுச் செயலர் நமக்கு அளித்துள்ள  செய்தியை கீழே தருகிறோம் .  அதன் படி  JANUARY 2014 இல்  CENSUS இறுதி  அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாகவும்  அதன் படி  ஏற்கனவே  அளித்திருந்த புள்ளி விபரங்கள்  ஒத்திருப்பதாகவும்  இதன் மூலம்  பல   URBAN AGGLOMERATION பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப் படி கிடைக்க உள்ளது என்றும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.  

மேலும்  நம் தமிழகத்தின்  ERODE  நகரம்  'Y' CATEGORY யாக அறிவிக்கப் பட உள்ளது என்றும் , அதுபோல சென்னை நகரின் URBAN AGGLOMERATION  விரிவாக்கப் பட்டு  பல புதிய பகுதிகளுக்கு  சென்னை நகருக்கான  உயர் வீட்டு வாடகைப் படி கிடைக்க உள்ளது என்றும்  தெரிவித்துள்ளார் . 

இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  இடைவிடாத தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதை மகிழ்ச்சியுடன்  உங்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது துணைப் பொதுச் செயலர் அளித்த செய்தி கீழே பார்க்கவும் :-

The final population figures have been finalised by census department in JAN2014 and  NO  major changes with provisional figures.  So many new areas as we published in our website become under exixting UA . Some new UAs are become eligible for enhanced HRAs.

Pl see the KERALA Example below 

UA Name
TOT_Population
Existing
Enhanced
Kochi UA
2119724
20
20 percent
Kozhikode UA
2028399
20
20 percent
Thrissur UA
1861269
10
20 percent
Malappuram UA
1699060
10
20 percent
Thiruvananthapuram UA
1679754
20
20 percent
Kannur UA
1640986
10
20 percent
Kollam UA
1110668
10
20 percent

Apart from the above changes, all the above seven UAs have been reconstituted by incorporating several areas.
Likewise ,in TamilNadu, ERODE UA is the new Y class city and CHENNAI UA has been expanded by incorporating several areas.