Monday, April 16, 2012

நாகை அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 40 ஆவது கோட்ட மாநாடு .

நாகை அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 40  ஆவது கோட்ட மாநாடு 
கடந்த 15.04.2012  அன்று நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக 
நடைபெற்றது. 

காலை 10.30  மணி அளவில் கோட்டத் தலைவர்   தோழர்.T . சங்கரவடிவேலு அவர்கள் தலைமையில்  பொருள் ஆய்வுக் கூட்டம் துவங்கியது . ஈராண்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு ஒப்புதலுக்குப் பின் நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி  நடைபெற்றது.  கீழ்கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டுக்கான
நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தலைவர்                     :  தோழர். T. சங்கரவடிவேலு 
கோட்டச் செயலர்   :  தோழர். S. மீனாட்சி சுந்தரம் 
நிதிச் செயலர்            :  தோழர். S.  மாரிமுத்து 

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் 
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 

மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சி வெகு சிறப்பாக 
நடைபெற்றது.  பொது அரங்கின் தலைவராக நாகை முன்னாள்  கோட்டச் செயலர் தோழர்  S. கோவிந்தராசு அவர்கள் தலைமை ஏற்க தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரவேற்புரையுடன்  பொது அரங்கு துவங்கியது. 

பொது அரங்கில் நாகை முன்னாள் கோட்டச் செயலரும் , கோட்டச் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான மூத்த தோழர் S. ராஜ்மோகன் , அஞ்சல் மூன்றின் 
மாநிலச் செயலர் தோழர். J.R. , AIPEU GDS NFPE  சங்கத்தின் அகில  இந்திய துணைப் பொது செயலர்   தோழர் R.  தனராஜ் , மத்திய மண்டலச் செயலர் 
தோழர்.A.  மனோகரன், P 4   கோட்டச் செயலர் தோழர்.  M.செல்வராஜ், AIPEU GDS NFPE  கோட்டச் செயலர் தோழர். M. கல்விச் செல்வன் ,  திருவாரூர் P 3 
கிளைச் செயலர் தோழர்.K. ராமலிங்கம் , மன்னை P 3  கிளைச்  செயலரும் 
தஞ்சை கோட்ட பொறுப்பு செயலருமான தோழர். காந்தி  ஆகியோர் கலந்து கொண்டு  வாழ்த்திப் பேசினார். 

மாநிலச் செயலர் தோழர். J.R.  மற்றும்    AIPEU GDS NFPE  DY.GENL. SEC.   தோழர்.R. தனராஜ் ஆகியோர் தமது சிறப்பு உரையில்   பாதிக்கப்பட்டுள்ள 
GDS  தோழர்களின்  வாழ்க்கையில் புத்தொளி தந்திட  NFPE  இயக்கத்தின் 
இணைப்பு சங்கமாக AIPEU GDS NFPE  சங்கம் துவக்கப் பட்டுள்ளதை வரவேற்று அதன்  தேவை  மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.  இது  GDS ஊழியர் மத்தியில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.  இறுதியாக நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.