Saturday, February 28, 2015

27.02.2015 REGIONAL LEVEL DHARNA ON PJCA / CIRCLE UNIONS' CALL A GRAND SUCCESS

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம். நேற்று (27.02.2015)  அஞ்சல்  மத்திய JCA  மற்றும் அஞ்சல் மூன்று ,  GDS  மாநிலச் சங்கங்களின் அழைப்பை ஏற்று மண்டல அலுவலகங்கள் முன்பாக  அறிவிக்கப்பட்ட  போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.  

சென்னையில் CPMG  அலுவலக வளாகத்தில்  இந்த நிகழ்வு முழு நாள் போராட்டமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது .மேலும் தென் மண்டல அதிகாரியின் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை எதிர்த்து கண்டனப் போராட்டமாகவும்  நடத்தப் பட்டது. தார்ணா  போராட்டத்திற்கு  GDS  மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக நடத்தினார். தார்ணா  போராட்டத்தை   அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். K . ராகவேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். NFPE  இணைப்புக் குழு தலைவரும் R  4 மாநிலச் செயலருமான தோழர்.  B . பரந்தாமன் , NFPE  உதவிப் பொதுச் செயலர் தோழர்.S . ரகுபதி, செயல் தலைவர் தோழர். A .மனோகரன், அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர் N . கோபாலகிருஷ்ணன் , உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்,  அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். M . கண்ணையன்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S. அவர்கள்  தார்ணா  போராட்டத்தை முடித்து வைத்து  சிறப்புரை ஆற்றினார்.  தார்ணா  ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றி மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி  சிறப்பாகச் செய்திருந்தார். சென்னை பெருநகர மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  செயலர்கள்/ நிர்வாகிகள் , தோழர்/ தோழியர்  பெருமளவில் முழு நேரம்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

இதுபோல மத்திய மண்டலத்தின் திருச்சியில் PMG அலுவலக வளாகத்தில்  முழு நாள் தார்ணா போராட்டம்  சிறப்பாக நடத்தப்பட்டது . அஞ்சல் மூன்றின் மத்திய மண்டலச்  செயலர் தோழர். R . குமார் அவர்கள் இந்த  தார்ணா போராட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.  , மாநில உதவித் தலைவர் தோழர் J . ஜானகிராமன் , மாநில உதவி நிதிச் செயலர் தோழர்               R . பெருமாள் , GDS  மாநில நிதிச் செயலர் தோழர். R . விஷ்ணுதேவன், GDS  மாநில உதவித் தலைவர் தோழர். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  மண்டலத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து தோழர்கள்  பெருமளவில் கலந்துகொண்டு  தார்ணா போராட்டத்தை சிறப்பித்தனர்.


மேற்கு மண்டலத்தில் இந்த போராட்டம்   கோவை  NFPE அஞ்சல் RMS  MMS, GDS  சங்கங்களின் சார்பில்  மாலை நேர ஆர்பாட்டமாக  இரவு 08.15 மணி வரை  R .S . புர ம்  மண்டல அலுவலக வாயிலில்  சிறப்பாக நடைபெற்றது . மண்டலம் முழுவதிலிருந்தும் சுமார் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் / தோழியர்கள்  இதில் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்று மாநில உதவித்தலைவர் தோழர். எபினேசர் காந்தி சிறப்பாக செய்திருந்தார். அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். C. சஞ்சீவி , மாநில அமைப்புச் செயலர் தோழர். A . ராஜேந்திரன் , GDS  மாநில உதவிச் செயலர் தோழர்.  மகாலிங்கம்  உள்ளிட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கிப் பேசினார் .


தென் மண்டலத்தில்  மண்டல அதிகாரி  தர்ணா  மற்றும் விடுப்பு மறுப்பு செய்து உத்திரவிட்டிருந்ததால்  அங்கு போராட்டம்  நடைபெறவில்லை .


மூன்று மண்டலங்களிலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு  சிறப்பித்த அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள் மற்றும் தோழர்/ தோழியர்களுக்கு  தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

சென்னையில் நடைபெற்ற தார்ணா  போராட்டத்தில் பேசும்  போது நமது NFPE  உதவி மாபொதுச்  செயலர் தோழர். S .  ரகுபதி அவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் உடனே வழங்க வேண்டாம் என்றும் மற்றைய சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு கூட்டுப் போராட்டமாக, வலுவாக இதனைச் செய்திட வேண்டும் என்றும்  வேண்டுகோள் (APPEAL )  விடுத்தார். இதனை சம்மேளனம் சார்பாகவே தாம் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பல மூத்த தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகள்  இந்த வேண்டுகோளை தொடர்ந்து வைத்தனர். எனவே அனைவரின் கருத்தை ஏற்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவதை  சற்று தள்ளி வைப்பதெனவும்    கூட்டுப் போராட்டமாக  மாற்றுவதற்கு எதிர்வரும் 2.3.2015 சென்னையில் நடைபெற  உள்ள தார்ணா போராட்டத்திற்குப் பின்னர் NFPE  இன் அனைத்து சங்கங்களையும் மீண்டும் ஒருமுறை கலந்து முடிவெப்பதென்றும்  தார்ணா  போராட்டத்தின்  முடிவில்  மாநிலச் சங்கங்களின் சார்பாக  கூட்டாக அறிவிப்பு செய்யப்பட்டது. 

நிகழ்வுகளின் புகைப்படங்கள்  மண்டலச் செயலர்களிடமிருந்து வந்து சேராததால்  அவற்றை உடன் பிரசுரிக்க இயலவில்லை . புகைப்படங்கள் கிடைத்தவுடன்   அடுத்த வாரத்தில் பிரசுரிக்கப் படும் .

தலைவர்களின் வழி காட்டுதல்களை ஏற்போம் !
கூட்டுப் போராட்டத்திற்கு உடன் முயற்சி மேற்கொள்வோம் ! 
கூட்டு பேர  சக்தியை மேலும் வலுப்படுத்துவோம் !  
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !