Friday, March 25, 2022

Four Monthly Meeting

அன்பு தோழர்களுக்கு வணக்கம் .

மாநில நிர்வாகத்துடன் நான்கு மாதத்திற்கான பேட்டி இன்று 24/3/2022  நடைபெற்றது. இதில் அஞ்சல் மூன்று  சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தோழர் A. வீரமணி மற்றும் மாநில நிதி செயலர் தோழர்             A . கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் அதற்கான பதில்களும் உங்கள் பார்வைக்கு.

1. ATM களுக்கு பாதுகாப்பு வழங்கிட முறையான பாதுகாப்பு வசதிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றிட வேண்டி கேட்டுக் கொண்டோம். தற்போது ATMகள் அனைத்தும் IPPB பராமரிப்பு பண்ண இருப்பதால் இதுகுறித்து மேலும் முடிவெடுக்க சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது.

2. காலியாக உள்ள LSG.HSG II .HSG I உயர்பதவிகளில் பணியாற்றும்போது Officiating Pay மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி Vol IV 27 மற்றும் 50 இவற்றை வலியுறுத்தி மாநில நிர்வாகத்தால் 19.5.2021  வெளியிடப்பட்டுள்ள அந்த ஆணையில் FR35 சேர்த்து அமுல் படுத்துவது குறித்து  கேட்டுக்கோண்டோம்.  AAOக்கள் AOவாக officiate  செய்திட directorate  ஆல்  வெளியிடப்பட்டுள்ள
 26/3/2021 ஆணையை ஒத்து விதி FR35 அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டோம். இதனை மீண்டும் ஒரு முறை  பரிசீலித்து உரிய ஆணை ஊழியர்களுக்கு சாதகமாக வெளியிடப்படும்  என்று CPMG அவர்கள் தெரிவித்தார்கள்.

3. காலியாக உள்ள HSG II மற்றும் HSG I  பதவிகளில் Adhoc முறையில் பணி அமற்த்திட நான்கு மாதங்கள் வரை மாநிலம, மண்டல நிர்வாகங்கள் அமர்த்தலாம் என்ற விதிகளை சுட்டிக்காட்டி நம்முடைய ஊழியர் தரப்பில் இதனால் ஏற்பட உள்ள பலன்களையும் விரிவாக விவாதித்தோம். இதன் மீது மீண்டும் பரிசீலனை செய்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாகவும் CPMG அவர்கள் கூறினார்.

4. LSG பதவி உயர்வு பெற்ற தோழர்கள் CO/ RO வில் பணி புரிவதை சுட்டிக்காட்டி அவர்களை operative  பணிகளுக்கு திருப்பி அனுப்பிய வேண்டுகோள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதை  தான் அறிந்து உள்ளதாகவும் கூடிய விரைவில் இது தீர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

5. ஆதார் பணிகளை பார்த்திட இதுவரை போதுமான அளவிற்கு MTS மற்றும் GDS தோழர்கள் அடையாளம் காணப்பட வில்லை என்பதையும் ஆதார் பணிகளுக்கு இன்சென்டிவ் ரத்து செய்யப்பட்டுள்ளதை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும்‌ கேட்டுக்கொண்டோம். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே இயக்குனரகத்தின்  மாநில அளவில் ஆதார் பணிகளை outsource செய்திட அக்டோபர் 2021ஆணையை  சுட்டிக்காட்டி மிக பெரிய அலுவலகங்களில் மட்டுமாவது இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அடுத்த நிதி ஆண்டில் இது குறித்து ஆவன செய்வதாக CPMG அவர்கள் உறுதியளித்தார்கள்.

6. சாதி சான்றிதழ் சரிபார்ப்பு தாமதத்தை சுட்டிக்காட்டி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளது. இது தற்போது நமது தொடர் அழுத்தம் காரணமாக ஓய்வு பெற்றஅனைத்து  தோழர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் முறையாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக கூறினார் .மேலும் சாதி சான்றிதழ் சரிபார்க்க 19 .3 .2021 ஆணையை சுட்டிக்காட்டி அனைத்து மண்டல அலுவலகத்திற்க்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது மீண்டும் உரிய கவனம் செலுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்குப் பிறகும் ஊழியர்கள் ஏதேனும் பாதிப்பு அடைந்து உள்ளார்கள் என்பதை விவரமாக தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  CPMG  அவர்கள் கூறினார்கள்.

7.டெய்லர்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய ஊழியர் குடியிருப்பில் உள்ள பிரச்சனைகள் உடனடியாக சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் நமக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவீட்டில் முக்கியத்துவம் அடிப்படையில்  பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படுவதாகவும் இனி வரும் காலங்களிலும் இது தொடரும் என்ற உறுதியையும் அளித்தார். மேலும் திருவொற்றியூர் அஞ்சலகம் மற்றும் தூத்துக்குடி ஊழியர் குடியிருப்பு கொடைக்கானல் அஞ்சலக குடியிருப்பு உதகமண்டலம் அஞ்சலக ஊழியர் குடியிருப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இவற்றுக்கு தீர்ப்பதற்கு ஆவண செய்யப்படும் என்ற உறுதி அளித்தார் கட்டிட பிரச்சனைகளில் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் பட்டியலிட்டு தொழிற்சங்கங்களுக்கு அளிப்பதாக கூறியுள்ளார். அவை வந்தவுடன் அவையும் பிரசுரிக்கப்படும்.

8. டார்கெட் பிரச்சனையில் ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருவதையும் அந்தந்த பகுதியில் உள்ள சில அதிகாரிகள் ஊழியர்களை இழிவாக நடத்துவதையும் அந்த போக்கினை உடனடியாக மாற்றிட வேண்டும் என்ற நமது வேண்டுகோளையும் கூறினோம்‌ அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட்டால் உரிய அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அதிகாரிகள் அனைவரையும் ஏப்ரல் முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு உரிய முறையில் டார்கெட்டை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விவரமாக பயிற்சி  வழங்கப்படும். ஊழியர்களை அதிகாரிகள் இழிவாக  பேசுவதை மாநில நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்ற கருத்தையும் CPMG  அவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.
டார்கெட் அடையவேண்டும் என்பதற்காக கணக்குகள் பிரித்து போடச்சொல்லி நிர்ப்பந்தம் பண்ணுவதை குறிப்பிட்டு கூறினோம் இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம் எனினும் அடுத்த நிதி ஆண்டில் ஒரு தீர்வு இதற்கு கிடைக்கும் என்று உறுதி கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு மாத பேட்டி மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமாகவும் பிரச்சனைகளை எட்டுவதற்கு உதவியாகவும் இருந்தது என்பதில் ஐயம் ஏதும் இல்லை .நமது தரப்பு வாதங்களை எவ்வித இடையூறும் இன்றி பொறுமையாக நிதானமாக கேட்டு அதனை உள்வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்த மாநில நிர்வாகத்திற்கு  குறிப்பாக நம்முடைய CPMG                          திரு V. செல்வகுமார் அவர்களுக்கு நமது அஞ்சல் மூன்று மாநில சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

A.வீரமணி
மாநில செயலாளர்
அஞ்சல் மூன்று