கோட்ட கிளை செயலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
மிக விரைவில் RJCM கூட்டம் குறித்த முன் ஆய்வு நடைபெற இருக்கிறது அதில் முன்வைதிட்ட கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து விவரம் உடனடியாக தேவைப்படுகிறது
1.எத்தனை B பிரிவு அஞ்சலகங்கள் தனியாக ஒருவரால் நிர்வகிக்கப்படுகிறது அந்த அலுவலகத்தின் பெயர் விவரங்கள் மற்றும் அந்த அலுவலகங்களில் ஆதார் பணி செய்திட வற்புறுத்தப் படுகிறதா என்ற விவரத்தை தெரியப்படுத்தவும்
2.எத்தனை தபால்காரர்களுக்கு/ ஓய்வு பெற்ற தபால்காரர்களுக்கு 1_1 _1996 முதல் ஊதிய மறு நிர்ணயம் செய்யப்படவில்லை எத்தனை கணக்கு அலுவலகத்தில் தாமதப்படுத்த படுகிறது விவரங்களை தலைமை அஞ்சலக கணக்கு பிரிவில் கேட்டறிந்து மாநிலச் சங்கத்திற்கு தெரியப்படுத்தவும்
3.எத்தனை ஊழியருக்கு TBOP/BCR க்கு பயிற்சி காலம் இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற விவரங்களை அனுப்பி வைத்திடவும்
4. பல கோட்டங்களில் NSP1 NSP2 சரிவர இயங்குவதில்லை என்பது உண்மை எத்தனை அலுவலகத்தில் NSP2 இல்லை அல்லது செயலாற்ற வில்லை எத்தனை அலுவலகத்தில் இன்னும் 256 kbps அளவில் நெட்வொர்க் உள்ளது ஒரு நபர் தனிநபர் அலுவலகங்களில் குறைந்த பட்சம் 512 kbps இருக்கிறதா LSG க்கு மேற்பட்ட அலுவலகங்களில் 1mbps அளவில் உள்ளதா என்பதனை ஒவ்வொரு கோட்டமும் ஒரு பட்டியலாக தயார் செய்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி டவும்
5. NPS திட்டத்தின் கீழ் எந்த கோட்டத்திலாவது குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படாமல் இருக்கிறதா ? அப்படி என்றால் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்
6.கணினிகளில் ஏதேனும் outdated ஆக உள்ளதா? அது scrap கமிட்டி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதா? இருந்தால் அதன் விவரங்கள் தெரிய படுத்தவும்
7. APAR இல் very good இல்லாமல் MACP கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் கோட்டத்தில் எத்தனை பேர் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களின் இன்றைய நிலை என்ன ? 2017 ன் APAR ல் very good இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை மாநிலச் சங்கத்திற்கு தெரியப்படுத்தவும்
8.கோட்ட. கிளை மட்டத்தில் கடைசியாக நடைபெற்ற மாதாந்திர பேட்டியின் விவரங்கள் மற்றும் மினிட்ஸ் நகல் ஒன்றினை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும் கடந்த மாதாந்திர பேட்டி என்று நடைபெற்றது மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை என்றால் எத்தனை மாதங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்தவும்
கோட்ட கிளை செயலர்கள் மேற்கண்ட விவரங்களை உடனடியாக மாநில சங்கத்திற்கு இமெயில் மூலம் அல்லது கடிதம் மூலம் அனுப்பி வைத்திடவும் இந்த விவரங்கள் 16\ 9\ 2020 க்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்
A.வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் மூன்று