Wednesday, April 11, 2012

LGO INDUCTION TRAINING

ஏற்கனவே கடந்த 20.03.2012  அன்று  நம் மாநிலச் சங்கத்தின் மூலம்
CPMG , TN  அவர்களிடம்  எழுத்தராகப் பதவி உயர்வு பெற்ற அனைத்து
LGO  ஊழியருக்கும் , நேரடி நியமன எழுத்தர் போல உடன் பணி நியமன
ஆணை  வழங்க வேண்டி கடிதம் அளித்துப் பேசியிருந்தோம். கடிதத்தின் நகல் நமது வலைத்தளத்தில்  ஏற்கனவே பிரசுரித்திருந்தோம்.

DG  அலுவலக உத்திரவு படி கடந்த ஆண்டிற்கு மட்டுமே அவ்வாறு
பணி நியமன ஆணை வழங்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் , தற்போது
அவ்வாறு செய்திட தெளிவான உத்திரவு இல்லை என்றும் , எனவே
விரைவில்  அவர்களுக்கான  பணிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்
என்றும்  தற்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி இன்று   CPMG  அலுவலகத்திலிருந்து நமது
மாநிலச் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.  அதன் படி
எதிர்வரும் 23.04.2012   முதல்   அனைத்து LGO - PA  களும்
மதுரை PTC இல்  பணிப் பயிற்சிக்கு அனுப்பப் படுவார்கள்
என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.

அவர்களுக்கு மாநிலச்சங்கத்தின்   வாழ்த்துக்கள்.