Sunday, March 6, 2022

கடலூர் கோட்டத்தின் 45 வது கோட்ட மாநாடு

கடலூர் கோட்டத்தின் 45வது மாநாடு 06/03/2022 அன்று கடலூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

நமது சங்கத்தின் அகில இந்திய மாபெருந்தலைவர் NCA மற்றும் 45வது மாநாட்டு நினைவு கல்வெட்டை  மாநில அமைப்புச் செயலர் மற்றும் பாண்டிச்சேரி கோட்டச் செயலர் தோழர் M.வாசு திறந்து வைக்க மாநாட்டை  நமது தோழியர். L.R.சாந்தி அவர்கள்  தேசியக்கொடி  ஏற்றியும் மண்டல செயலர் தோழர் C. சசிகுமார் அவர்கள் சம்மேளன கொடி ஏற்றியும் மாநாட்டை துவங்கி வைத்தனர்.

தோழர் C.அறிவரசு அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். தோழர்.R.ஜெயகுமார் அவரகள் வரவேற்புரை நிகர்தினார். செயலர் கிருஷ்ணகுமார்  அவர்கள் ஈராண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.  பின்னர் பொருளாளர் தோழர்.K.சுந்தர் அவர்கள் 2020-2022 வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்கள்.அதனை ஏனைய தோழர்கள் ஒப்புதல் வழங்கினர்.

நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் உறுப்பினர், தற்பொழுது AD, BD southern region திருமதி. கலைவாணி அவர்கள் நமது 45வது கோட்ட மாநாட்டு தோழர்.R.ஞானசம்பந்தன் நினைவரங்க செய்தி அறிந்து தோழர் ஞானசம்பந்தன் அவர்களுக்காக  நினைவு கவிதை ஒன்றை எழுதி அனுப்பினார்கள். மிகவும் அருமையாக அன்னாரது நினைவை போற்றும் வகையில் இருந்தது.

அதனை தொடர்ந்து  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

கோட்டத் தலைவராக தோழர் P ரவி அவர்களும்,


கோட்டச் செயலராக தோழர் S கிருஷ்ணகுமார் அவர்களும்,


நிதிச்செயலராக தோழர்  C ஸ்ரீமுருகன் அவர்களும் 

 

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


  மாநாட்டில் மாநிலச் அமைப்பு செயலர் தோழர் M. வாசு, மண்டல செயலர் தோழர். Ç.சசிகுமார், மாநில தணிக்கையாளர் J.சசிகுமார் , விருத்தாச்சலம் கோட்ட செயலர் தோழர். முரளி, சீர்காழி கிளை செயலர் தோழர் T.கோவிந்தராஜன்  சிறப்புறை வாழ்த்துறை
 வழங்கினர்.

மாநாட்டில் நமது தோழர்கள்.காமராஜ், கார்த்திகேயன் மற்றும் சிலர் நெட்வொர்க், system issue போன்றவற்றை தெரிவித்தனர். அதற்கு மண்டல செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர்   RO வின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார்கள்.

தோழர்கள் அனைவருக்கும் மாநாட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.தோழர் ஶ்ரீமுருகன் அவர்கள் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

 புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.