Thursday, September 24, 2020

Meeting with DPS HQ

தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம் 

இன்று 24/9/20  CPMG அவர்களுக்கும். PMG CCR அவர்களுக்கும் நேரடியாக கடிதம் கொடுத்து  DPS HQ அவர்களையும் AD Staff அவர்களையும் சந்தித்தோம் பல பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தோம் மற்றும் தென்மண்டல PMG  மேற்கு மண்டல PMG மத்திய மண்டல PMG இவர்களுக்கு பல கடிதங்கள் தபால் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது 

அது கீழே உங்கள் பார்வைக்கு மேலும் DPS HQ அவர்களை சந்தித்து பல பிரச்சினைகளை பற்றி விவாதித்தோம் முக்கிய பிரச்சனையான 

1. 5/12/2018 உத்தரவுபடி General line LSG  unfilled HSG II vacancy( upgrade  HSG II,),LSG யாக எடுத்துக் கொண்டது போல Accounts line லும்  எடுத்துக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே கடிதம் கொடுத்து இருந்தோம் மீண்டும் இன்று கடிதம் கொடுத்து வலியுறுத்தி பேசினோம் அதை ஏற்றுக்கொண்டு உத்தரவிடுவதாக உறுதி அளித்துள்ளார் இன்று அல்லது நாளைஅக்கவுண்ஸ் லைன் LSG வரும் என.                                     எதிர்பார்க்கப்படுகிறது

2. GDS தோழர்களின் பயிற்சிக்கான  காலத்திற்க்கு கொடுக்கப்படும் incidental charges         16/5/2013 இயக்குனரகத்தின் உத்தரவை மீறி  குறைத்து கொடுக்கப்படுவதை  சுட்டிக்காட்டி விவாதித்தோம் இது சம்பந்தமாகவும் உத்தரவிடுவதாக உறுதி அளித்துள்ளார்

முக்கிய செய்தி

தமிழகம் முழுதும் பல ஊழியர்கள் APAR வெரிகுட் பென்ச் மார்க்கால் MACP கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்  இதுபற்றி மாநிலச் சங்கம் பல கடிதங்கள் CPMG அவர்களிடத்தில் கொடுத்து விவாதித்து வந்துள்ளோம் விரைவில் நடைபெற இருக்கும் RJCM கூட்டத்திலும் subject வைக்கப்பட்டுள்ளது இன்று DPS HQ அவர்களிடம் பேசும்பொழுது  தமிழகத்தில் உள்ள அனைத்து APAR சம்பந்தமான பிரச்சினைகளையும் தீர்வு காண்பதற்கு குழு அமைக்கப்பட்டு அவை இயக்குனரகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது அங்கிருந்து வந்த பிறகு இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று உறுதி அளித்தார் APAR பிரச்சினை சம்பந்தமாக அஞ்சல் மூன்று மாநில சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக CPMG அவர்களும் DPS HQ அவர்களின்  பெரு முயற்சியின் காரணமாக விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்

கோட்ட  கிளை செயலர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் APAR சம்பந்தமாக DPS  க்கு அப்பீல் செய்து ரிஜக்ட் செய்து இருந்தாலும் PMG அவர்களுக்கு அப்பீல் செய்து அதன் விவரத்தை மாநிலச் சங்கத்திற்கு தெரியப்படுத்துங்கள் இது சம்பந்தமாக ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் மாநில சங்கத்தை தொடர்பு கொள்ளவும்

A.வீரமணி 
மாநிலச் செயலர்.              
 அஞ்சல் மூன்று