🚩🚩🚩இன்று 14/9/20 DPS HQ அவர்களை சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தோம். மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மற்றும் பாண்டிச்சேரி கோட்ட முன்னணி தோழர் தனஞ்செழியன் தோழர் கமலேசன் உடன் இருந்தனர்
1. தெற்கு மண்டலத்திற்கு புதிய கணினிகள் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தோம் அப்பொழுது காலாவதியான கணினிகளுக்கு மாற்று கணினி வழங்குவதில் எந்த ஒரு தடையும் இல்லை எனவே தெற்கு மண்டலத்தில் உள்ள கோட்டங்களில் தற்பொழுது உபயோகப்படாத கணினிகளை கண்டம் செய்து புதிய புரோபோசல் அனுப்பினால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இந்த மாதம் ஒரு கோடியே 11 லட்சம் சேங்ஷன் செய்யப்பட்டு 240க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் சென்னை மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மீண்டும் இயக்குனரகத்தில் இருந்து ஒரு கோடியே 29 லட்சம் இரண்டு தவணையாக வர இருப்பதாகவும் விரைவில் தென் மண்டலத்திற்கும் கம்ப்யூட்டர் பிரச்சினை குறித்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்
2. அடுத்ததாக SMR குறித்து ஆலோசித்த போது அதை தயார் செய்து அனுப்புவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தோம் டைரக்டர் ஏட்டில் கலந்து ஆலோசித்து விட்டு அது குறித்து CPMG அவர்கள் இடத்தில் ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
3.சென்னை நகர மண்டலத்தில் அரக்கோணம் தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலக கட்டிட பிரச்சனைகள் குறித்து. AD mail அவர்களிடம் விவாதிக்கப்பட்டது அப்போது கூடிய விரைவில் அந்த கட்டிட பிரச்சனை சரி செய்யப்படும் என்று நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது கூடுதலாக செங்கல்பட்டு கோட்டத்தில் திருக்கழுக்குன்றம் அஞ்சலக கட்டிட பிரச்சனைகள் குறித்தும் சின்ன காஞ்சிபுரம் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது
4. அடுத்ததாக பாண்டிச்சேரி கோட்டத்தில் தோழர் இளங்கோ அவர்களின் HBA குறித்து சென்னை நகர ஆக்கவுண்ட்ஸ் அலுவலரிடம் விவாதிக்கப்பட்டது கூடிய விரைவில் அவருக்கு HBA வழங்க ஆவன செய்யப்படும்.
A. வீரமணி
செயலர்
அஞ்சல் மூன்று
தமிழ் மாநிலம்.