Tuesday, February 10, 2015

MEETING WITH CHIEF PMG, TN ON HIS ELEVATION AS MEMBER PSB, NEW DELHI

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

நேற்று மாலை நான்கு மணியளவில் NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பில் அஞ்சல் மூன்று  மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன், RMS  மூன்று மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் , RMS  நான்கு மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன், GDS  மாநிலச் செயலர் தோழர். தனராஜ், நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்,  SBCO   மாநிலத்  தலைவர்  தோழர். கோவிந்தராஜலு ,
CASUAL  LABOUR சங்க மாநிலத் தலைவர் தோழர் சிவகுருநாதன் , தென் சென்னை  அஞ்சல் மூன்று கோட்டத்  தலைவர் தோழர். வாசுதேவன் ஆகியோர்  CHIEF  PMG , TN  திரு. T. மூர்த்தி அவர்களை சந்தித்தோம்.

அவரது பதவி உயர்வு குறித்து  நம்முடைய NFPE  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும்  தமிழகத்தில் அவரது காலத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். MEMBER (O) ஆனாலும் தமிழகத்தின் நலனுக்கு நிச்சயம் தன்னாலான  உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் அஞ்சல் மூன்று சார்பில் கீழ்க் கண்ட நினைவூட்டு கடிதம் அளித்து முக்கிய பிரச்சினைகளில்  தீர்வினை வேண்டினோம் .

1.  எழுத்தர் தேர்வு சம்பந்தமாக கேட்கப் பட்டிருந்த விளக்கம் DTE  இலிருந்து வந்துவிட்டதால்  தேர்வு முடிவுகள்  இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் முடிந்தால்  நாளையே அறிவிக்கலாம் (இன்று) என்றும் கூறினார்.

2. LSG  பதவி உயர்வு குறித்து கேட்கப் பட்டிருந்த  விளக்கம் DTE  இலிருந்து இன்னமும் வரவில்லை என்றும்  வந்தவுடன் அறிவிக்க சொல்லியிருப்ப தாகவும்  தான் DTE  சென்றவுடன் இது குறித்து நிச்சயம் பார்க்கிறேன் என்றும்  உறுதி அளித்தார்.

3.தென் மண்டல தொழிற் சங்க  காரணங்களுக்காக விதிக்கப்பட்ட  தண்டனைகளை ரத்து செய்திட, நேற்று  சென்னை வரும்  PMG SR  இடம்  கண்டிப்பாக அறிவுறுத்துவதாக  உறுதி அளித்தார். 

இதர பிரச்சினைகள் குறித்து  உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி கூறினார். பதவி உயர்வு  பெற்றுச்  செல்லும் அவருக்கு நம் அஞ்சல் மூன்றின்  வாழ்த்துக்கள். 

நம்முடைய அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கத்தின் போராட்ட அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு  CPMG  அவர்களுக்கு  நோட்டீஸ் நகல் அனுப்பப் பட்டது.  நோட்டீஸ் நகல்  இன்று வலைத்தளத்தில் வெளியிடப்படும் .

நோட்டீஸ் நகல் நேற்றைய தினமே  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு  EMAIL  மூலம் அனுப்பப்பட்டது . கோட்ட / கிளைச் செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் எந்தவித தொய்வும் இன்றி,  எந்த ஒரு கோட்டத்திலோ அல்லது கிளையிலோ விடுதல் இன்றி போராட்டம்   நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டுகிறோம். 

போராட்ட  சுற்றறிக்கை நகலை SAVINGRAM  உடன்  மாநிலச் செயலர்களுக்கும்  CPMG  TN   அவர்களுக்கும் கண்டிப்பாக அனுப்பிட வேண்டுகிறோம். ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை  EMAIL  மூலம்  மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.  EMAIL  முகவரி : aipeup3tn@gmail.com.  போராட்ட வாழ்த்துக்கள் !