Sunday, April 24, 2022

List of office bearers elected in AIPEU Gr- C AIC held at Punjab

President :


 Com. A Veeramani Tamilnadu


Working President :


1. G Janakiram.Karnataka

 2..Surendra palav, Maharashtra


Vice president :


1. Manjit Singh. Punjab   

2. M Asha,.  Kerala


 General Secretary :

 Janardan Majumdar, West Bengal


Deputy General Secretary  :

P K Muralidharan , Kerala


Assistant General Secretary  :


 1. A Kesavan,  Tamilnadu

2. Naresh Gupta, Hariyana

 3. Vinay Joshi.Rajasthan


Treasurer :

Parminder Pal Singh.Delhi


Assistant Treasurer :

Rakesh Kumar , Delhi


Organising Secretary :

1. A Shravankumar, Telengana

2.  Indrajit Pandey, Jharkand

 3. R N Saratkumar,  Andhra Pradesh


இவர்களுடன் நமது தமிழ் மாநிலச் சங்கம் சார்பில் கீழ்க்கண்ட தோழியர்கள் அகில இந்திய மகிளா கமிட்டி உறுப்பினர்கள் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


1.தீபா, சேலம் கிழக்கு கோட்டம்

2.  கோலம்மாள்,

அண்ணா சாலை கிளை.

3. சாந்தி, கோவை

Sunday, April 3, 2022

காரைக்குடி கோட்டத்தின் 41வது கோட்ட மாநாடு

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


 காரைக்குடி கோட்டத்தின் 41வது கோட்ட மாநாடு 3.4.22 காலை 10 மணிக்கு தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் D. சாமுவேல் தேவ சித்தம் தலைமையில் தேவேந்திரர் மகாலில்  மாநாடு நடைபெற்றது .


தோழர் A.ஜான்சன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  ஈராண்டறிக்கையை கோட்டச் செயலர் K.A.சேதுஅரசன்  அவர்கள்   சமர்ப்பித்தார். நிதிச் செயலர்  A.ஜான்சன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.


 புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


கோட்டத் தலைவர் :D. சாமுவேல் தேவசித்தம்


 கோட்டச் செயலர்:K. காளிதாஸ்


 நிதிச் செயலர்: ஸ். முத்துக்குமார்


 அதன் பின்பு தென்மண்டல செயலர் தோழர் R. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


 மதுரை கோட்ட செயலாளர் S.நாராயணன் மதுரைகோட்ட பொருளாளர்A. பிச்சை முன்னாள் கோட்டச் செயலர் ரமேஷ் முன்னாள் கோட்ட சங்க நிர்வாகிகள் முத்து ராக்கு தங்கவேலு  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 

A.Veeramani

Circle Secretary

AIPEU Gr-C, TN Circle 




 


 


Tuesday, March 29, 2022

வேலைநிறுத்தம் வெற்றி

 அன்பு தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம்

இன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்த அனைத்து தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் நாளையும் முழுமையாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்

 கோட்ட கிளைகளில் வேலைநிறுத்தம் வெற்றி பெற உழைத்த JCA வை சார்ந்த அனைத்து கோட்ட கிளை செயலர்களுக்கும் அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் மனமார்ந்த வீர வாழ்த்துக்கள்

 A.வீரமணி
மாநிலச் செயலர்.                

அஞ்சல் மூன்று

Friday, March 25, 2022

Four Monthly Meeting

அன்பு தோழர்களுக்கு வணக்கம் .

மாநில நிர்வாகத்துடன் நான்கு மாதத்திற்கான பேட்டி இன்று 24/3/2022  நடைபெற்றது. இதில் அஞ்சல் மூன்று  சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தோழர் A. வீரமணி மற்றும் மாநில நிதி செயலர் தோழர்             A . கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் அதற்கான பதில்களும் உங்கள் பார்வைக்கு.

1. ATM களுக்கு பாதுகாப்பு வழங்கிட முறையான பாதுகாப்பு வசதிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றிட வேண்டி கேட்டுக் கொண்டோம். தற்போது ATMகள் அனைத்தும் IPPB பராமரிப்பு பண்ண இருப்பதால் இதுகுறித்து மேலும் முடிவெடுக்க சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது.

2. காலியாக உள்ள LSG.HSG II .HSG I உயர்பதவிகளில் பணியாற்றும்போது Officiating Pay மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி Vol IV 27 மற்றும் 50 இவற்றை வலியுறுத்தி மாநில நிர்வாகத்தால் 19.5.2021  வெளியிடப்பட்டுள்ள அந்த ஆணையில் FR35 சேர்த்து அமுல் படுத்துவது குறித்து  கேட்டுக்கோண்டோம்.  AAOக்கள் AOவாக officiate  செய்திட directorate  ஆல்  வெளியிடப்பட்டுள்ள
 26/3/2021 ஆணையை ஒத்து விதி FR35 அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டோம். இதனை மீண்டும் ஒரு முறை  பரிசீலித்து உரிய ஆணை ஊழியர்களுக்கு சாதகமாக வெளியிடப்படும்  என்று CPMG அவர்கள் தெரிவித்தார்கள்.

3. காலியாக உள்ள HSG II மற்றும் HSG I  பதவிகளில் Adhoc முறையில் பணி அமற்த்திட நான்கு மாதங்கள் வரை மாநிலம, மண்டல நிர்வாகங்கள் அமர்த்தலாம் என்ற விதிகளை சுட்டிக்காட்டி நம்முடைய ஊழியர் தரப்பில் இதனால் ஏற்பட உள்ள பலன்களையும் விரிவாக விவாதித்தோம். இதன் மீது மீண்டும் பரிசீலனை செய்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாகவும் CPMG அவர்கள் கூறினார்.

4. LSG பதவி உயர்வு பெற்ற தோழர்கள் CO/ RO வில் பணி புரிவதை சுட்டிக்காட்டி அவர்களை operative  பணிகளுக்கு திருப்பி அனுப்பிய வேண்டுகோள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதை  தான் அறிந்து உள்ளதாகவும் கூடிய விரைவில் இது தீர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

5. ஆதார் பணிகளை பார்த்திட இதுவரை போதுமான அளவிற்கு MTS மற்றும் GDS தோழர்கள் அடையாளம் காணப்பட வில்லை என்பதையும் ஆதார் பணிகளுக்கு இன்சென்டிவ் ரத்து செய்யப்பட்டுள்ளதை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும்‌ கேட்டுக்கொண்டோம். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே இயக்குனரகத்தின்  மாநில அளவில் ஆதார் பணிகளை outsource செய்திட அக்டோபர் 2021ஆணையை  சுட்டிக்காட்டி மிக பெரிய அலுவலகங்களில் மட்டுமாவது இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அடுத்த நிதி ஆண்டில் இது குறித்து ஆவன செய்வதாக CPMG அவர்கள் உறுதியளித்தார்கள்.

6. சாதி சான்றிதழ் சரிபார்ப்பு தாமதத்தை சுட்டிக்காட்டி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளது. இது தற்போது நமது தொடர் அழுத்தம் காரணமாக ஓய்வு பெற்றஅனைத்து  தோழர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் முறையாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக கூறினார் .மேலும் சாதி சான்றிதழ் சரிபார்க்க 19 .3 .2021 ஆணையை சுட்டிக்காட்டி அனைத்து மண்டல அலுவலகத்திற்க்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது மீண்டும் உரிய கவனம் செலுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்குப் பிறகும் ஊழியர்கள் ஏதேனும் பாதிப்பு அடைந்து உள்ளார்கள் என்பதை விவரமாக தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  CPMG  அவர்கள் கூறினார்கள்.

7.டெய்லர்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய ஊழியர் குடியிருப்பில் உள்ள பிரச்சனைகள் உடனடியாக சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் நமக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவீட்டில் முக்கியத்துவம் அடிப்படையில்  பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படுவதாகவும் இனி வரும் காலங்களிலும் இது தொடரும் என்ற உறுதியையும் அளித்தார். மேலும் திருவொற்றியூர் அஞ்சலகம் மற்றும் தூத்துக்குடி ஊழியர் குடியிருப்பு கொடைக்கானல் அஞ்சலக குடியிருப்பு உதகமண்டலம் அஞ்சலக ஊழியர் குடியிருப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இவற்றுக்கு தீர்ப்பதற்கு ஆவண செய்யப்படும் என்ற உறுதி அளித்தார் கட்டிட பிரச்சனைகளில் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் பட்டியலிட்டு தொழிற்சங்கங்களுக்கு அளிப்பதாக கூறியுள்ளார். அவை வந்தவுடன் அவையும் பிரசுரிக்கப்படும்.

8. டார்கெட் பிரச்சனையில் ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருவதையும் அந்தந்த பகுதியில் உள்ள சில அதிகாரிகள் ஊழியர்களை இழிவாக நடத்துவதையும் அந்த போக்கினை உடனடியாக மாற்றிட வேண்டும் என்ற நமது வேண்டுகோளையும் கூறினோம்‌ அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட்டால் உரிய அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அதிகாரிகள் அனைவரையும் ஏப்ரல் முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு உரிய முறையில் டார்கெட்டை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விவரமாக பயிற்சி  வழங்கப்படும். ஊழியர்களை அதிகாரிகள் இழிவாக  பேசுவதை மாநில நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்ற கருத்தையும் CPMG  அவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.
டார்கெட் அடையவேண்டும் என்பதற்காக கணக்குகள் பிரித்து போடச்சொல்லி நிர்ப்பந்தம் பண்ணுவதை குறிப்பிட்டு கூறினோம் இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம் எனினும் அடுத்த நிதி ஆண்டில் ஒரு தீர்வு இதற்கு கிடைக்கும் என்று உறுதி கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு மாத பேட்டி மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமாகவும் பிரச்சனைகளை எட்டுவதற்கு உதவியாகவும் இருந்தது என்பதில் ஐயம் ஏதும் இல்லை .நமது தரப்பு வாதங்களை எவ்வித இடையூறும் இன்றி பொறுமையாக நிதானமாக கேட்டு அதனை உள்வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்த மாநில நிர்வாகத்திற்கு  குறிப்பாக நம்முடைய CPMG                          திரு V. செல்வகுமார் அவர்களுக்கு நமது அஞ்சல் மூன்று மாநில சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

A.வீரமணி
மாநில செயலாளர்
அஞ்சல் மூன்று

Review of Relative Merit points for compassionate appointment

Sunday, March 20, 2022

45 வது வேலூர் கோட்ட மாநாடு



இன்று 20/3/22 வேலூர் கோட்ட மாநாடு தலைவர்          K. பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாநாட்டில்


தலைவர் தோழர் S.சுந்தர்ராஜன்


செயலர் தோழர் S.வீரன்


நிதிச் செயலர் தோழர் P.குணசேகரன்


 மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்  

 மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்
A.வீரமணி
மாநில நிதிச் செயலர் தோழர் A. கேசவன் மாநில அமைப்புச் செயலர் தோழர்      G.குருசிவம் சிறப்புரை வழங்கினார்கள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்

A.வீரமணி
மாநிலச் செயலர்  

அஞ்சல் மூன்று





 

27 வது ஆரணி கிளை மாநாடு


இன்று 20/3/22  காலை 10 மணி அளவில் ஆரணி கிளை மாநாடு தலைவர் தோழர் V.ரகுநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஈரான்டு அறிக்கை வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது புதிய நிர்வாகிகள்  

தலைவர் தோழர் V.ரகுநாதன்


 செயலர் தோழர் M.சிவகுமார்


நிதிச் செயலாளர் தோழர் E.சீனிவாசன்


மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலர் தோழர் A.கேசவன் முன்னாள் கிளைச் செயலர் தோழர் பக்தவச்சலம திருவண்ணாமலை கோட்ட தலைவர் தோழர் கனேசன்  நிதிச் செயலர் தோழர் பிரகாஷ் ஆரணி p4 கிளைச் செயலாளர் தோழர் காசி தோழர் குமார் ஆகியோர் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநில. சங்கத்தின் வாழ்த்துக்கள்

A.வீரமணி
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று



 

Saturday, March 19, 2022

திருவண்ணாமலை அஞ்சல்மூன்றின் கோட்ட மாநாடு

 19.03.2022 திருவண்ணாமலை அஞ்சல்மூன்றின் கோட்ட மாநாடு மிக சீரும் சிறப்புமாக கோட்டத் தலைவர் தோழர் அண்ணாமலை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

இதில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் வாசு, விருதாச்சலம் கோட்ட செயலாளர் தோழர் முரளி, ஆரணி கிளை செயலாளர் தோழர் சிவகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்

இதில் கோட்ட தலைவராக தோழர் L. கணேசன் அவர்களும்

கோட்ட செயலாளராக தோழர்  K.செல்வம் அவர்களும்

கோட்ட பொருளாளராக தோழர் P.பிரகாஷ் அவர்களும்


ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இவர்கள் பணி சிறக்க மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்



Wednesday, March 16, 2022

கோட்ட கிளைச் செயலர்களுக்கு

 கோட்ட  கிளைச் செயலர்களுக்கு வணக்கம்

தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் மே மாதம் 28. 29 .30 .ஆகிய தினங்களில் மதுரைமா நகரில் நடைபெற இருப்பதை அறிவீர்கள் மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்திட கிளைச் சங்கங்களின் முழுமையான ஒத்துழைப்பினை கோருகின்றேன்

இன்று ஒவ்வொரு கோட்ட கிளைகளுக்கும் மிக குறைந்த அளவில் மாநாட்டிற்கான நன்கொடை புத்தகம் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது அதனை முழுமையாக நம் தோழர்கள் மூலம் நன்கொடை பெற்று மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறேன் மிக விரைவில் தொகையினை அனுப்பி வைத்தால் அது மிக உதவிகரமாக இருக்கும் மாநாட்டு வாழ்த்துக்களுடன்

A.வீரமணி
 மாநிலச் செயலர்.              

அஞ்சல் மூன்று

Saturday, March 12, 2022

11/3/2022 PJCA சார்பாக எழும்பூர் நக்கீரன் அரங்கில் நடைபெற்ற வேலைநிறுத்த விளக்க கூட்டம்

11/3/2022 PJCA சார்பாக எழும்பூர் நக்கீரன் அரங்கில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்





Tuesday, March 8, 2022

Income Tax payable on the contribution in a PF account exceeding Rs. 5 lakh per annum w.e.f financial year 2021-22

 

Income Tax payable on the contribution in a PF account exceeding Rs. 5 lakh per annum w.e.f financial year 2021-22: CGA, FinMin O.M.

TA-3-07001/7/2021-TA-III-Part (1)/cs-8084/81
Ministry of Finance
Department of Expenditure
O/o Controller General of Accounts,
GPO Complex, E-Block, INA New Delhi.

Dated: 04.03.2022

OFFICE MEMORANDUM

Subject: Income Tax payable on the contribution in a PF account exceeding Rs. 5 lakh per annum w.e.f financial year 2021-22-reg.

Reference is invited to Department of Revenue Notification dated 31st August, 2021 and this office OM dated 25.02.2022 on the above cited subject.

2. In this regard, necessary amendments for maintaining GPF accounts have been made in Chapter 6 of Civil Accounts Manual (CAM). In accordance with the provisions contained in CAM, PAO will ensure to issue annual GPF statement in the revised format to subscribers through DDO soon after the 31st March of each year as per GPF Rules.

3. In view of the provision of the IT Act 1961 as amended, the GPF subscribers may be advised to take into account their income tax liability arising on account of interest accrued during the previous year on his taxable contributions/accumulations and deposit Advance Income Tax at applicable rates directly without waiting for the annual GPF statement issued by concerned DDO/PAO. In order to capture taxable GPF interest amount by DDO, PFMS have also developed necessary functionality. The requisite information to compute GPF interest is also available with individual concern in terms of annual statement of previous year and details of subscriptions and refund through monthly pay slip. In case of any difficulty being faced by subscribers, interest calculation on this account may be got it checked from PAO.

4. All Pr. CCAs/CCAs/CAs (IC) of Ministries/Departments are requested to advise their PAOs to extend assistance to subscribers, if required, so as to facilitate them to be able to deposit income tax by due date.

(Ashish Kumar Singh)
Dy. Controller General of Accounts

Source: Finmin

Sunday, March 6, 2022

ஆத்தூர் 25-வது கிளை மாநாடு

ஆத்தூர் 25-வது கிளை மாநாட்டில் 


தலைவராக தோழர்.பாலுசாமி
செயலராக தோழர்.கேசவானந்த பாரதி
 நிதிசெயலராக தோழர்.சதீஸ்வரன் 

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 

A.Veeramani

Circle Secretary

AIPEU Gr-C, TN Circle

கடலூர் கோட்டத்தின் 45 வது கோட்ட மாநாடு

கடலூர் கோட்டத்தின் 45வது மாநாடு 06/03/2022 அன்று கடலூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

நமது சங்கத்தின் அகில இந்திய மாபெருந்தலைவர் NCA மற்றும் 45வது மாநாட்டு நினைவு கல்வெட்டை  மாநில அமைப்புச் செயலர் மற்றும் பாண்டிச்சேரி கோட்டச் செயலர் தோழர் M.வாசு திறந்து வைக்க மாநாட்டை  நமது தோழியர். L.R.சாந்தி அவர்கள்  தேசியக்கொடி  ஏற்றியும் மண்டல செயலர் தோழர் C. சசிகுமார் அவர்கள் சம்மேளன கொடி ஏற்றியும் மாநாட்டை துவங்கி வைத்தனர்.

தோழர் C.அறிவரசு அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். தோழர்.R.ஜெயகுமார் அவரகள் வரவேற்புரை நிகர்தினார். செயலர் கிருஷ்ணகுமார்  அவர்கள் ஈராண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.  பின்னர் பொருளாளர் தோழர்.K.சுந்தர் அவர்கள் 2020-2022 வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்கள்.அதனை ஏனைய தோழர்கள் ஒப்புதல் வழங்கினர்.

நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் உறுப்பினர், தற்பொழுது AD, BD southern region திருமதி. கலைவாணி அவர்கள் நமது 45வது கோட்ட மாநாட்டு தோழர்.R.ஞானசம்பந்தன் நினைவரங்க செய்தி அறிந்து தோழர் ஞானசம்பந்தன் அவர்களுக்காக  நினைவு கவிதை ஒன்றை எழுதி அனுப்பினார்கள். மிகவும் அருமையாக அன்னாரது நினைவை போற்றும் வகையில் இருந்தது.

அதனை தொடர்ந்து  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

கோட்டத் தலைவராக தோழர் P ரவி அவர்களும்,


கோட்டச் செயலராக தோழர் S கிருஷ்ணகுமார் அவர்களும்,


நிதிச்செயலராக தோழர்  C ஸ்ரீமுருகன் அவர்களும் 

 

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


  மாநாட்டில் மாநிலச் அமைப்பு செயலர் தோழர் M. வாசு, மண்டல செயலர் தோழர். Ç.சசிகுமார், மாநில தணிக்கையாளர் J.சசிகுமார் , விருத்தாச்சலம் கோட்ட செயலர் தோழர். முரளி, சீர்காழி கிளை செயலர் தோழர் T.கோவிந்தராஜன்  சிறப்புறை வாழ்த்துறை
 வழங்கினர்.

மாநாட்டில் நமது தோழர்கள்.காமராஜ், கார்த்திகேயன் மற்றும் சிலர் நெட்வொர்க், system issue போன்றவற்றை தெரிவித்தனர். அதற்கு மண்டல செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர்   RO வின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார்கள்.

தோழர்கள் அனைவருக்கும் மாநாட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.தோழர் ஶ்ரீமுருகன் அவர்கள் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

 புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.




Lapses raised by F&C Audit on failure to implement codified Internal Control by Tamilnadu Circle against prevention of Fraudulent Activities in Department of Posts led to high value frauds





 

திருவாரூர் கிளையின் 25 வது கிளை மாநாடு

06.03.2022 அன்று நடந்த திருவாரூர் கிளையின் 25 வது கிளை மாநாட்டில்


தலைவராக தோழர் K செல்வம் அவர்களும்

கோட்டச்செயலராக தோழியர் R சரஸ்வதி அவர்களும்

 நிதிச்செயலராக தோழியர் S கவிதா அவர்களும் 

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 

A.Veeramani

Circle Secretary

AIPEU Gr-C, TN Circle


Tuesday, March 1, 2022

Homage to Com M Krishnan, ex SG NFPE & Confederation on the occasion of first death anniversary


On his first death anniversary, we pay homage to our respected leader, our guide Com M KrishnanKrishnan, ex SG NFPE & Confederation. It is still unbelievable that Com Krishnan is no more with us. His commitment to ideology, his devotion to organisational duty, affection to employees  and hard labour in building up organisations amongst middle class employees will be remembered forever. Even in acute corona period he worked hard and selflessly for mass movement and got infected. In a middle class organisation like ours, it is really difficult to fill up the vacuum created by his untimely departure. That’s  why we have to develop collective functioning and strengthen the centre and commom platform of all organisations like  Confederation ( and it’s all affiliates)  where he spent final years of his life. In every speech he delivered, he used to call upon us to build a class oriented militant organization. To fulfill his dream, we should move further aiming at this objective with full conviction. We can not but salute his endeavour in strike campaigns also to make all the Strikes grand success, in his time. So when we are on the way to observe country wide General Strike on 28-29 March, we have great scope to extend our profound reverence and highest honour to Com M Krishnan by undertaking continuous, intense and effective campaigning and finally make the Strike an unprecedented success. 


Red Salute to Com M Krishnan
Com Krishnan amar rahe.

Tuesday, February 22, 2022

40 மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

 40  மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு


இன்று 20/2/2022 தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் மதுரை கோட்டத்தின் தலைவரும் மதுரை மண்டல செயலாளர் அருமை தோழர் R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில்  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
மதுரை கோட்டச் செயலர் தோழர் S.நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார்

20 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது இம்மாநாட்டிற்கு மண்டல செயலரும் மதுரை கோட்ட தலைவருமான தோழர் R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்பு குழு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்

பொதுக்குழுவின் உறுப்பினர்களில் பலர் அவரவர் கருத்துக்களை எடுத்துக் கூறினர் மாநாடு சிறப்பான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர் பின்பு மாநில செயலர் தோழர் A.வீரமணி மாநில தலைவர் தோழர் R.குமார் மாநில சங்க ஆலோசகர் தலைவர் K V S விளக்க உரை ஆற்ற தேனி கோட்ட செயலர் தோழர் செல்லதுரை மற்றும் அஞ்சல் நான்கு தோழர்கள் பங்கேற்றனர்

கோட்டச் செயலர் தோழர் S.நாராயணன் நன்றி கூற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது மாநாட்டு சம்பந்தமாக விரிவான அறிக்கை வரவேற்புக் குழு வெளியிடும்

தோழமையுடன்

A.வீரமணி
மாநிலச் செயலாளர் அஞ்சல் மூன்று